Tuesday, October 25, 2011

ஏழாம் அறிவு

இன்று முதல் நாள் முதல் ஷோ பார்க்க பாமங்கடை ஈரோசில் பின்னேரம் சென்று இருந்தேன். சூரியா,முருகதாஸ் படம் ஸ்ருதி தமிழில் அறிமுகம் பிரமாண்ட விளம்பரம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நேரத்துக்கே சென்றிருந்தோம். ஆனால் எதிரிபார்த்த ரசிகர்கள் வரவில்லை. படம் 3.10 மணிக்குத்தான் போட்டார்கள். 



                                                               ஆரம்பத்தில் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பல்லவ மன்னனின் 3வது மகனான போதிதர்மா அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்குகிறார் மருத்துவம்,தற்காப்பு கலைகளிலும் கலக்குகிறார். பின் தனது குருமாதா அறிவுரை கேட்டு சீனாவுக்கு பயணமாகிறார் அங்கு ஒரு கிராமத்தில் வைரஸ் நோய் பரவுகிறது போதிதர்மா தான் கற்ற மருத்துவ கலையின் மூலம் குணப்படுத்த முடியாத நோயை குணப்படுத்துகிறார். பின் அக்கிராமத்துக்கு வரும் தீயவர்களை தான் கற்ற கலைகள் மூலம் பந்தாடுகிறார். உடனே அக்கிராமத்து மக்கள் கேட்டு கொண்டதுக்கு இணங்க கலைகளை போதிக்கிறார். அவர் போதித்த கலையான ஷாலோய்ன் இன்றும் சீனாவின் முக்கிய ஒரு தற்பாதுகாப்பு கலையாகும் இன்றும் சீனாவில் கோவில் கட்டி வழிபடுகிறார்களாம் இத்தனைக்கும் போதிதர்மா ஒரு தமிழர். பின் போதிதர்மா சொந்த நாட்டுக்கு பயணிக்கும்போது சீனாவில் போதிதர்மா புதைக்கபட்டால் ஒரு நோயும் வராது என்பதற்காக போதிதர்மா நஞ்சுணவு உட்கொண்டு இறந்து போகின்றார். இந்த வரலாறு போதிதர்மா பற்றி சீன,தாய்லாந்து மக்களுக்கு தெரிந்திருக்கிறது தமிழர்களுக்கு தெரியவில்லை இந்த விடயத்தை வெளிக்கொணர்ந்ததுக்கு முருகதாசை பாராட்டியே ஆக வேண்டும்.



                                                                                                                                                 இனி கதை நிகழ் காலத்துக்கு வருகிறது. ஸ்ருதி ஒரு விஞ்ஞானி நரம்பியல் அணுக்கள் பற்றி ஆராய்கிறார் மூன்று வருடங்களாக அவர் ஆராய்ந்து முடிவில் ஒரு மனிதனுடைய நரம்பியல் அணுவில் அதன் பரம்பரை எச்சங்களை தூண்டிவிடுவதன் மூலம் அதே திறமைகளை கொண்டுவரமுடியும் என்று கண்டுபிடிக்கிறார்.போதிதர்மாவின் பரம்பையினரை கண்டு பிடித்து அவர்களின் பரம்பரை அலகுகளை தூண்டி விடுவதன் மூலம் போதிதர்மாவின் திறமைகளை கண்டுபிடித்து அதன் மூலம் மருத்துவ துறையில் முன்னேற்றம் கொண்டு வரலாம் என்று புறப்படுகிறார். இது பற்றி போதிதர்மா முன்பு எழுதிய நூலிருந்தே தெரிந்து கொள்கிறார்.அந்த போதிதர்மாவின் வாரிசு வேறுயாருமல்ல சர்கஸ் கலைஞர் சூரியாதான் அவரை பின்தொடர்ந்து அவரை உறுதிபடுத்தி கொள்கிறார். இதற்கிடையில் சூரியா ஸ்ருதி மீது காதல் கொள்கிறார் ஒருகட்டத்தில் ஸ்ருதி பற்றி உண்மை தெரியவர சூரியா மனமுடைந்து போகின்றார்.


                                                                                                       இதே நேரம் சீனாவில் இருந்து ஆபரேஷன் ரெட்டுக்கு இந்நாள் போதிதர்மா ஆச்சிரமத்தின் முதன்மை சீடன் தேர்ந்தெடுக்கபட்டு இந்தியா வருகிறான். அவன் இந்தியாவில் வந்து என்ன செய்தான்? சூரியா ஸ்ருதி இறுதியில் சேர்ந்தார்களா? சூரியா,ஸ்ருதி நாட்டுக்கு வந்த ஆபத்தை எப்படி காபாற்றினார்கள் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

                                                                     படத்தில் சூரியா,ஸ்ருதி அருமையாக நடிப்பை வெளிக்காட்டியிருந்தாகள் மேலும் டொன்லீயாக நடித்த நடிகர் பற்றி சொல்லவே நடை,பார்வை தொடக்கம் அனைத்திலும் கூர்மையாகவே இருந்தார். பாடல்கள் ஆரம்ப சீன மொழி பாடலின் பின்னணி இசை என்னை கவர்திருந்தது. அடுத்த பாடல் முன்னந்தி சாரல் நீ ஏலவே கேட்ட இசையாக இருந்தாலும் மனதுக்கினியதாக இருக்கிறது முத்துக்குமாரின் கவித்துவ வரிகளோடு சேர்ந்து மேலும் இப்பாடலில் ஸ்ருதி நீருக்கடியில் வரும் சிறு நடனஅசைவுகள் என்னை கவர்திருந்தது,யம்மா யம்மா பாடலில் இறுதியில் சூரியா செய்யும் நடன அசைவுகளும் ஆர்ப்பாடமில்லாமால் நன்றாக இருக்கிறது. இன்னும் என்ன தோழா ஓட்டவில்லை ஏலே ஏலமா எனக்கு பிடித்திருந்தது என்ன ஸ்ருதி இடையில் தமிழ் கொலை செய்கிறார். மொத்தத்தில் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை இதுக்கு முக்கிய காரணம் தல ஸ்டைலில் உதயநிதி ஸ்டாலினுக்கு சொன்னால் ஓவர் விளம்பரம் படத்துக்கு ஆகாது. சராசரி படம், பார்க்கலாம்.

5 comments:

Shanmugam Rajamanickam said...

நல்ல நடையுடன் எழுதி இருக்கீங்க,,

Shanmugam Rajamanickam said...

பாரப்ப// தியேட்டர்ல பாருங்கன்னு சொல்லிடீன்களே..

Vimalaharan said...

ஹாய் ஷண்முகன், விமர்சனம் நல்லாருக்கு.. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.. ஆனால் இப்படித்தான் கொஞ்சம் சொதப்புவார்கள் என்று படத்தின் trailerரே சொல்லிவிட்டது..

Unknown said...

@சண்முகம் said...
//நல்ல நடையுடன் எழுதி இருக்கீங்க,,//

நன்றி கருத்துக்கும்,வருகைக்கும்.

Unknown said...

@Vimalaharan said...
//ஹாய் ஷண்முகன், விமர்சனம் நல்லாருக்கு.. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.. ஆனால் இப்படித்தான் கொஞ்சம் சொதப்புவார்கள் என்று படத்தின் trailerரே சொல்லிவிட்டது//

நன்றி கருத்துக்கும்,வருகைக்கும்.