Friday, December 12, 2014

லிங்கா

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் வயோதிபம் உண்டு. சம்பாதித்து வைத்துள்ள பெயரை காப்பாற்றிக்கொள்ள ஓய்வு பெறுவதே சிறந்தது என்பதை லிங்கா நிச்சயம் உணர்த்தியிருக்கும். வெறுமனவே ரஜினி என்ற திரையுலக வியாபாரநாமத்துக்காகவே தாம் இன்றும் நிலைத்திருக்கிறோம் என்றும் விளங்கியிருக்கும்.ஓர் ஊர் அணையின் மதிப்பீடு மக்கள் சூழ நடைபெறுகிறது. அன்றைய இரவில் மதிப்பீட்டாளர் கொல்லப்படும்போது ஊர்த்தலைவரிடம் அணையின் அருகிலுள்ள மூடியுள்ள கோயிலை திறந்தாலே அந்த மக்களுக்கு விடிவு என கூற அக்கோயிலை கட்டியவர்களின் பரம்பரையினரே திறக்க வேண்டும் என கூறி தேடி திருடன் ரஜனியான பேரனை கூட்டி கொண்டுவருகிறார்கள். அதன் பின் வந்த ரஜினி என்ன செய்தார், நீண்டு கொண்டு போகும் அணை முன்கதையில் ரஜினியின் தாத்தா என்ன செய்தார் என்று திரையில் அபார அந்த இறுதி கிளைமாக்சுடன் தெரிந்து கொள்ளுங்கள்.


ரஜினிக்குதான் வயது போய்விட்டது என்றால் கோச்சடையானில் அடித்தாடவேண்டிய கதையை அனிமேஷன் என்று சொதப்பிய கே எஸ் ரவிக்குமார் லிங்காவில் எடுத்துக்கொண்ட கதை  மோசம் என்றால் திரைக்கதை அதைவிட மோசம் 3 மணித்தியாலத்துக்கு ஜவ்வென்று இழுத்து கொண்டே போகின்றார்கள். இவருக்கும் சரக்கு முடிந்து விட்டது என்று எண்ணத்தோன்றுகிறது.


படத்தின் பாடல்களும் ஏன் இந்த இடத்தில் என்று இல்லாமல் வந்து போகின்றது. படத்தில் சொல்லக்கூடிய ஒரு விடயம் என்றால் கலை இயக்குனரின் பங்களிப்பு மட்டுமே. இதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு வயதுக்கேற்ப கதைகளை கேட்டு நடித்தால் நிலைக்கலாம்.

படம் இலங்கை கொழும்பு வெள்ளவத்தை சவோய் திரையரங்கில் விசேட காட்சியில் பார்க்க முடிந்தது. அரங்கு கிட்டமுட்ட நிரம்பியே இருந்தது. ஏலவே தமிழ் படங்கள் போடாத திரையரங்கில் இனியும் தமிழ் படம் போடுவீர்களா என்ற நிலையில் ரசிகர்களின் நடவடிக்கை அமைந்திருந்தது. நாளை முதல் கொழும்பில் ஈரோஸ்,சினிவோர்ல்ட் திரையரங்குகளில் வெளியாகின்றது.

Friday, October 25, 2013

யாழ்-கொழும்பு பஸ் சேவையும் பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களும்.

