Saturday, December 22, 2012

இனிஅவன்- சில யதார்த்தங்கள்,நிறைய மிகைப்படுத்தல்கள்

"2009 போருக்கு பின் முகாம்களில் இருந்து வந்த மக்கள், குறிப்பாக புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகளுக்கும் சமூகத்துக்குமான உறவு அண்மையில் உள்ளூரில் இடம்பெற்ற கைதுகள்/கடத்தல்களால் மீண்டுமொரு முறை பெரியதொரு விரிசலை எதிர்நோக்கியிருக்கிறது :( நேற்று ஒருவருடன் உரையாடும்போது புரிந்து கொண்டேன், ஆனால் தற்போதைய நிலையில் சமூகத்தை பிழை சொல்ல முடியாது, அவர்கள் தாமுண்டு தமது வேலையுண்டு என்று இருப்பதாலேயே தற்காலத்தில் நிம்மதியாக வாழமுடியும். அப்பிடியானதொரு வலையே இப்போது எம்மை சுற்றி பின்னபட்டிருக்கிறது :( இக்கட்டான நிலையில் முன்னாள் போராளிகள்:(" இந்த கருத்தை எனது பேஸ்புக்கில் சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். இந்நிலையில் நேற்றுதான் இனிஅவன் வெளியாகிருந்தது, பல நாள்காளாகவே சமூகவலைத்தளங்களில் புனர்வாழ்வு அ(ழி)ளிக்கப்பட்டு வரும் ஒரு போராளியினை சமூகம் எப்பிடி எதிர்நோக்குகிறது என்ற முன்னோட்டங்களும், எல்லா தளங்களையும் தேடி பயணிக்கவேண்டும் என்ற நோக்கில் இலங்கையில் எடுத்த படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் நேற்று மதியம் ராஜா 2 திரையரங்கில் சென்று பார்த்தேன்.





இதுதான் நான் பார்க்கும் முதல் இலங்கை தயாரிப்பு திரைப்படம், எனக்கு இந்த படத்தை இயக்கிய விருதுகளை பெற்ற அசோக கந்தகமயும் நான் அறிந்திருக்கவில்லை, எனவே நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே படம் பார்க்க சென்றேன், இக்காலங்களில் இப்பிடி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்க செல்வதே நன்மை பயக்கிறது, படம் ஆரம்பிக்கும்போதே ராஜா 2 திரையரங்கின் திரையின் 1/4 பங்கு அளவுக்கே படம் காண்பிக்கபட்டது, ஒலியும் சொல்லிகொள்ளும் படியாக இல்லை, இருந்தும் இவை தொழில்நுட்ப பிரிவை சார்ந்தவையே எமது நாடு அந்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லைதானே என்று விட்டு விட்டேன், படம் ஆரம்பித்து இடைவேளை வரை நன்றாகவே சென்றது, எனது வாழ்நாளில் ஓரிரு வருடங்களை யாழ் மண்ணிலையே கழித்தவன் என்ற ரீதியில் முதல் பாதியில் இயக்குனர் காட்டியவை பெரும்பாலும் என் கண்கூடாகவே நிகழ்ந்தவை என்ற ரீதியில் உறுத்தவில்லை. சகோதர மொழி இயக்குனர் ஒருவர் இவ்வளவு ஆழமாக எடுத்திருக்கிறார் என்று பெருமை பட்டுகொண்டேன், இருந்தும் சில காட்சிகள் ஒவ்வாதமையாகவே காணப்பட்டன, படத்தின் நாயகன் சொந்த ஊருக்கு வரும்போது, அந்த ஊரே இப்பிடித்தான் நிண்டு பார்க்குமா? சிரிப்புதான் வந்தது, அடுத்த காட்சியில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த தகப்பனின் காட்சி தத்ரூபமாகவே தெரிந்தது, அடுத்தது சாதீய பாகுபாடு அந்த பெண்ணின் தகப்பனின் உருவில் யதார்த்ததைதான் காட்டியிருந்தார்கள், அடுத்து அரை காட்சட்டையுடன் வரும் வெளிநாட்டுகாரன், "நாங்கள் மடையங்கள்" என்று நாயகன் சொல்லும் எல்லாம் அப்பட்டமாகவே தெரிந்தது.



