Friday, October 5, 2012

பில்லா 2

பில்லா 2 பற்றி ஏலவே நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டதால், நான் படத்தை பற்றி எதுவும் உள்ளே சென்று எழுதுவதாக இல்லை, படத்தை பற்றி ஒருசொல்லில் சொல்லுவதானால் நான் படம் பார்த்தவுடனே கீச்சியதை போன்று "மிஞ்சிய ஏமாற்றம்தான்". என்னடா பில்லா2 ன்னு போட்டுட்டு படத்தை பற்றியும் எழுதல, என்னத்தை பற்றி எழுத போறான் எண்டு நீங்க கேட்கிறது தெரியுது, அது வேற ஒண்டும் இல்லைங்கோ நான் யாழ் மனோகரா தியேட்டேர்ல படம் பார்க்க போன கதைதானுங்கோ.


                                                                                                        13ம் திகதி வெள்ளிக்கிழமை உலகமெங்கும் பில்லா 2 வெளியாகியது, இலங்கை,இந்திய ஒரேதின வெளியீடாக யாழ் மண்ணிலும் யாழ்நகரில் மனோகரா திரையரங்கிலும்,அச்சுவேலியில் லிபேட்டி திரையரங்கிலும் பில்லா 2 வெளியாகியது. எனக்கு தெரிஞ்ச வரையில பில்லா 2தான் யாழ்ப்பாணத்திலேயே முதன்முதலாக 2 வேறுபட்ட தியேட்டர்களில் வெளியாகின்றது நினைக்கிறேன்.(அவ்வளவு ரசிகர் பட்டாளம் போல) தற்போது வீட்டை(யாழ்ப்பாணம்) நிற்பதாலும்,தற்போதைய காலகட்ட முன்ணனி நடிகர்களுள் ஏனோ அஜித்தை பிடிக்கும் என்பதாலும், முதல் நாள் முதல் ஷோ பார்க்க முடிவாயிற்று, பதிவர் மருதமூரான் இப்பிடி பார்க்க போகின்றவர்களும் ஒரு வகையில் போர்வீரர்கள்தான் என்று உணர்ந்தநாள், அப்பேர்ப்பட்ட ஒரு போர்க்களம் :P 



முதல் நாள் இரவே நண்பனுடன் கதைத்து மோட்டார்சைக்கிளில் செல்வதாக தீர்மானித்தாயிற்று, எந்த திரையரங்குக்கு செல்வதென்று யோசித்தபோது லிபெர்ட்டி அருகில் இருந்தாலும் ஒருநாளும் சென்றதில்லை என்பதால் மனோகராவுக்கே செல்ல தீர்மானித்து காலையில் நேரத்துடன் கிளம்பியாற்று. ஒருமாதிரி தியேட்டரை படம் ஆரம்பிப்பதுக்கு 2 மணித்தியாலம் முன்னமே சென்றதால் இங்கு( யாழ் நகரில்) முன்னணி நடிகர்களின் வெளியிடன்று நடக்கும் கண்கொள்ளா காட்சியை நேரிடையாகவே பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.ஒருமாதிரி வரிசையில் முன்னுக்கு நின்றபோதுதான் என்னடா பாண்ட் சத்தம் கேட்குது ஏதும் செத்தவீடு வருதோ எண்டு பார்த்தா திரையரங்க வாசலில் வச்சு அடிச்சுகொண்டுநிண்டாங்க்க, அந்த ரோட்டால போய் வந்த சனம்தான் அவதிக்குள்ளாயிற்று.

                                                                  பிறகு கொஞ்ச நேரத்துக்கு பிறகு பார்த்தா ஹையெஸ் வான்களில் படை பட்டாளமா ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்து இறங்கி உள்ள செத்தவீடு நடக்கிற ரேஞ்சுக்கு படம் ஆரம்பிக்கிற வரைக்கும் வெடி போட்டுகிண்டே இருந்தாங்க. பிறகு கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் பார்த்தா ரெண்டு ஓட்டோ ஸ்பீடா  வந்துச்சு, நானும் ஏதோன்னு பார்த்தா அவங்க அஜீத் கட்அவுட்க்கு பாலாபிகேசம் செய்ய பாலாம். கொணர்ந்து ஊத்தி தள்ளினாங்க அவன் பிறந்ததுக்கு இவ்வ்ளோ பால் குடிச்சானோ தெரியாது, அதுக்கு மேல எங்களுக்கும் மேல அபிஷேகம் இல்ல. அப்ப நினைச்சன் இன்னும் என்ன கருமாந்திர்ம் எல்லாம் பார்த்து படம் வேண்டியிருக்கேண்டு, இனிமேல் முதலநாள் இங்க படம் பார்க்க வரதிலைன்னு சபதம் செய்துக்கிட்டேன். பிறகு பார்த்தா தேங்காய் அடிப்பு, ஆயிரக்கணக்கா தேங்காய் சிதறிச்சு.


                பிறகு ஒருமாதிரி அடிச்சு பிடிச்சு டிக்கெட் எடுத்து உள்ள போனா, அங்க எங்கட ஆக்கள் ஹௌஸ்ஃபுல் எண்டா என்பதுக்கு இந்தியாகாரங்களுக்கு வரைவிலக்கணம் கொடுக்கிரமாதிரி இருந்தாங்க. நடைபாதை,படி எண்டு எல்லா இடமும் ஆக்கள் நகரமுடியாநிலை ஏதோ பல்கனி டிக்கெட் கிடைச்சதால ஓரளவு நிம்மதியா படம் பார்க்க முடிஞ்சுது.இதில என்ன அதிசயம் என்னண்டா வெளிநாட்டில இருந்து வந்த குடும்பம் இந்த கூட்டத்துக்குள்ள வந்து நிண்டு படம் பார்த்ததுகள்.படம் நேரத்துக்கு தொடங்குர வாடிக்கை இல்லை என்பதால் பாட்டு போய்க்கொண்டிருந்தது அதுக்கு திரைக்கு முன் மேல ஏறி ஆட பிறகு சிவாஜி பட ஆஃபிஸ் ரூம்போல ஆக்கள் வந்துதான் கலைச்சாங்க :) ,இப்பிடி படம்பார்த்து வரவேண்டியதாபோச்சு

2 comments:

Vimalaharan said...

நம்ம யாழில் இவ்வளவு விஷயம் நடந்திச்சா :).. விமர்சனத்தை விட படம் பார்த்த அனுபவம்தான் சுவாரசியம்.. இப்படி செய்றது பிடிக்காது என்பதால்தான் அஜித் படம் பார்க்க வந்தவங்களுக்கு படம் பார்க்கிற தண்டனையை கொடுத்து விட்டார் :P.

தெய்வம் நின்று கொல்லும்.. அஜித் முதல் நாளே கொன்னுடுவார்

Unknown said...

Vimalaharan said...

//நம்ம யாழில் இவ்வளவு விஷயம் நடந்திச்சா :).. விமர்சனத்தை விட படம் பார்த்த அனுபவம்தான் சுவாரசியம்.. இப்படி செய்றது பிடிக்காது என்பதால்தான் அஜித் படம் பார்க்க வந்தவங்களுக்கு படம் பார்க்கிற தண்டனையை கொடுத்து விட்டார் :P.

தெய்வம் நின்று கொல்லும்.. அஜித் முதல் நாளே கொன்னுடுவார் //

முடியல விமல் அண்ணா