A9 பாதையூடான இந்தபஸ் சேவை பற்றி சொல்ல வருவது 2009 இறுதி யுத்தம் முடிந்த பின்னர் பாதை திறந்தபின்தான், அதோடு இக்காலகட்டத்தில்தான் யாழ்-கொழும்பு பஸ்கள் ஆகா ஓகோ எண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. முன்பு சமாதான காலத்தில் பெரும்பாலும் வீட்டு வாசலில் ஏத்தி வீட்டு வாசலில் இறக்கி விடும் ஹையேஸ் வான்களையே மக்கள் பெரும்பாலும் விரும்பியிருந்தனர்  அக்கால பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக அத்தோடு யாழில் இருந்து கொழும்பு செல்வோருக்கு கொழும்பு தெரிந்திருக்கவில்லை இன்று நிலமை வேறு.
                                                சரி நான் விடயத்துக்கு நேரடியாக வருகின்றேன் கல்வி,வேலை நிமித்தமாக 2010களின் இறுதியில் இருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்து இருக்கிறேன் இருந்தும் குறைந்தது இருவாரத்துக்கு ஒரு முறை யாழ்ப்பாணம் சென்றே வருகின்றேன். ஆரம்பத்தில் ஒரு சில பஸ்களே சேவையில் ஈடுபட்டிருந்தன வடமராச்சிக்கு TIPTOP என்ற பஸ் மட்டுமே, நான் வல்வெட்டித்துறைக்கு வீட்டுக்கு போவதானால் ஒன்று நெல்லியடியில் இறங்கி யாரையும் ஃபோன் பண்ணி கூப்பிட்டு மோட்டார்சைக்கிளில் போகவேண்டும் இல்லை பருத்திதுறையில் இறங்கி 751 பஸ்ஸில் போகவேண்டும். பின் அங்க இருந்து வரும்போது வீட்டு வாசலில் ஏற்றுவார்கள் பருவாயில்லை.
                                                                அந்த நாட்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம், அடுத்து வெளிநாட்டுகாரன் எங்கட ரோட்டில சோறு போட்டு சாப்பிடலாம் எண்டு சொல்ல நம்மூர்காரர் எங்கட நாட்டு ரோட்டில சொதியும் ஊத்தி சாப்பிடலாம் எண்ட ரேஞ்சுக்குதான் ரோடு, ரோடு எண்டு ஒண்டு இருந்ததா எண்டு தெரியல? ஒவ்வொரு முறை போய் வரும்போதும் புழுதி புயல்ல அகப்பட்ட மாதிரிதான் இருக்கும். பஸ் அரைசொகுசு சாய்க்க கூடிய சீட்தான் இருந்தும் ஓரளவு  முன்னுக்கு சீட் கிடைக்கலையோ உங்கள் கதை அதோ கதிதான் வந்து சேர முதல் நாரி பெண்ட் எடுத்திரும் அந்தரத்திலதான்  பஸ்ல போய் வருவீங்க. அப்புறம் பஸ் சீட் புக் பண்ணினா அதில இன்னொருதனுக்கு புக் பண்ணுவானுக, இல்ல வேற சீட்ல புக் பண்ணுவானுக இருந்தும் நாங்களும் யாரும் வயசு போனவங்க இல்லாட்டி பிடிச்சபிடியா அந்த சீட்தான் எண்டு அதிலதான் இருந்து வாறது இப்பிடி பிரச்சினை ஆராம்பநாட்களில பயணம் செய்யும்போது  இருந்தது.
                                                                                                                மேலும் கொஞ்ச காலம் செல்ல என்சிஜி,நோர்த்வெஸ்ட்,அன்னைமுத்துமாரி,லக்ஷ்மி என்ற நிறைய பஸ்கள் வந்துவிட்டாலும் இவங்கட புக்கிங்க் குழறுபடிகள் நிண்டபாடில இப்பதான் ஓரளவு திருந்தியிருக்காங்க, பிற்பட்ட காலங்களில் இருந்து  இன்று வரை வீட்டு வாசலிலையே இறங்கி,ஏறலாம் என்றதால நான் அன்னைமுத்துமாரில போய் வர தொடங்கினன், அதால இவனுக ஒன்றும் திறம் ஒண்டும் இல்ல இவங்களும் புக்கிங்ல தொடக்கத்தில குழறுபடிதான் ஒருக்கா பஸ் வெள்ளவத்தை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டுபோய் சீட் பிடிச்ச கதையும் உண்டு, இருந்தும் இப்ப திருந்திடானுக பயபுள்ளைக புக்கிங் விசயத்தில. வடமராச்சியில இருந்து ஒடுற ஒரே சொகுசு(?) பஸ் எண்டதால இவங்களுக்கு நிறை சனம்தான் எப்போதும், ஒரு பஸ்சில இருந்து 4-5 வாங்கிற வரைக்கும் வளர்ந்திருக்கானுக பயபுள்ளைக எண்டால் பாருங்களேன், இப்ப 2 பஸ் லீசிங்காரன் தூக்கி கொண்டு போனது வேற கதை. அடுத்து இந்த பஸ்காரனுக எல்லாம் ஓடி கல்லாபெட்டியை நிரப்பினதோட நிண்டு கொண்டாங்க பஸ் தட்டி வானை விட கேவலமான ரேஞ்சுக்கு இருக்கும். AC வேலை செய்யாது ஆனா பஸ் முழுசா அடைச்சிருக்கும் போறணைக்குள்ள இருக்கிற பாண் மாதிரிதான் பயணிகள். அப்புறம் ஏ‌சி போட்டாங்கன்னா ஏதோ செத்த உடம்ப வச்சிருக்கிற கணக்குக்கு போடுவாங்க, அப்புறம் ஹெட் லைட் இல்லாம கொழும்பில இருந்து யாழ்ப்பாணம் வரை டார்ச் லைட் அடிச்சு வருவானுக. அப்புறம் இந்த TIPTOP பஸ்சில மூட்டை பூச்சி கடி, இப்பிடி நிறைய சிரமங்கள்.
                                            அடுத்து நான் இந்த பதிவை எழுதுறதுக்கு காரணமானதை விட்டுடன் இப்போ மன்னர் போட்டு கொடுத்த கார்பெட் ரோட்டில மிதி மிதின்னு மிதிச்சு 100க்கு குறையாம ஒடுறது, பின்னேரம் அங்க வெளிக்கிடுறது இங்க விடி விடிய 3 மணிக்கு வாறது தனிக்கட்டையா இருக்கிற எங்களுக்கு, கொழும்பிலையே இருக்கிறவர்களுக்கு இது பருவாயில்லை ஆனால் அலுவல்களுக்கு வரும் ஆக்களுக்கு அந்த நேரம் எங்கே போய் தங்குவது? , தனிய வரும் இளம்பெண்கள் என்ன செய்வது? இவற்றை கருத்தில் கொண்டு கொஞ்சம் லேட்டா வெளிக்கிட்டு அளவான வேகத்தில் ஓடிவந்தால் என்ன? எத்தனை விபத்துகள் இதுவரை! அடுத்து இதில வேடிக்கை என்னவென்றால் எல்லா பஸ்களையும் விட அதிவேகமாக வாறது CTB. அடுத்து இவனுக படம்  எண்டு போடுற மரண மொக்கைகளையும், பார்த்து சகிச்சிகிட்டு போகணும்.
                                                  என்னதான் சிரமங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து தீபாவளிக்கு போகும்போதும் இந்த பஸ்லதான் போக போறன்.                                                                                                                                                                         