இப்பிடி நன்றாகவே போய்க்கொண்டிருந்த படத்தை இரண்டாம் பாதியின் போது அதல பாதாளத்துக்குள் தள்ளி தானும் அரசுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு இயங்கும் ஒருவன்தான் என்பதை வெளிக்காட்டியுள்ளார் இயக்குனர். முற்றுமுழுதாக இராணுவகட்டுபாட்டுக்குள் இருக்கும் யாழ்ப்பாணத்தில் எப்பிடி இவ்வளவு ஆயுத பாவனை சாதாரணமாக இருக்கிறது? இதற்க்குரிய மூலம் எங்கே எதோடு சம்பந்தபட்டது என்று காட்டவில்லையே இயக்குனர்? நான் எங்கோ வாசிச்சது போன்று ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு இனமக்களை இப்படியானவர்கள் என்று முத்திரை குத்துவதை மதவெறி பிடித்த கிறிஸ்தவ இயக்குனர் மாயன் இனத்தவர்களின் பெருமைகளை எல்லாம் மறைத்து நரமாமிசம் சாப்பிடும் கொடூரர்கள்  என்று காட்டுவதன் மூலம் நிறைய உண்மைகளை மறைத்திருந்தார், அதையே இங்கும் இயக்குனர் மிகச்சரியான உளவியலுடன் கையாண்டிருக்கிறார், இந்த படம் சர்வதேச  விழாக்களுக்கு செல்கிறது அங்கு சர்வேதச சமூகத்துக்கு இந்த படத்தின் மூலம் எடுத்து சொல்லபடும் செய்தி என்னவெனில் அந்த படத்தில் வரும் வசனம் போன்றுஎங்களுக்கு புதிய வாழ்க்கை இல்லை பழையதையே மீண்டும் புதுசா தொடங்குறம் அதாவது தமிழர்கள் 2009 ஆயுத போராட்ட முடிவுக்கு பின்னும் அவர்களுக்கு வேறொன்றும் தெரியாது மீண்டும் மீண்டும் ஆயுதகலாச்சாரதுக்குள்ளேயே செல்கின்றனர் என்பதை மிகசரியாக சொல்லுகிறார் அரச நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கும் இயங்குனர்.
                                                                                                                                   மொத்தத்தில் தமிழர்கள் இன்னும் ஆயுத கலாச்சாத்துக்குள் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்று சர்வதேச சமூகத்துக்கு கற்பிக்கவே இந்த படம் எடுக்க பட்டிருக்கிறது, மேலும் படத்தின் இறுதி பகுதியில் டிப்பரில் வந்து உதவி கேட்கும் பாத்திரம் மட்டும் சிங்களமாகவும், படத்தின் ஏனைய பாத்திரங்கள் அனைத்தும் தமிழாக இருப்பதன் மூலம் இயக்குனர் சொல்வது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் இல்லை.இரண்டாவது பாதியில் எனக்கு யதார்தமா தெரிந்தது வீட்டு வளவில் புதைச்சு வைப்பதும், நாயகனின் காதலி AK-47 துப்பாக்கி எடுத்து சுடும்போது, இந்திய சினிமா ரேஞ்சுக்கு இல்லாது உண்மையாக ஒரு சாதாரண பெண் துப்பாக்கியால் சுடும்போது ஏற்படும் உதைப்பு காரணமாக எப்பிடி நிலைதடுமாறுவாள் என்றும் காட்டியிருப்பது மட்டும்தான்.
 


                                       

Friday, October 5, 2012

பில்லா 2

பில்லா 2 பற்றி ஏலவே நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டதால், நான் படத்தை பற்றி எதுவும் உள்ளே சென்று எழுதுவதாக இல்லை, படத்தை பற்றி ஒருசொல்லில் சொல்லுவதானால் நான் படம் பார்த்தவுடனே கீச்சியதை போன்று "மிஞ்சிய ஏமாற்றம்தான்". என்னடா பில்லா2 ன்னு போட்டுட்டு படத்தை பற்றியும் எழுதல, என்னத்தை பற்றி எழுத போறான் எண்டு நீங்க கேட்கிறது தெரியுது, அது வேற ஒண்டும் இல்லைங்கோ நான் யாழ் மனோகரா தியேட்டேர்ல படம் பார்க்க போன கதைதானுங்கோ.


