Saturday, December 31, 2011

இலங்கை பாராளுமன்றில் பதிவர்கள்-1

முற்குறிப்பு-இப்பதிவு முற்றுமுழுதாக நகைச்சுவை உணர்வோடே   எழுதப்படுகிறது. இதில் வரும் பதிவர்கள் மனம் ஏதும் நோகும்படி இருந்தால்,கூறினால் நீக்கப்படும்.

நாட்டிலே இருக்கும் அரசியல் கட்சிகளால் ஏதும் பயனில்லை என்று உணர்ந்த மக்கள் அடுத்த நடைபெற்ற தேர்தலில், பதிவுலகில் நடைபெறும் அரசியல்களை எல்லாம் பார்த்த மக்கள் இதை விட மிகச்சிறப்பாக அரசியல் நடத்தகூடியவர்கள் வேறு ஒருத்தரும் இல்லை என்பதை உணர்ந்து பதிவர்களையே பாராளுமன்றிற்கு தெரிவு செய்கிறார்கள்.


                                                                                       பதிவர்கள் எல்லோரும் பாராளுமன்றில் வீற்றிருக்கின்றனர். அப்போது சபாநாயகர் பதிவர் ஜனா பாராளுமன்றில் வருகை தருகிறார் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கின்றனர் அப்போது பதிவர்,மகளிர் விவகாரதுறை அமைச்சர் மருதமூரான் மட்டும் சபாநாயகர் வருவதையே உணராது தொலைபேசியில் பேஸ்புக் அரட்டையில் தேவதைகளுடன் ஒரு பக்கம் மிதந்து கொண்டு மறுபுறம் காதல்ரசம் சொட்டும் ஸ்டேட்டஸ்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்.திடீர் என்று சபாநாயகர் வருவதை உணரந்து எழுந்து நிக்கிறார்.சபாநாயகர் சென்று தனது ஆசனத்தில் அமர்ந்ததும் அவை தொடங்குகிறது. பதிவுலகில ஆணாத்திக்கம் என்று பல பேர் அடிக்கடி குறைபட்டு கொள்வதால் சபாநாயகர் முதலில் மகளிர் விவகார துறை அமைச்சர் மருதமூரானை உரையாற்ற அழைக்கிறார். மருதமூரான்  "விலகியோடும் குழந்தையை சுற்றியிருக்கும் தாயின் அக்கறை மாதிரி, 'காதல்' மீதான அக்கறையும் அது இழக்கப்படும் சந்தர்ப்பங்களில் தான் அதிகரிக்கிறது!! " என்று தான் பாராளுமன்றில் நிக்கிறோம் என்பதை உணராது பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடும் நினைப்பில் உரையாற்றுகிறார். மற்ற உறுப்பினர்களும் ரசித்து கொண்டிருக்க பதிவர் சினிமாதுறை அமைச்சர் ஜீ எழுந்து யோவ்வ் இங்க என்ன நடக்குது என்று பெண்கள் மேல் உள்ள வெறுப்பால் கத்த அப்போதுதான்   அரசாங்க பிரதம கொறடா அதிகார மையம் நிருஜா எழுந்து என்ன மருதமூரான் சம்பந்தம் இல்லாமல் கதைக்கிறீர் அமரும் என்கிறார்.