Friday, September 27, 2013

ராஜாராணி - திரைவிமர்சனம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் பெர்ஸ்ட் டே பெர்ஸ்ட் ஷோ இண்டைக்கு காலையில ஈரோஸ் பாமன்கடை தியேட்டர்ல, இயக்குனர்  அட்லீ வேற ப்ரொஃபஷனல் எதிக்ஸ் அதானுங்க தொழில்தந்திரமுன்னு சொல்லி ஆர்யா-நயந்தாரா கலியாணம் எண்டு வேற போஸ்டர் அடிச்சு ஒட்டியிருந்தார் எல்லோ இண்டைக்கு கிளாஸ் இல்லாததால என்னதான்னு பார்ப்பம் எண்டு போயிருந்தன்.
                                     இண்டைக்கு வெள்ளிக்கிழமை வேலை நாள் எண்டாலும் மோர்னிங் ஷோ 10.30க்கு தியேட்டர் கிட்ட முட்ட நிரம்பிதான் இருந்துச்சு. இந்த தியேட்டர் காரனுங்க டிக்கெட்ல 230 ரூபான்னுதான் அடிச்சிருக்கிறாங்க அப்புறம் ஏன் 300 ரூபா வாங்கிறாங்க? சரி அதை விடுவம்.வழமையா முதல் நாள் முதல் காட்சிக்கு பசங்க கூட்டமாதான் இருக்கும் பொன்னுகளை காண்பது அரிது, ஆனா ஜெயம் ரவிக்கு அப்புறம் ஆர்யாக்குதான் நிறைய பெண் ரசிகைகள் போல அவங்களும் வந்திருந்தாங்க. அப்புறம் பசங்களை பற்றி சொல்லவும்வேணுமா இந்த நேர கனவுக்கன்னி நஸ்ரியா நஸீம் இருக்கானுக,அப்புறம் என்னதான் சிம்பு,பிரபுதேவா எண்டு அடி வாங்கியிருந்தாலும்  அடுத்த ரௌண்டுக்கு தயாராகி கட்டுகுலையாமல் இருக்கிற கட்டழகி 9தாரா மற்றும் இன்னொரு மீள்வருகை ஜெய் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது ஏர் முருகதாஸ் இணைத்தயாரிப்பில் அட்லீ எழுதி இயக்கியிருந்தார்.
                                                                 படம் ரீல்ஸ் ஓட தொடங்கியது நட்சத்திர நாயகனுக்கோ,கனவுக்கன்னிக்கோ கிடைக்காத கைதட்டலும் ஆரவாரமும் இப்போ எல்லா படத்தில் ஆரம்பத்தில் வரும் டாக்டர் பிரசாத்துக்கும்,குர்கா முகேஷுக்கும் கிடைக்கிறது, இந்த காட்சிப்படுத்தல்களால ஏதாவது பிரயோசனம் இருக்கா? வெறும் கேலி கூத்தாக பார்க்கபடுகிற இதையெல்லாம் ஏன் இன்னமும் ஒவ்வொரு படத்தின் ஆரம்பத்திலும் சேர்க்கிறார்கள். நிஜ படம் சேர்ச்இல் ஜான்(ஆர்யா),ரெஜினா(நயன்தாரா) திருமண காட்சியுடன் ஆரம்பமாகிறது, ஃபாதர் ஜானை பார்த்து ரெஜினாவை திருமணம் செய்ய சம்மதமா எண்டு கேட்பார் ஆர்யாவும் வேண்டாவெறுப்பாக சொல்லுவார் ஆம் எண்டு இதையே நயந்தாரவையும் கேட்குபோது அவர் தடுமாற்றமாக சூரியா என்று சொல்லவும் உடனே அவர் அப்பா சத்தியராஜுக்கு நெஞ்சு வலி இப்பிடி தடங்கல்களுடன் ஒரு மாதிரி சமூகத்துக்கு கலியாணம் என்ற காட்சி முடிகிறது.
                       ஆர்யாவும்,நயந்தாராவும் ஒரே வீட்டில் ஒரே கட்டிலில் படுக்கிறார்கள் கணவன்,மனைவி என்ற பெயருக்கு மட்டும், இருவருக்கும் சுத்தமாகவே ஒருவரையொருவர் பிடிக்காது. இதில் ஆர்யா தினம் தினம் தண்ணி அடித்து விட்டு இரவு லேட்டா வந்து நயன்தாரா அருகிலேயே படுக்கிறார், இடையில டாஸ்மாக்குல ஆர்யாவும், நண்பர் சந்தானமும் இருக்கும் போது ஒரு பாட்டு, அதென்ன இப்போ வரும் படங்களில எல்லாம் டாஸ்மாக்குல ஒரு பாட்டு வைக்கோணும் எண்டது எழுதப்படாத விதியோ? ஒருநாள் டி‌வி சத்தம் அதிகமாக போட்டு எரிச்சலூடுகிறார் ஆர்யா, நயந்தாராவுக்கு மன அழுத்தம் அதிகமாகி  வலிப்பு போன்று ஆஸ்பத்திரியில்  மோசமான நிலையில் அனுமதிக்கபடுகிறார்.அங்கே டாக்டர் கேட்கும்போது நயன்தாராவின் பெயர்,வயது கூட தெரியாத கணவனாம், இதில் பரிதாபப்பட்டு ஆர்யா நயந்தாராவுடன் ஆறுதலாக கதைக்கும்போதுதான் நயனுக்கு முதலும் இப்பிடி நடந்ததா எனும்போதுதான்  ரெஜினாவின் முன்னைய வாழ்க்கை விரிகிறது அது என்ன பிறகு ஏன் திருமணம் முடித்தார் என்பதை திரையில் கண்டுகொள்ளுங்கள்.
                                            பிறகு கதை இன்னைய நிலைக்கு வந்து நயன்தாரா குணமடைந்து வர நெருக்கமாக நினைக்கும் ஆர்யாவை எல்லோர் முன்னிலையிலும் அவமானபடுத்துகிறார், இதனால் கலங்கி போகின்றார் ஆர்யா இந்நிலையில்இதனை பார்த்து சந்தானம் நயன்தாராவிடம் ஆர்யாவின் முன்னைய வாழ்கையை பற்றி கூறுகிறார் அதையும் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், இதை கேட்டு நயன்தாரா மனம் மாறி வரும்போது ஆர்யா பொரிந்து தள்ளுகிறார். இப்படியே மாறி மாறி போய்க்கொண்டிருக்கிறது இறுதியில் என்ன நடந்தது டிவிஸ்ட் என்பதையும் திரையிலையே கண்டுகொள்ளுங்கள். படத்தில் சத்யன்,நான் கடவுள் ராஜேந்திரன் என்று நிறையபட்டாளமே நடித்திருந்தது ஒவ்வொருதரும் கதையின் அவ்அப் பகுதிகளில் கச்சிதமாக பொருந்தி போனார்கள்.