                                                                                                        13ம் திகதி வெள்ளிக்கிழமை உலகமெங்கும் பில்லா 2 வெளியாகியது, இலங்கை,இந்திய ஒரேதின வெளியீடாக யாழ் மண்ணிலும் யாழ்நகரில் மனோகரா திரையரங்கிலும்,அச்சுவேலியில் லிபேட்டி திரையரங்கிலும் பில்லா 2 வெளியாகியது. எனக்கு தெரிஞ்ச வரையில பில்லா 2தான் யாழ்ப்பாணத்திலேயே முதன்முதலாக 2 வேறுபட்ட தியேட்டர்களில் வெளியாகின்றது நினைக்கிறேன்.(அவ்வளவு ரசிகர் பட்டாளம் போல) தற்போது வீட்டை(யாழ்ப்பாணம்) நிற்பதாலும்,தற்போதைய காலகட்ட முன்ணனி நடிகர்களுள் ஏனோ அஜித்தை பிடிக்கும் என்பதாலும், முதல் நாள் முதல் ஷோ பார்க்க முடிவாயிற்று, பதிவர் மருதமூரான் இப்பிடி பார்க்க போகின்றவர்களும் ஒரு வகையில் போர்வீரர்கள்தான் என்று உணர்ந்தநாள், அப்பேர்ப்பட்ட ஒரு போர்க்களம் :P 



முதல் நாள் இரவே நண்பனுடன் கதைத்து மோட்டார்சைக்கிளில் செல்வதாக தீர்மானித்தாயிற்று, எந்த திரையரங்குக்கு செல்வதென்று யோசித்தபோது லிபெர்ட்டி அருகில் இருந்தாலும் ஒருநாளும் சென்றதில்லை என்பதால் மனோகராவுக்கே செல்ல தீர்மானித்து காலையில் நேரத்துடன் கிளம்பியாற்று. ஒருமாதிரி தியேட்டரை படம் ஆரம்பிப்பதுக்கு 2 மணித்தியாலம் முன்னமே சென்றதால் இங்கு( யாழ் நகரில்) முன்னணி நடிகர்களின் வெளியிடன்று நடக்கும் கண்கொள்ளா காட்சியை நேரிடையாகவே பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.ஒருமாதிரி வரிசையில் முன்னுக்கு நின்றபோதுதான் என்னடா பாண்ட் சத்தம் கேட்குது ஏதும் செத்தவீடு வருதோ எண்டு பார்த்தா திரையரங்க வாசலில் வச்சு அடிச்சுகொண்டுநிண்டாங்க்க, அந்த ரோட்டால போய் வந்த சனம்தான் அவதிக்குள்ளாயிற்று.

                                                                  பிறகு கொஞ்ச நேரத்துக்கு பிறகு பார்த்தா ஹையெஸ் வான்களில் படை பட்டாளமா ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்து இறங்கி உள்ள செத்தவீடு நடக்கிற ரேஞ்சுக்கு படம் ஆரம்பிக்கிற வரைக்கும் வெடி போட்டுகிண்டே இருந்தாங்க. பிறகு கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் பார்த்தா ரெண்டு ஓட்டோ ஸ்பீடா  வந்துச்சு, நானும் ஏதோன்னு பார்த்தா அவங்க அஜீத் கட்அவுட்க்கு பாலாபிகேசம் செய்ய பாலாம். கொணர்ந்து ஊத்தி தள்ளினாங்க அவன் பிறந்ததுக்கு இவ்வ்ளோ பால் குடிச்சானோ தெரியாது, அதுக்கு மேல எங்களுக்கும் மேல அபிஷேகம் இல்ல. அப்ப நினைச்சன் இன்னும் என்ன கருமாந்திர்ம் எல்லாம் பார்த்து படம் வேண்டியிருக்கேண்டு, இனிமேல் முதலநாள் இங்க படம் பார்க்க வரதிலைன்னு சபதம் செய்துக்கிட்டேன். பிறகு பார்த்தா தேங்காய் அடிப்பு, ஆயிரக்கணக்கா தேங்காய் சிதறிச்சு.


                பிறகு ஒருமாதிரி அடிச்சு பிடிச்சு டிக்கெட் எடுத்து உள்ள போனா, அங்க எங்கட ஆக்கள் ஹௌஸ்ஃபுல் எண்டா என்பதுக்கு இந்தியாகாரங்களுக்கு வரைவிலக்கணம் கொடுக்கிரமாதிரி இருந்தாங்க. நடைபாதை,படி எண்டு எல்லா இடமும் ஆக்கள் நகரமுடியாநிலை ஏதோ பல்கனி டிக்கெட் கிடைச்சதால ஓரளவு நிம்மதியா படம் பார்க்க முடிஞ்சுது.இதில என்ன அதிசயம் என்னண்டா வெளிநாட்டில இருந்து வந்த குடும்பம் இந்த கூட்டத்துக்குள்ள வந்து நிண்டு படம் பார்த்ததுகள்.படம் நேரத்துக்கு தொடங்குர வாடிக்கை இல்லை என்பதால் பாட்டு போய்க்கொண்டிருந்தது அதுக்கு திரைக்கு முன் மேல ஏறி ஆட பிறகு சிவாஜி பட ஆஃபிஸ் ரூம்போல ஆக்கள் வந்துதான் கலைச்சாங்க :) ,இப்பிடி படம்பார்த்து வரவேண்டியதாபோச்சு