                                                                                                                                             அதை தொடர்ந்து சபாநாயகர், தன்னை (எதிர்க்கட்சி தலைவர் ) பேச அழைப்பார் என்று எதிர்பார்த்த நிரூபனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது சபாநாயகர் எதிர்க்கட்சி பிரதம கொறடா,சமய விவகார அமைச்சர் பதிவர் ஐடியாமணி அவர்களை அழைத்தார். ஐடியாமணியும் எழுந்து மனிதஉரிமைகள் காக்க படவேணும் கல்லால் எறிந்து கொள்ளவது தடைசெய்ய படவேணும், ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கபடவேணும் அனைத்து பெண்களும் முகம் தெரியுமாறு செல்லவேண்டும்,முக்காடு போடக்கூடாது என்று சீரியஸ் ஆக கதைத்து கொண்டிருக்க பின்வரிசையில் கும்மி அடித்து கொண்டிருந்த நான்,மைந்தன் சிவா,பொட்டலம் கார்த்தி ஆகியோர் ஆமாண்ட மச்சான் அப்பத்தானே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கலாம் என்று கைதட்டி ஆரவாரம் செய்தோம்.அப்போ சீரியசா உரை நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் ஆரவாரம் செய்ததால் எல்லோரும் ஒரு முறாய்ப்போடு எங்களை பார்த்தார்கள்.


தொடரும்......


நேரம் இன்மையால் பதிவு குறுகிவிட்டது மன்னிக்கவும்.

25 comments:

SShathiesh-சதீஷ். said...

எத்தனை பேர் ட்ரவுசர் கிழிய போகுதோ

Unknown said...

//SShathiesh-சதீஷ். said...
எத்தனை பேர் ட்ரவுசர் கிழிய போகுதோ//

ஹா ஹா. நன்றி அண்ணா வருகைக்கு. எப்படி உள்ளது

வந்தியத்தேவன் said...

நான் நாடு கடந்திருப்பது எவ்வளவு நல்லது
ஆரம்பமே அசத்தலாக இருக்கு இன்னும் எதிர்பார்கின்றேன்.
மருதமூரானுக்கு மகளிர் விவகாரம் மிகவும் பொருத்தமான அமைச்சுத்தான்.

Unknown said...

// வந்தியத்தேவன் said...
நான் நாடு கடந்திருப்பது எவ்வளவு நல்லது
ஆரம்பமே அசத்தலாக இருக்கு இன்னும் எதிர்பார்கின்றேன்.
மருதமூரானுக்கு மகளிர் விவகாரம் மிகவும் பொருத்தமான அமைச்சுத்தான்.//

இன்னும் நிறைய உண்டு நாடு கடந்து இருந்தா என்ன நீங்கள் இல்லாத அமைச்சரவையா?

தர்ஷன் said...

இந்த மருதமூரான் லவ் ஸ்டேட்டஸா போட்டுட்டு படுற பாடு இருக்கே, பாவம் பொடியன். அப்புறம் மைந்தனையும் என்ன சும்மா வேடிக்கை பார்க்கும் விடலை என்று சொல்லி விட்டீர்கள். அவர் வட்கொரியா பற்றி எல்லாம் எழூதி தீவிர அரசியலில் இறங்கியிருக்கிறார்.வெளிவிவகாரத் துறையை கொடுத்து விடலாம்.
ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு முன் இம்மாதிரி பதிவுகள் நிறைய வரும். நீண்ட நாட்களுக்கு பின் எழுதியிருக்கிறீர்கள்.

Unknown said...

//தர்ஷன் said...
இந்த மருதமூரான் லவ் ஸ்டேட்டஸா போட்டுட்டு படுற பாடு இருக்கே, பாவம் பொடியன். அப்புறம் மைந்தனையும் என்ன சும்மா வேடிக்கை பார்க்கும் விடலை என்று சொல்லி விட்டீர்கள். அவர் வட்கொரியா பற்றி எல்லாம் எழூதி தீவிர அரசியலில் இறங்கியிருக்கிறார்.வெளிவிவகாரத் துறையை கொடுத்து விடலாம்.
ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு முன் இம்மாதிரி பதிவுகள் நிறைய வரும். நீண்ட நாட்களுக்கு பின் எழுதியிருக்கிறீர்கள்.//

வெளிவிவாகரம் ஏலவே ஒதுக்கபட்டு விட்டது, மைந்தன் பாஸ்க்கு இல்லாத பதவியா இது அறிமுகம் மட்டுமே

கார்த்தி said...