                                                                                                                                       படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ் பாடல்கள் வந்த நாட்கள் முதலே கேட்ககூடியதாகவே இருந்தது, காட்சியமைப்புகளுடன் பொருந்தி போகின்றது. வசனம் அட்லீ ரசிக்க கூடியதாக அதேநேரம் அர்த்தம் உள்ளதாக இருக்கின்றது. படத்தின் டிரைலரே பிடித்திருந்தது அதில் பார்த்ததும் முதல் கலியாணம் பின் அதுக்கு பின்னரான காட்சிகள் போன்று இருந்தது ஆனால் படத்தில்திருமணத்துக்கு முன்னரான வாழ்க்கையை சிறப்பாகவே இணைத்திருந்தார். படத்தின் இறுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் என்று முடித்திருந்தார் அட்லீ, உண்மையும் பெரும்பாலும் அதாகவே உள்ளது சிறு சிறு சண்டைகள், புரிந்துணர்வு இல்லாமை உடனே தீர்வு டைவோஸ். இருந்தாலும் அட்லீ ஜெயின் பாத்திரமூடாக சொன்ன விடயத்துடன் நான் உடன்படவில்லை அப்பா ஒத்துக்க மாட்டார் என்றால் இது லவ் பண்ணும்போது எங்க போனது? எது கண்ணை மறைச்சது? பிரச்சினை என்று வந்தவுடன் அந்தரத்தில் விட்டுடு போறது இது பசங்களுக்கு மட்டுமல்ல முக்கியமாக பெரும்பாலான பொன்னுகளுக்கும்தான் ஆரம்பதில் காதல் அதை தவிர வேறொன்றுமில்லை அப்புறம் கொஞ்ச காலத்துக்கு பிறகு அறிவுக்கண் திறந்து அம்மா ஆட்டுக்குட்டி அண்ணா, இதெல்லாம் முதல் எங்க போனது? இதுக்கு அந்த பொடியன் நம்பி ஏமாந்து சிக்கி சீரழிஞ்சு நாசமாகி நடுரோட்டில அவண்ட வீட்டையும் இல்லாம நிப்பான்.
                  மொத்தத்தில்  வருத்தபடா வாலிபர் சங்கம் போல காமெடி எண்டு சொல்லி காட்டுற சூர மொக்கைகளுக்குள்ள நிறைய நாளைக்கு அப்புறம் ஒரு படம் பார்த்த திருப்தி.கீழ இருக்கிறமாதிரி காதல் தோல்விக்கு அப்புறம் இருக்கிற வாழ்கையையும்,காதலையும் நானும் விரைவில பார்ப்பனோ? :P

                                                   There is life after love failure.
                                                   There is love after love failure.
     

Tuesday, September 24, 2013

எனது பார்வையில் வடக்கு மாகாணசபை தேர்தல்

இலங்கையின் தமிழர்கள் வாழும் வட மாகாணத்தில் 30 வருட ஆயுத போராட்டம் முடிவுற்று 4 வருடங்களின் பின் ஏகப்பட்ட சர்வதேச அழுத்தங்களால் வரலாற்றில் முதல் தடவையாக மாகாண சபை தேர்தல் அறிவிக்கபட்டு கடந்த செப்டெம்பர் மாதம் 21ம் திகதி தேர்தல் நடைபெற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறுதிப்பெரும்பான்மையுடன் மாகாணசபையை கைபற்றியிருக்கிறது.
                                             இம்முறை தேர்தல் அறிவிக்கபட்டதில் இருந்து கள நிலவரங்கள் உன்னிப்பாகவே அனைத்து தரப்புகளாலும் அவதானிக்கபட்டு கொண்டிருந்தது. விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் அனைத்து தமிழ் கட்சிகளையும் அழைத்து கூட்டமைப்பை உருவாக்கினர். எனவே வேறு தெரிவுகளற்ற ஒரே தெரிவாக அன்று தொடக்கம் இன்று வரை இருந்து வருகிறது. இம்முறை பெறப்பட்ட வெற்றிக்கும் அவர்களின் நிழல்தான் காரணம்.
                    ஆரம்ப காலம் தொட்டே இந்த கூட்டமைப்புக்குள் உட் கட்சி பூசல் நிறையவே இருந்தாலும் அவர்களின் காலத்தில் எல்லாரும் அடக்கியே வாசித்தனர். இப்போது எல்லாம் முடிந்து விட்ட நிலையில் வேட்பாளர் நியமனத்தில் கட்சி பிளவுபடும் நிலைக்கு கிட்ட சென்றது உட்கட்சி பூசல். பின் ஒருமாதிரியாக மாவை சேனாதிராஜா விட்டு கொடுத்து கட்சி நலனுக்காக செயற்றபட விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக வந்தார்.மேல் மட்டங்கள் இப்பிடியே புகைந்து கொண்டிருந்தாலும் கீழ் மட்டங்களில் இது இன்னும் மோசமாக இருந்தது. வல்வெட்டித்துறையில் பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது, கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவர் அங்கு இல்லை, இதுவென்றாலும் பரவாயில்லை இன்னும் கீழ்த்தரமாக நள்ளிரவு வேளைகளில் சுவரொட்டி ஒட்டி பொதுமக்களிடம் கையும் களவுமாக பிடிபட்ட நிலை. இம்முறை எல்லா பேதமைகளையும் மறந்து ஒன்று திரண்டு தமிழரின் ஒற்றுமையை காட்ட வேண்டும் என்ற மக்களை பார்த்து திருந்துங்கடா, அடுத்து கூட்டமைப்பின் உயர்பீடங்களும் கண்டும் காணாமல் இருக்காது கடுமையான ஒழுகாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இனி வரும் தேர்தல்களில் இந்த தனிநபர் விருப்பு வெறுப்புகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

அடுத்து இம்முறை தேர்தலின் போது அவதானித்தது இணையத்தளங்கள், முக்கியமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தேர்தல் குறித்து ஆழமான கருத்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன மிகவும் வரவேற்கபட வேண்டிய விடயம், தாம் வாக்களிக்க போகின்ற அரசியல்வாதிகளை பற்றி விவாதிக்கதொடங்கிவிட்டார்கள், இது அரசியல்வாதிகளுக்கு ஒரு அலாரம்.இனியும் சும்மா போய் வாக்கு மட்டும் அளித்துவிட்டு வரமாட்டார்கள் மக்கள். என்ன செய்திருக்காய் என்று கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள்,  மேலும் இளைய தலைமுறை வேட்பாளர்கள் களத்தில் நின்றதும் மேலும் முன்னேற்றகரமான விடயம், எனது அவா என்னவென்றால் மக்கள் அரசியல்வாதிகள் பற்றி விவாதிப்பது எல்லாம் தொடர வேண்டும் தேர்தலோடு மட்டும் நின்று விடக்கூடாது, அப்போதுதான் உண்மையானவர்கள் இனங்காணப்படுவார்கள்.
                                       