வல்வெட்டித்துறை நகரசபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்.

நேற்றைய முன்தினம் மதியத்துக்கு பின்னரான பகுதிகளில் இலத்திரனியல் ஊடங்கங்களிலும், நேற்று காலை பத்திரிகைகளிலும் ஆக்கிரமித்திருந்த செய்தி இதுதான் //வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரபிதா ந.அனந்தராஜ்க்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வல்வெட்டித்துறை உபதலைவர் சதீஸ் அவர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரரேரணை ஒரு மேலதிக வாக்கால் நிறைவேற்றப்பட்டது//. நான் நினைக்கிறேன் 'வல்வெட்டித்துறை' என்ற நாமம் நேற்று,இன்று,நாளை என்றுமே செய்தி தீனிக்கு அவலாக இருக்கும் என்று. வல்வெட்டிதுறையிலேயே பிறந்து, வளர்ந்தவன் என்றாலும் இற்றைவரை இது சம்பந்தமாக எந்தவொரு சமூகவலைத்தளத்திலும் கருத்திட்டது கிடையாது. எனினும் இன்று நினைக்கையில் அதுவே எனது பிழை என்று எண்ண தோன்றுகிறது.எனது ஆளுமைக்கு எட்டிய வகையில்,நான் இங்கே இருந்து கண்ணூடாக பார்த்து,செவிவழி கேட்டதை கொண்டு இதன் பின்னணியில் உள்ள தார்ப்பரியங்களை கீழே வரையலாம் என்று நினைக்கிறேன்.

                                                                                                                              இந்த விடயத்தை வேட்பாளர் தெரிவு ஆரம்பித்தநாட்களில் இருந்து எனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.முதலில் தேர்தல் அறிவிக்கபட்ட உடனே ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன, பணத்துக்காக விலை போய் யானை கட்சியில் இருந்து  கூட எமது ஊரிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர் , ஆனால் இறுதியில் அவர்களே அவர்களுக்கு வாக்கு போட்டார்களா என்பதே கேள்விக்குறி, அடுத்தது ஈழமக்கள் ஜனநாயக கட்சி, அதைபற்றியும் நான் இங்கு பேசப்பபோவதில்லை ஏனெனில் உண்மையாகவே தெரிவுசெய்யபட்ட இருவரை தவிர வேறு யார் போட்டியிட்டாளர்கள் என்றே எனக்கு தெரியாது.

