Saturday, December 31, 2011

இலங்கை பாராளுமன்றில் பதிவர்கள்-1

முற்குறிப்பு-இப்பதிவு முற்றுமுழுதாக நகைச்சுவை உணர்வோடே   எழுதப்படுகிறது. இதில் வரும் பதிவர்கள் மனம் ஏதும் நோகும்படி இருந்தால்,கூறினால் நீக்கப்படும்.

நாட்டிலே இருக்கும் அரசியல் கட்சிகளால் ஏதும் பயனில்லை என்று உணர்ந்த மக்கள் அடுத்த நடைபெற்ற தேர்தலில், பதிவுலகில் நடைபெறும் அரசியல்களை எல்லாம் பார்த்த மக்கள் இதை விட மிகச்சிறப்பாக அரசியல் நடத்தகூடியவர்கள் வேறு ஒருத்தரும் இல்லை என்பதை உணர்ந்து பதிவர்களையே பாராளுமன்றிற்கு தெரிவு செய்கிறார்கள்.


                                                                                       பதிவர்கள் எல்லோரும் பாராளுமன்றில் வீற்றிருக்கின்றனர். அப்போது சபாநாயகர் பதிவர் ஜனா பாராளுமன்றில் வருகை தருகிறார் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கின்றனர் அப்போது பதிவர்,மகளிர் விவகாரதுறை அமைச்சர் மருதமூரான் மட்டும் சபாநாயகர் வருவதையே உணராது தொலைபேசியில் பேஸ்புக் அரட்டையில் தேவதைகளுடன் ஒரு பக்கம் மிதந்து கொண்டு மறுபுறம் காதல்ரசம் சொட்டும் ஸ்டேட்டஸ்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்.திடீர் என்று சபாநாயகர் வருவதை உணரந்து எழுந்து நிக்கிறார்.சபாநாயகர் சென்று தனது ஆசனத்தில் அமர்ந்ததும் அவை தொடங்குகிறது. பதிவுலகில ஆணாத்திக்கம் என்று பல பேர் அடிக்கடி குறைபட்டு கொள்வதால் சபாநாயகர் முதலில் மகளிர் விவகார துறை அமைச்சர் மருதமூரானை உரையாற்ற அழைக்கிறார். மருதமூரான்  "விலகியோடும் குழந்தையை சுற்றியிருக்கும் தாயின் அக்கறை மாதிரி, 'காதல்' மீதான அக்கறையும் அது இழக்கப்படும் சந்தர்ப்பங்களில் தான் அதிகரிக்கிறது!! " என்று தான் பாராளுமன்றில் நிக்கிறோம் என்பதை உணராது பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடும் நினைப்பில் உரையாற்றுகிறார். மற்ற உறுப்பினர்களும் ரசித்து கொண்டிருக்க பதிவர் சினிமாதுறை அமைச்சர் ஜீ எழுந்து யோவ்வ் இங்க என்ன நடக்குது என்று பெண்கள் மேல் உள்ள வெறுப்பால் கத்த அப்போதுதான்   அரசாங்க பிரதம கொறடா அதிகார மையம் நிருஜா எழுந்து என்ன மருதமூரான் சம்பந்தம் இல்லாமல் கதைக்கிறீர் அமரும் என்கிறார்.

                                                                                                                                             அதை தொடர்ந்து சபாநாயகர், தன்னை (எதிர்க்கட்சி தலைவர் ) பேச அழைப்பார் என்று எதிர்பார்த்த நிரூபனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது சபாநாயகர் எதிர்க்கட்சி பிரதம கொறடா,சமய விவகார அமைச்சர் பதிவர் ஐடியாமணி அவர்களை அழைத்தார். ஐடியாமணியும் எழுந்து மனிதஉரிமைகள் காக்க படவேணும் கல்லால் எறிந்து கொள்ளவது தடைசெய்ய படவேணும், ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கபடவேணும் அனைத்து பெண்களும் முகம் தெரியுமாறு செல்லவேண்டும்,முக்காடு போடக்கூடாது என்று சீரியஸ் ஆக கதைத்து கொண்டிருக்க பின்வரிசையில் கும்மி அடித்து கொண்டிருந்த நான்,மைந்தன் சிவா,பொட்டலம் கார்த்தி ஆகியோர் ஆமாண்ட மச்சான் அப்பத்தானே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கலாம் என்று கைதட்டி ஆரவாரம் செய்தோம்.அப்போ சீரியசா உரை நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் ஆரவாரம் செய்ததால் எல்லோரும் ஒரு முறாய்ப்போடு எங்களை பார்த்தார்கள்.


தொடரும்......


நேரம் இன்மையால் பதிவு குறுகிவிட்டது மன்னிக்கவும்.