                                                                                                     அடுத்து இம்முறை யாரும் எதிர்பாராத வகையில் 62 சதவிகித வாக்களிப்பு பதிவாகியிருந்தது இதுவே பாரிய வெற்றியாகும் ஏன் நான் சொல்லுகின்றேன் என்று முன்னைய தேர்தல்களில் தமிழர் பகுதிகளில் எவ்வளவு வாக்களிப்பு வீதம் பதிவாகியிருந்தது என்பதை பார்த்தால் புரியும். இது ஒரு வகையில் தேர்தலில் முறைகேடுகள்  செய்யாமல் வெற்றிகரமாக தமிழர் பிரதேசங்களில் தேர்தலை நடாத்தி காட்டியுள்ளோம் என்று அரசாங்கம் பரப்புரை செய்யலாம்.
                                                                                                                 
தமிழ் கூட்டமைப்புதான் வெற்றி பெறும் என்று ஏலவே தெரிந்திருந்தாலும் இந்த வெற்றி எதிர்பார்க்காத அதிரடி வெற்றி 36 ஆசனங்களில் 30 ஆசனங்களை பெறுவது சாதாரணமான ஒன்றல்ல, இந்த வெற்றி நிறைய விடயங்களை அரசாங்கத்துக்கு சொல்லி போயிருக்கின்றது வெறும் கார்ப்பெட் வீதிகளாலும்,புகையிரததாலும் மக்கள் மனதை வென்றுவிடமுடியாது, எதையும் மறக்கவில்லை அனைத்தையும் உள்ளேயே வைத்திருக்கின்றனர் சந்தர்ப்பம் வந்தபோது வாக்கு என்னும் சாட்டையால் ஓங்கி அடித்துள்ளனர். பார்ப்போம் இந்த தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் அணுகுமுறையில் மாற்றங்களை கொண்டுவருமா என்று?

                                                                                   அடுத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய ஆணை பெரியதொன்றாகும், முன்னரை போன்று சும்மா இருந்து கொண்டு காலத்தை கடத்த முடியாது, ஆக்கபூர்வமான முறையில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். முக்கியமாக காணி அதிகாரங்கள் பெற்றுகொள்ளபடவேண்டும் இல்லையெனில் அடுத்த தேர்தலின்போது குடியேற்ற என்ற பெயரில் வருகின்ற வாக்குகளால் ஆப்பு காத்திருக்கின்றது, மற்றது மக்கள் நடமாட்டமுள்ள இடங்களில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்ற படவேண்டும்.முதலைமச்சர் விக்கினேஸ்வரன் ஆரம்பமே அதிரடியாக புத்திசாலியாக அடித்து ஆடியிருக்கின்றார் பார்ப்போம் பொறுத்திருந்து பார்ப்போம் தனது தொடர்ந்து வரும் நடவடிக்கைகளால் இன்னும் தன்னை நிரூபிக்கின்றாரா என்று?

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம்:தமிழ்நாடு:இலங்கை:முஸ்லீம்கள்