                                        அடுத்து முக்கியமான தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கு வந்தால் இவர்கள் அனைவரும் எந்தவிதத்தில் தலைமப்பீட்டத்தால் தெரிவு செய்யபட்டார்கள்? என்று கூட்டமைப்பு விளக்கவேண்டும். ஒன்று கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர்கள் இருவரின் விருப்பத்துக்கு(?) அமைய ஒருவர் தெரிவு செய்யபட்டு அவர் மூலமாக இன்னும் சிலர் தெரிவுசெய்யபட்டிருந்தனர். ஆனால் அவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்தது அவர்களின் எதிர்காலத்திட்டங்களை கருத்தில்கொண்டு அதாவது சிவாஜிலிங்கம் நகரசபையில் தெரிவு செய்யப்படபோவது உறுதியாக இருந்தாலும் வாக்குகளை உடைத்து அவருக்கு அவரின் ஊரிலேயே வாக்குபலம் இல்லை என்று காட்டுவதன் மூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றதேர்தல்களில் அவரை தமக்கு போட்டியாளர் இல்லாமல் ஆக்கிகொள்வது. இது அவர்களால் பிரயோகிக்கபட்ட அந்த உறுப்பினருக்கு அவ்வளவு தெரியாமல் இருக்க அவர் ஒன்றும் கல்விதகுதிகள் குறைந்தவர் அல்ல.மற்றதோர் தெரிவு வழமையான தமிழ்தேசியகூட்டமைப்பு என்பதை உணர்த்துவதுக்கு வெள்ளைதலைமுடிகாரரையும் தெரிவு செய்திருந்தது,இதுக்கு அவர் ஊரின் பிரபல பாடசாலை பழையமாணவர்சங்க பதவிகளில் கூட இருந்திருக்கிறார், இருந்தும் அவர் ஊருக்கு வரும் நாட்களை எண்ணலாம். அப்பிடியான ஒருவரை ஏன் தெரிவுசெய்கிறீர்கள்? மிகுதி போட்டியாளர்களும் முன்னணி வேட்பாளரின் அடுத்தவர் மூலம் தெரிவு செய்யபட்டனர், சுட்டிகாட்டவேண்டிய நல்ல தெரிவு யாதெனில் கூட்டமைப்பின் விதிகளுக்கு மாறாக ஒரு இளம் வேட்பாளரும் தெரிவு செய்யபட்டிருந்தார்.இவற்றின் மூலம் யான் சொல்லவருவது இனி வரும் தேர்தல்களிலாவது கூட்டமைப்பின் உயர்பீடம் சரியான தெரிவுகளை மேற்கொள்ளவேண்டும்,புது இளம் ரத்தங்களை பாய்ச்சவேண்டும். தெரிவு செய்யும் ஒவ்வொரும் இதுவரைகாலமும் சமூக,கலை,கலாச்சார என்னமாதிரியான பங்களிப்புகள் வழங்கியிருக்கின்றனர் என்று நோக்கப்படவேண்டும்.
                                                                                       அடுத்து தேர்தலும் முடிந்தது, நானும் ஒரு வாக்காளனாக எனது ஜனநாயக கடமையை செவ்வனவே நிறைவேற்றியிருந்தேன்.இருந்தும் வாக்களிப்புவீதம் குறைவாகவே இருந்தது.முடிவுகள் வந்தன, கூட்டமைப்பில் இருந்து 7 பேரும்,ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து 2 பேரும் தெரிவு செய்யபட்டனர்.அடுத்த கேள்வி யார் நகரபிதா என்பது, தேர்தலுக்கு முன்பே கட்சி தெரிவுசெய்துவிட்டதாகவும் சுழற்சிமுறையில் இருவர் பதவிவகிப்பார்கள் என்று ஊகங்கள் வெளியிடபட்டன,இருந்தும் இறுதியில் கூடியவாக்குகள் பெற்றவர் என்ற ரீதியில் ந.அனந்தராஜ் தலைவராக தெரிவுசெய்யபட்டார். அன்றிலிருந்தே நகரபிதாக்கும்,சிவாஜிலிங்கத்துக்கும் இடையில் பனிப்போர் மூண்டது, கீரியும்,பாம்பும் ரேஞ்சுக்குதான் இருந்தது, அதுவும் ஊரில் நடந்த பொதுநிகழ்ச்சிகளில் சிலவற்றுக்கு நானும் போயிருந்தேன். அங்கே நடப்பவற்றை பார்க்கும்போது இதையெல்லாம் ஏன் படங்களில் காமெடி காட்சிகளில் சேர்க்ககூடாது என்ற அளவுக்கு இருந்தது.

                                        இப்பிடி போய்க்கொண்டிருந்தநிலையில்தான் மாட்டிறைச்சிகடையை ஏலம் விடுவதில் உறுப்பினர் ஒருவர் கையூட்டு பெற்றுகொண்டு 2ஆம் கேள்விக்காரருக்கு கொடுப்பதுக்கு சம்மதித்தது மட்டுமில்லாமல் முத்திரையில் கையொப்பம் இட்டும் கொடுத்திருந்தார், இது இணையதளங்களிலும்,குடாநாட்டு பத்திரிகையிலும் வெளியாக பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.இதுவே நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடபட்ட முதலாவது காரணம். இந்த பிரச்சினை காலவோட்டத்தில் மறைந்துவிட்டது, இவ்வளவு ஒரு பெரிய குற்றசாட்டு ஊடகங்களில் வெளியானபோதும் கூட்டமைப்பின் உயர்பீடம் இதுக்கு என்ன நடவடிக்கை எடுத்தது? சம்பந்தபட்ட உறுப்பினர் ஏன் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தபடவில்லை? இதிலிருந்தே ஒன்று விளங்கியது கூட்டமைப்பின் உயர்பீடமும் இங்கே நடக்கும் பிச்சு,புடுங்கல்களை விரும்பியே வந்துள்ளது.

