Wednesday, May 25, 2011

கல்லூரிக் காலங்கள்-2

பாடசாலைக் காலங்களில் எங்களது வகுப்பு கண்டு பிடித்த அல்லது எங்களது வகுப்பால் பிரபலமாக்கப்பட்ட பின் பாடசாலையில் தடை செய்யபட்ட விளயாட்டுக்கள் இரண்டு.

1.
ஒன்று அதிகமாக அநேக பாடசாலைகளில் நடைபெறும் அதுதான் கரும்பலகையை அழிக்க வைக்கப்பட்டிருக்கும் அழிப்பானை கொண்டு விளையாடப்படும் கிரிக்கெட் இந்த கிரிக்கெட்டில் பந்து-அழிப்பான்,துடுப்பு மட்டை- கை, விக்கெட்- தூண். சில நேரங்களில் விக்கெட் இருக்காது துடுப்பாட்டவீரருக்கு பின்னால் விக்கெட் காப்பாளர் நிற்பார் விக்கெட் தூணின் குறிப்பிட்ட அளவுக்கு வெண்கட்டியால் வரையப்படும். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து குழுவாகவும், தனி பேட்டிங் ஆகவும் விளையாடலாம் பௌலிங் கைக்கு கீழாகத்தான்(Under arm) வீசலாம் தூணுக்கு எதிரே இருக்கும் அடுத்த வகுப்பறை சுவர்தான் மெயின் எல்லை ஆஃப் சைடில் ஒரு பக்க சுவர் லெக் சைட்டில் அடுத்த பக்க சுவர் இதற்கென்றே வீட்டில் இருந்து ஓவ்வொருவரும் அழிப்பான் தைத்து வருவோம். இல்லை என்றால் ஆசிரியர் வரும்போது வகுப்பில் அழிப்பான் இல்லை என்றால் அடி வாங்க வேண்டி வருமே. ஓவரு நாளும் இடைவேளையின்பொது கட்டாயம் விளையாடுவோம் ஒவ்வொரு நாளும். ஒரு நாள் விளையாடும்போது துடுபெடுத்தாடிய மாணவன் ஓங்கி அடிக்க அந்த நேரம் பார்த்து அதால் வந்த ஆசிரியர் மேல் பட்டு விட்டது. அதுக்கு பெருசா தண்டனை எதுவும் கிடைக்வில்லை ஏன் என்றால் நாங்கள் உடனே போய் மன்னிப்பு கேட்டோம் ஆனால் இது பிறகு பகுதி தலைவருக்கு தெரிந்து அடுத்த வெள்ளிக்கிழமை கூட்டதில் தடை வந்தது




2.
மேலே குறிப்பிட்ட விளையாட்டு தடை வந்ததால் எங்களுக்கு free பாடவேளைகளில் வகுப்பில் இருப்பது பெரிய கடினமாக இருந்த்து அப்போது கண்டுபிடித்ததுதான் இந்த விளையாட்டு பொதுவாக ரக்பி என்றே அழைக்கப்படும் .ஒரு மேசையின் இரு பக்கமும் ஒருவர் அமர்ந்து கொண்டு கடதாசியால் முக்கோணமாக செய்யப்பட்ட அந்த கடதாசி உருவத்தை ஒரு மேசை நுனியில் இருந்து அடுத்த மேசை நுனிக்கு மூன்று தடவை சுண்டுவதனூடாக அடுத்த நுனியில் நிலை நிறுத்த வேண்டும். அப்படி கொண்டு சென்று விட்டால் அந்த முக்கோண உருவத்தில் ஒரு பக்கம் R என்று எழுதப்பட்டிருக்கும் அடுத்த பக்கம் F என்று எழுதப்பட்டிருக்கும் அதை சுண்டி F விழுந்தால் இரண்டு கையால் கோல் காப்பு மையம் போன்று செய்து அதில் ஒரு விரல் கோல் காப்பாளராக செயற்படுவார் R விழுந்தால் ரக்பி போட்டிகளில் காணப்படும் கோல் கம்பம் போன்று இரண்டு கைகளையும் தூக்கி வைத்து இரண்டு பெருவிரலையும் மேசைக்கு சமாந்தரமாக இணைத்து ஆட்காட்டி விரல் இரண்டையும் நிலைக்குத்தாக பிடிக்க வேண்டும் இரண்டு சந்தர்பங்களிலும் கோல் கம்பக்களுக்கூடாக சென்றால் ஒரு புள்ளி கிடைக்கு.ம் எங்களது வகுப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விளையாட்டு குறுகிய காலத்தில் பாடசாலை முழுவதும் பிரபல்யமாகியது வேறு சில பாடசாலைகளுக்கும் பரவியது.ஆபத்தை கொண்டு வந்தது இந்த விளையாட்டும் ஒரு வெள்ளிக்கிழமை கூட்டத்தில் தடை செய்யப்பட்டது.

2 comments:

ஷஹன்ஷா said...

ஹா ஹா....ஒரே அனுபவங்கள் எங்களுக்கிடையில்....


கிரிக்கட்...இப்படித்தான் வகுப்பறையில் கிரிக்கட் விளையாடினோம்.. அது மட்டுமன்றி ஹொக்கி பந்தினை பயன்படுத்தியும் கிரிக்கட் விளையாடினோம்..துடுப்பில் பந்து பட்டால் ஒரு ஓட்டம் என்ற கணக்கில்..


மற்றைய விளையாட்டு.- புதுமையாக இருக்கின்றது.. இது பற்றி விரிவான விளக்கம் வேண்டும்..ஓய்வு நேரத்தில் விளையாடலாம் போல இருக்கு...

Unknown said...

உங்களுக்கு இல்லாத விளக்கமா விரிவா தாரன்