ஐயாத்துரை படலையிலிருந்து ரொய்ட்டர்ஸ் வரை இப்போது பேசப்படும் விடயங்களில் ஒன்றாக இப்போது மாறிவிட்டது விஸ்வரூபம்.கமல் இப்படத்தை எடுக்கமுதல் என்ன நினைத்தாரோ அதிலும் மேலான ஆர்வத்தை படம் ஏற்படுத்தியுள்ளது தற்போது. இதுவே கமலுக்கு கிடைத்த பெருவெற்றியாகவிருக்கலாம்.இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் விஷ்வரூபத்துக்கு தடை என்று அதகளபட்டுகொண்டிருக்கும்போது மனுஷன் தனி விமானத்தில் சான்பிரான்ஸிஸ்கோ போய் சிறப்புகாட்சியில் கலந்துகொண்டிருப்பாரா? காலதாமதங்களால் வர்த்தகரீதியாக மட்டும் ஒன்றே பிரச்சினைகளை  எதிர்நோக்கவேண்டி வரும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்தியாவின் இரு மாநிலங்கள்,இலங்கை தவிர உலகின் மற்றைய பகுதிகளில் இருந்து வரும் வசூல் பற்றிய செய்திகள் நிச்சயம் கமலுக்கு நம்பிக்கையே அளிக்கும், இருந்தும் படம் வெளிவராமல் இருக்கும் இடங்கள் பெரும் வசூல்சந்தை என்பதில் மாற்றுகருத்தில்லை, மேலும் வரும் நாட்களில்தானே படம் ஹிந்தியில் வெளியாகிறது.
                                                                                                          கமல் படங்கள் என்றால் சொல்லவேண்டுமா சும்மாவே படம் முடிய நிறைய நாட்கள் எடுக்கும் இதில தயாரிப்பாளர் பிரச்சினை,இயக்குனர் பிரச்சினை என்று கமலே எல்லாத்தையும் எடுத்து கொண்டதால் நாள் நீண்டுகொண்டேபோனது,பிறகு படம் ஒரு மாதிரியாக முடிந்தது என்றால் டி‌டி‌எச் வெளியீட்டால் தியேட்டர் அதிபர்களுடன் முறுகல் என்று மேலும் தாமதமானது. இதனுடையே இப்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு தூபமிடப்பட்டு இருக்கிறது.
                                                                                                                     முதல் தமிழ்நாட்டில் ஏன் தடை என்றால் வேறொன்றுமில்லை, காரணம் இலகு திரைப்படதுறையினர் அந்நேரம் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு வால் பிடிக்க வேண்டும். கமல் அதை சரியாக செய்யவில்லை அதுதான் காரணம் விஷ்வரூபத்துக்கு எதிரான தமிழக அரசின் தடை, ஏன் இவ்ளோ ஆவேசம் கொள்ளும் முஸ்லீம்கள் எல்லாம் இறுதி வெளியீட்டுக்கு நாளுக்கு முதல்தானே எதிர்ப்பை வெளியிட்டார்கள் இப்பவே தெரியவில்லையா தூண்டப்பட்டு இருக்கிறார்கள் என்று? இல்லாவிட்டால் இந்த டி‌டி‌எச் பிரச்சினைக்கு முதலே இவர்கள் முதலே பிரச்சினை எழுப்பியிருக்கலாமே? ஏன் எழுப்பவில்லை? மேலும் ஒரு படத்தை பார்க்காமலே எப்பிடி படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியும்? பிரச்சினை இதுதான் கமல் படத்துக்கான உரிமையை ஜெயா டி‌விக்கு குடுக்காததும்,டி‌டி‌எச் என்ற திட்டம் மூலம் சன் நிறுவனத்துக்கும் வருமானம் வருகிறது என்பதுதான் ஜெயலலிதா படத்தை முடக்குவதுக்கு காரணம், மேலும் இது ஒன்றும் புதிதல்ல வடிவேலு திரைத்துறையில் எப்பிடி ஒதுக்கபட்டார் என்றது யாவரும் அறிந்ததே மேலும் அவரது கட்சிக்கு வால்பிடிக்கும் நடிகர் என்றால் இத்தனையும் ஒன்றும் நடந்திருக்காது இதுவும் அண்மைய காலங்களில் நீங்கள் பார்த்த ஒன்றுதான், மேலும் இதில் முஸ்லீம்களை சம்பந்தபடுத்தியதன் மூலம் தனது வாக்குவாங்கியை அதிகரிக்கவும் செய்துள்ளார்.
                                                                                                    அடுத்து ஏன் இலங்கையில் தடை என்றால் கமலுடன் இணைத்தபடி தலைவரின் சுவரொட்டிகள் தமிழகத்தில் ஒட்டபட்டிருந்ததாகவும் இதனால் இலங்கை அரசு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டதாகவும் ஊடகநண்பர் ஒருவரின் மேலும் அறிந்துகொண்டேன். மேலும் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் நிலைப்பாடு தொடர்பில் இன்னும் சில வாரங்களில் ஆராயப்பட இருக்கிறது. ஏலவே இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் இப்பிடி முஸ்லிம்களுக்கு ஆதரவு என்ற தோற்றபாட்டை காட்டுவதன் மூலமே அரபுலக நாடுகளின் ஆதரவை பெறவேண்டியிருந்தது. இதுக்காகவேதான் நேற்று இரவு முஸ்லிம் புத்திஜீவி(?)களுக்கு,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திரைப்படம் காண்பிக்கபட்டது, தமிழ்நாட்டில் திரைமறைவில் காரணங்கள் இருந்தாலும் சாட்டுக்காவது நீதிமன்றம் போய், நீதிபதிக்கே படம் திரையிடபட்டது, ஆனால் இங்கு எதிர்த்தவனுக்கு போட்டு காண்பித்ததன் மூலம் எவ்விதமான நலன்களை அரசு பெற விரும்புகிறது என்று புரியவில்லையா? இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்தானே.
                                                                  அடுத்து இதில் முஸ்லிம்களின் வகிபாகம் என்னவென்று பார்த்தால் தூண்டலுக்கு ஏற்ப துலங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டில், ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் அதை புறக்கணிக்கலாம். தடை செய்ய வேண்டும் என்று இல்லை. நான் படம் பார்க்கவில்லை, இருந்தும் படம் வந்து என்ன தாக்கத்தை முஸ்லீம்கள் மீது ஏற்படுத்துவதை விட இவர்கள் இப்போது செய்யும் செயல்களால் தங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள், சாதாரண ஒரு நாத்திகனுக்கே முஸ்லிம் என்றால் வெறுப்பு ஏற்படும்படி செய்திருக்கிறார்கள், படம் கொண்டுவரும் அரசியல் இருக்க தங்கள் ரிஷானா கொடூரமாக கொல்லபடும்போது ஏன் மௌனியாக இருந்தார்கள்? மலாலாவுக்கு நடந்த கொடுமையின்போது ஒவ்வொரு பெயரோடு கிளம்பும் முஸ்லீம் அமைப்புகள் எங்கு இருந்தார்கள்.
                                                                                                                

                                                                                                           

                                                    

Saturday, December 22, 2012

இனிஅவன்- சில யதார்த்தங்கள்,நிறைய மிகைப்படுத்தல்கள்

"2009 போருக்கு பின் முகாம்களில் இருந்து வந்த மக்கள், குறிப்பாக புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகளுக்கும் சமூகத்துக்குமான உறவு அண்மையில் உள்ளூரில் இடம்பெற்ற கைதுகள்/கடத்தல்களால் மீண்டுமொரு முறை பெரியதொரு விரிசலை எதிர்நோக்கியிருக்கிறது :( நேற்று ஒருவருடன் உரையாடும்போது புரிந்து கொண்டேன், ஆனால் தற்போதைய நிலையில் சமூகத்தை பிழை சொல்ல முடியாது, அவர்கள் தாமுண்டு தமது வேலையுண்டு என்று இருப்பதாலேயே தற்காலத்தில் நிம்மதியாக வாழமுடியும். அப்பிடியானதொரு வலையே இப்போது எம்மை சுற்றி பின்னபட்டிருக்கிறது :( இக்கட்டான நிலையில் முன்னாள் போராளிகள்:(" இந்த கருத்தை எனது பேஸ்புக்கில் சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். இந்நிலையில் நேற்றுதான் இனிஅவன் வெளியாகிருந்தது, பல நாள்காளாகவே சமூகவலைத்தளங்களில் புனர்வாழ்வு அ(ழி)ளிக்கப்பட்டு வரும் ஒரு போராளியினை சமூகம் எப்பிடி எதிர்நோக்குகிறது என்ற முன்னோட்டங்களும், எல்லா தளங்களையும் தேடி பயணிக்கவேண்டும் என்ற நோக்கில் இலங்கையில் எடுத்த படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் நேற்று மதியம் ராஜா 2 திரையரங்கில் சென்று பார்த்தேன்.