/* ஆமாண்ட மச்சான் அப்பத்தானே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கலாம் என்று கைதட்டி ஆரவாரம் செய்தோம். */
சார் நாங்க நாங்க ரொம்ப நல்ல பிள்ளைங்க!!

Unknown said...

//கார்த்தி said...
/* ஆமாண்ட மச்சான் அப்பத்தானே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கலாம் என்று கைதட்டி ஆரவாரம் செய்தோம். */
சார் நாங்க நாங்க ரொம்ப நல்ல பிள்ளைங்க!!//

ஓ நீங்க ரொம்ப நல்லவங்களா? தெரியாம போச்சு அடுத்து வரும் இத்தொடரில் காத்திருக்கவும்.

Jana said...

ஆஹா... ஆரம்பமே நல்லா இருக்கே.... மருதமூரான் இன்னும் பார்க்கலையா? எந்தெந்த பதிவருக்கு எந்தெந்த அமைச்சு ஆர்வமாக இருக்கு! (பாதகாப்பு அமைச்சை எதிர்பார்தேன் சபாநாயகர் ஆக்கிப்புட்டீங்களே...) பறவாய் இல்லை யாரும் செங்கோலை எடுத்திட்டு ஓடமாட்டாங்க தானே :)

ஷஹன்ஷா said...

ஆரம்பம் அட்டகாசம்..

மருதமூரன் அமைச்சு சூப்பர்.
அத்துடன் உங்கள் கும்மி கலக்கல்..

பதிவு எங்க நோக்கி போகிறது என்பதை உணர முடிகிறது.. பார்த்து தம்பி பாதுகாப்புடன் இருக்கவும்.. ஒட்டுண்ணிகள் தொடரலாம்.

ஆனால் ஒரு சந்தேகம்.
ஃஃஃஎதிர்க்கட்சி பிரதம கொறடா,சமய விவகார அமைச்சர் பதிவர்ஃஃஃ
இது எப்படி சாத்தியம்..?? ஒரு வேளை முன்னாள் அமைச்சரோ..??
திருத்திக் கொள்ளவும்.
அடுத்த பதிவுக்கு காத்திருப்பு.

Unknown said...

// Jana said...
ஆஹா... ஆரம்பமே நல்லா இருக்கே.... மருதமூரான் இன்னும் பார்க்கலையா? எந்தெந்த பதிவருக்கு எந்தெந்த அமைச்சு ஆர்வமாக இருக்கு! (பாதகாப்பு அமைச்சை எதிர்பார்தேன் சபாநாயகர் ஆக்கிப்புட்டீங்களே...) பறவாய் இல்லை யாரும் செங்கோலை எடுத்திட்டு ஓடமாட்டாங்க தானே :)//

கவலைபடவேண்டாம் மாற்றம் எல்லாம் வரும்.எல்லாம் உண்டு

Unknown said...

// “நிலவின்” ஜனகன் said...
ஆரம்பம் அட்டகாசம்..

மருதமூரன் அமைச்சு சூப்பர்.
அத்துடன் உங்கள் கும்மி கலக்கல்..

பதிவு எங்க நோக்கி போகிறது என்பதை உணர முடிகிறது.. பார்த்து தம்பி பாதுகாப்புடன் இருக்கவும்.. ஒட்டுண்ணிகள் தொடரலாம்.

ஆனால் ஒரு சந்தேகம்.
ஃஃஃஎதிர்க்கட்சி பிரதம கொறடா,சமய விவகார அமைச்சர் பதிவர்ஃஃஃ
இது எப்படி சாத்தியம்..?? ஒரு வேளை முன்னாள் அமைச்சரோ..??
திருத்திக் கொள்ளவும்.
அடுத்த பதிவுக்கு காத்திருப்பு.//

இது ஒபாமா அமைச்சரவை மாதிரி எதிர்க்கட்சிக்கும் அமைச்சு பதவி உண்டு.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
ஓவர் குசும்பையா உமக்கு..
ஐடியாமணிக்கு இந்தளவு பட்டங்களா? சாரி பதவிகளா? ஹே...ஹே..