இதுதான் நான் பார்க்கும் முதல் இலங்கை தயாரிப்பு திரைப்படம், எனக்கு இந்த படத்தை இயக்கிய விருதுகளை பெற்ற அசோக கந்தகமயும் நான் அறிந்திருக்கவில்லை, எனவே நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே படம் பார்க்க சென்றேன், இக்காலங்களில் இப்பிடி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்க செல்வதே நன்மை பயக்கிறது, படம் ஆரம்பிக்கும்போதே ராஜா 2 திரையரங்கின் திரையின் 1/4 பங்கு அளவுக்கே படம் காண்பிக்கபட்டது, ஒலியும் சொல்லிகொள்ளும் படியாக இல்லை, இருந்தும் இவை தொழில்நுட்ப பிரிவை சார்ந்தவையே எமது நாடு அந்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லைதானே என்று விட்டு விட்டேன், படம் ஆரம்பித்து இடைவேளை வரை நன்றாகவே சென்றது, எனது வாழ்நாளில் ஓரிரு வருடங்களை யாழ் மண்ணிலையே கழித்தவன் என்ற ரீதியில் முதல் பாதியில் இயக்குனர் காட்டியவை பெரும்பாலும் என் கண்கூடாகவே நிகழ்ந்தவை என்ற ரீதியில் உறுத்தவில்லை. சகோதர மொழி இயக்குனர் ஒருவர் இவ்வளவு ஆழமாக எடுத்திருக்கிறார் என்று பெருமை பட்டுகொண்டேன், இருந்தும் சில காட்சிகள் ஒவ்வாதமையாகவே காணப்பட்டன, படத்தின் நாயகன் சொந்த ஊருக்கு வரும்போது, அந்த ஊரே இப்பிடித்தான் நிண்டு பார்க்குமா? சிரிப்புதான் வந்தது, அடுத்த காட்சியில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த தகப்பனின் காட்சி தத்ரூபமாகவே தெரிந்தது, அடுத்தது சாதீய பாகுபாடு அந்த பெண்ணின் தகப்பனின் உருவில் யதார்த்ததைதான் காட்டியிருந்தார்கள், அடுத்து அரை காட்சட்டையுடன் வரும் வெளிநாட்டுகாரன், "நாங்கள் மடையங்கள்" என்று நாயகன் சொல்லும் எல்லாம் அப்பட்டமாகவே தெரிந்தது.இப்பிடி நன்றாகவே போய்க்கொண்டிருந்த படத்தை இரண்டாம் பாதியின் போது அதல பாதாளத்துக்குள் தள்ளி தானும் அரசுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு இயங்கும் ஒருவன்தான் என்பதை வெளிக்காட்டியுள்ளார் இயக்குனர். முற்றுமுழுதாக இராணுவகட்டுபாட்டுக்குள் இருக்கும் யாழ்ப்பாணத்தில் எப்பிடி இவ்வளவு ஆயுத பாவனை சாதாரணமாக இருக்கிறது? இதற்க்குரிய மூலம் எங்கே எதோடு சம்பந்தபட்டது என்று காட்டவில்லையே இயக்குனர்? நான் எங்கோ வாசிச்சது போன்று ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு இனமக்களை இப்படியானவர்கள் என்று முத்திரை குத்துவதை மதவெறி பிடித்த கிறிஸ்தவ இயக்குனர் மாயன் இனத்தவர்களின் பெருமைகளை எல்லாம் மறைத்து நரமாமிசம் சாப்பிடும் கொடூரர்கள்  என்று காட்டுவதன் மூலம் நிறைய உண்மைகளை மறைத்திருந்தார், அதையே இங்கும் இயக்குனர் மிகச்சரியான உளவியலுடன் கையாண்டிருக்கிறார், இந்த படம் சர்வதேச  விழாக்களுக்கு செல்கிறது அங்கு சர்வேதச சமூகத்துக்கு இந்த படத்தின் மூலம் எடுத்து சொல்லபடும் செய்தி என்னவெனில் அந்த படத்தில் வரும் வசனம் போன்றுஎங்களுக்கு புதிய வாழ்க்கை இல்லை பழையதையே மீண்டும் புதுசா தொடங்குறம் அதாவது தமிழர்கள் 2009 ஆயுத போராட்ட முடிவுக்கு பின்னும் அவர்களுக்கு வேறொன்றும் தெரியாது மீண்டும் மீண்டும் ஆயுதகலாச்சாரதுக்குள்ளேயே செல்கின்றனர் என்பதை மிகசரியாக சொல்லுகிறார் அரச நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கும் இயங்குனர்.
                                                                                                                                   மொத்தத்தில் தமிழர்கள் இன்னும் ஆயுத கலாச்சாத்துக்குள் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்று சர்வதேச சமூகத்துக்கு கற்பிக்கவே இந்த படம் எடுக்க பட்டிருக்கிறது, மேலும் படத்தின் இறுதி பகுதியில் டிப்பரில் வந்து உதவி கேட்கும் பாத்திரம் மட்டும் சிங்களமாகவும், படத்தின் ஏனைய பாத்திரங்கள் அனைத்தும் தமிழாக இருப்பதன் மூலம் இயக்குனர் சொல்வது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் இல்லை.இரண்டாவது பாதியில் எனக்கு யதார்தமா தெரிந்தது வீட்டு வளவில் புதைச்சு வைப்பதும், நாயகனின் காதலி AK-47 துப்பாக்கி எடுத்து சுடும்போது, இந்திய சினிமா ரேஞ்சுக்கு இல்லாது உண்மையாக ஒரு சாதாரண பெண் துப்பாக்கியால் சுடும்போது ஏற்படும் உதைப்பு காரணமாக எப்பிடி நிலைதடுமாறுவாள் என்றும் காட்டியிருப்பது மட்டும்தான்.
 