அப்புறமா மருதமூரானுக்கு மகளிர் விவகாரங்கள்..
என்னா ஒரு கொல வெறியோடு ஆளின் நிலையினை உணர்ந்து பதவி கொடுத்திருக்கிறீங்க.

ரசித்தேன் நண்பா.

நிரூபன் said...

அடுத்த பாகத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து.

KANA VARO said...

Jana said...
(பாதகாப்பு அமைச்சை எதிர்பார்தேன் சபாநாயகர் ஆக்கிப்புட்டீங்களே...)//

அடப்போய்யா! ஜனா – ஜனாதிபதி, இது தான் பொருந்தமா இருக்கு.

Unknown said...

// நிரூபன் said...
வணக்கம் நண்பா,
ஓவர் குசும்பையா உமக்கு..
ஐடியாமணிக்கு இந்தளவு பட்டங்களா? சாரி பதவிகளா? ஹே...ஹே..

அப்புறமா மருதமூரானுக்கு மகளிர் விவகாரங்கள்..
என்னா ஒரு கொல வெறியோடு ஆளின் நிலையினை உணர்ந்து பதவி கொடுத்திருக்கிறீங்க.

ரசித்தேன் நண்பா.//

நன்றி அடுத்து வரும் பாகங்கள் உங்களுக்கும் நிறைய பதவிகள் வரும் கவலை வேண்டாம்.

Unknown said...

// KANA VARO said...
Jana said...
(பாதகாப்பு அமைச்சை எதிர்பார்தேன் சபாநாயகர் ஆக்கிப்புட்டீங்களே...)//

அடப்போய்யா! ஜனா – ஜனாதிபதி, இது தான் பொருந்தமா இருக்கு.//

:-)

Vimalaharan said...

ஹாய் ஷண்முகன்,
நல்ல ரசனையான பதிவு.. இதில நீங்க யாரு? சபாநாயகருக்கு பக்கத்திலே கோல் ஒன்றை வச்சுட்டு நடக்கிற எல்லாத்தையும் முறைச்சு பாத்திட்டிருப்பாரே அவரா நீங்க?

Unknown said...

//ஹாய் ஷண்முகன்,
நல்ல ரசனையான பதிவு.. இதில நீங்க யாரு? சபாநாயகருக்கு பக்கத்திலே கோல் ஒன்றை வச்சுட்டு நடக்கிற எல்லாத்தையும் முறைச்சு பாத்திட்டிருப்பாரே அவரா நீங்க?//

ஹா ஹா

Unknown said...

ஹிஹிஹி நிசமாலுமே செம மொக்கை சார்,..
நமக்கு ஏத்த இடம் தான் தந்திருக்கீங்க..
ஆனா இந்த கார்த்தி பயல் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரே :PP

Unknown said...

// மைந்தன் சிவா said...
ஹிஹிஹி நிசமாலுமே செம மொக்கை சார்,..
நமக்கு ஏத்த இடம் தான் தந்திருக்கீங்க..
ஆனா இந்த கார்த்தி பயல் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரே :PP//

ஹா ஹா ஏன்? ஜெனி போன கவலைதான் விட்டு இப்ப தீக்ஷாசேத் காய்ச்சல் தொடங்கியிருக்காமே

ad said...

நடக்கட்டும் நடக்கட்டும்.

காட்டான் said...

அட தம்பி மணி ஏன் இப்படி துள்ளினார்ன்னு இப்பதானே புரியுது..!! ;-)

Unknown said...

// சுவடுகள் said...
நடக்கட்டும் நடக்கட்டும்.//

நன்றி வருகைக்கும்,கருத்துக்கும்

Unknown said...

// காட்டான் said...
அட தம்பி மணி ஏன் இப்படி துள்ளினார்ன்னு இப்பதானே புரியுது..!! ;-)//

ஹா ஹா, எல்லோரும் துள்ளுவினம்