                                       

Friday, October 5, 2012

பில்லா 2

பில்லா 2 பற்றி ஏலவே நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டதால், நான் படத்தை பற்றி எதுவும் உள்ளே சென்று எழுதுவதாக இல்லை, படத்தை பற்றி ஒருசொல்லில் சொல்லுவதானால் நான் படம் பார்த்தவுடனே கீச்சியதை போன்று "மிஞ்சிய ஏமாற்றம்தான்". என்னடா பில்லா2 ன்னு போட்டுட்டு படத்தை பற்றியும் எழுதல, என்னத்தை பற்றி எழுத போறான் எண்டு நீங்க கேட்கிறது தெரியுது, அது வேற ஒண்டும் இல்லைங்கோ நான் யாழ் மனோகரா தியேட்டேர்ல படம் பார்க்க போன கதைதானுங்கோ.


                                                                                                        13ம் திகதி வெள்ளிக்கிழமை உலகமெங்கும் பில்லா 2 வெளியாகியது, இலங்கை,இந்திய ஒரேதின வெளியீடாக யாழ் மண்ணிலும் யாழ்நகரில் மனோகரா திரையரங்கிலும்,அச்சுவேலியில் லிபேட்டி திரையரங்கிலும் பில்லா 2 வெளியாகியது. எனக்கு தெரிஞ்ச வரையில பில்லா 2தான் யாழ்ப்பாணத்திலேயே முதன்முதலாக 2 வேறுபட்ட தியேட்டர்களில் வெளியாகின்றது நினைக்கிறேன்.(அவ்வளவு ரசிகர் பட்டாளம் போல) தற்போது வீட்டை(யாழ்ப்பாணம்) நிற்பதாலும்,தற்போதைய காலகட்ட முன்ணனி நடிகர்களுள் ஏனோ அஜித்தை பிடிக்கும் என்பதாலும், முதல் நாள் முதல் ஷோ பார்க்க முடிவாயிற்று, பதிவர் மருதமூரான் இப்பிடி பார்க்க போகின்றவர்களும் ஒரு வகையில் போர்வீரர்கள்தான் என்று உணர்ந்தநாள், அப்பேர்ப்பட்ட ஒரு போர்க்களம் :P முதல் நாள் இரவே நண்பனுடன் கதைத்து மோட்டார்சைக்கிளில் செல்வதாக தீர்மானித்தாயிற்று, எந்த திரையரங்குக்கு செல்வதென்று யோசித்தபோது லிபெர்ட்டி அருகில் இருந்தாலும் ஒருநாளும் சென்றதில்லை என்பதால் மனோகராவுக்கே செல்ல தீர்மானித்து காலையில் நேரத்துடன் கிளம்பியாற்று. ஒருமாதிரி தியேட்டரை படம் ஆரம்பிப்பதுக்கு 2 மணித்தியாலம் முன்னமே சென்றதால் இங்கு( யாழ் நகரில்) முன்னணி நடிகர்களின் வெளியிடன்று நடக்கும் கண்கொள்ளா காட்சியை நேரிடையாகவே பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.ஒருமாதிரி வரிசையில் முன்னுக்கு நின்றபோதுதான் என்னடா பாண்ட் சத்தம் கேட்குது ஏதும் செத்தவீடு வருதோ எண்டு பார்த்தா திரையரங்க வாசலில் வச்சு அடிச்சுகொண்டுநிண்டாங்க்க, அந்த ரோட்டால போய் வந்த சனம்தான் அவதிக்குள்ளாயிற்று.

                                                                  பிறகு கொஞ்ச நேரத்துக்கு பிறகு பார்த்தா ஹையெஸ் வான்களில் படை பட்டாளமா ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்து இறங்கி உள்ள செத்தவீடு நடக்கிற ரேஞ்சுக்கு படம் ஆரம்பிக்கிற வரைக்கும் வெடி போட்டுகிண்டே இருந்தாங்க. பிறகு கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் பார்த்தா ரெண்டு ஓட்டோ ஸ்பீடா  வந்துச்சு, நானும் ஏதோன்னு பார்த்தா அவங்க அஜீத் கட்அவுட்க்கு பாலாபிகேசம் செய்ய பாலாம். கொணர்ந்து ஊத்தி தள்ளினாங்க அவன் பிறந்ததுக்கு இவ்வ்ளோ பால் குடிச்சானோ தெரியாது, அதுக்கு மேல எங்களுக்கும் மேல அபிஷேகம் இல்ல. அப்ப நினைச்சன் இன்னும் என்ன கருமாந்திர்ம் எல்லாம் பார்த்து படம் வேண்டியிருக்கேண்டு, இனிமேல் முதலநாள் இங்க படம் பார்க்க வரதிலைன்னு சபதம் செய்துக்கிட்டேன். பிறகு பார்த்தா தேங்காய் அடிப்பு, ஆயிரக்கணக்கா தேங்காய் சிதறிச்சு.


                பிறகு ஒருமாதிரி அடிச்சு பிடிச்சு டிக்கெட் எடுத்து உள்ள போனா, அங்க எங்கட ஆக்கள் ஹௌஸ்ஃபுல் எண்டா என்பதுக்கு இந்தியாகாரங்களுக்கு வரைவிலக்கணம் கொடுக்கிரமாதிரி இருந்தாங்க. நடைபாதை,படி எண்டு எல்லா இடமும் ஆக்கள் நகரமுடியாநிலை ஏதோ பல்கனி டிக்கெட் கிடைச்சதால ஓரளவு நிம்மதியா படம் பார்க்க முடிஞ்சுது.இதில என்ன அதிசயம் என்னண்டா வெளிநாட்டில இருந்து வந்த குடும்பம் இந்த கூட்டத்துக்குள்ள வந்து நிண்டு படம் பார்த்ததுகள்.படம் நேரத்துக்கு தொடங்குர வாடிக்கை இல்லை என்பதால் பாட்டு போய்க்கொண்டிருந்தது அதுக்கு திரைக்கு முன் மேல ஏறி ஆட பிறகு சிவாஜி பட ஆஃபிஸ் ரூம்போல ஆக்கள் வந்துதான் கலைச்சாங்க :) ,இப்பிடி படம்பார்த்து வரவேண்டியதாபோச்சு