                                                                           இறுதியாக இவ் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வந்தால் அதில் குறிப்பிடபட்டிருந்த இரண்டாவது காரணம் வல்வெட்டித்துறை பொதுஅமைப்புகளின் மீது அபாண்ட குற்றசாட்டுக்கள் சுமத்தியமை,அரசாங்க பாடசாலை அதிபர்,ஆசிரியர் ,தனிநபர்களை அவமதித்தமை.இதுபற்றி முறைப்பாடுகள் கிடைக்கபெற்றதாகவும் அறிந்துகொண்டேன்.இதில் ஓரளவு யதார்த்தமும்தான் இருக்கிறது, அண்மையில் நகரசபைக்குட்பட்ட புகழ்பெற்ற முருகன் ஆலயதிருவிழா ஒன்றின் போது காவடிக்கு இடையூறு எற்ற்படுத்தியிருந்தார் என்று செவி வாயிலா அறிந்திருந்தேன்.அடுத்து நகரபிதா வல்வெட்டித்துறை நகரபிதாதான், அமெரிக்க ஜனாதிபதியல்ல அதை கருத்தில் கொள்ளவேண்டும், தேவையில்லாமல் எல்லா விடயங்களிலும் தமது சுயலாபத்தை கருத்தில் கொண்டு மூக்கை நுழைத்து, திருவிழா கூட்டத்தில்  தொலைந்து போன பிள்ளை போல நடுவில் நின்று மூக்குடைபடுவதை தவிர்க்கவேண்டும்.அடுத்தது சிவாஜிலிங்கம் எடுத்ததுக்கெல்லாம் எதிர்ப்பு அரசியலை பாவிக்ககூடாது. ஒரு சில நல்ல வேலைத்திட்டங்கள்தான் நிறைவேறும், அவற்றை ஆதரிக்கவேண்டும்.

                                                                                              அடுத்தது இவ்வளவு எல்லாம் நடைபெறும்போது இது பற்றி செய்தி வெளியிடும் இணையத்தளங்கள் பற்றி சொல்லியாகவேண்டும்.இன்று பேஸ்புக்கில் ஒரு கமெண்ட் பார்த்தேன் //வல்வெட்டித்துறை நகர சபையில் மீண்டும் குழப்பம் - கனடிய ஊடகங்களின் நேற்றைய முக்கிய செய்தி// எனக்கு பார்த்தஉடனே சிரிப்புதான் வந்தது. இவ் இணையயதளங்களின் நோக்கம் வாசகர்களை கவருவதான், அதற்காக யதார்த்தம் என்ன என்பதை வெளிபடுத்தாமல் தமது ஊகங்களின் மூலம் திரிபுபடுத்தபட்ட கண்ணோட்டத்தை புலம்பெயர்நாடுகளில் உள்ளவர்களுக்கு வழங்குவதன் மூலம் இங்கே முற்றிலும் ஒரு குழப்பமான நிலையே இருக்கின்றது என்ற மாயை ஏற்படுத்துவதன் மூலம், இங்கு வரவிருக்கும் உதவிதிட்டங்களைதடுக்க முனைகிறார்களா? அடுத்து மேற்படி இணையத்தளங்களின் உரிமையாளர்கள் யார் என்பதும் சந்தேகமாகவே உள்ளது. அடுத்து ஊர் பெயரில் இயங்கும் இணையத்தளங்கள் முக்கிய இருவரின் ஒவ்வொருவருக்கும் பக்கசார்பாகவே இயங்குகின்றது போலத்தோன்றுகிறது இவற்றின் செய்தி தயாரிப்பு முறைகளை பார்க்கும்போது எண்ணவைக்கிறது.

                                                                          அடுத்து இவ்வளவு நடந்தும் தமது கட்சி ஆட்சியில் உள்ள நகரசபை ஒன்றில், நகரபிதாவுக்கு எதிராக தமது கட்சிஉறுபினர்களே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும்போது கட்சியின் தலைமைப்பீடம் எங்கு பாத்துகொண்டிருத்தார்கள்? அல்லது தலைமைப்பீடத்துக்கு  இது பற்றி முன்கூட்டியே தெரியுமா? நேற்று முன்தினம் இணையத்தளம்,நேற்று பத்திரிகையில் செய்தி வெளியாகிருந்தபோதும், கூட்டமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவரும் ஏன் இத்தருணம் வரை ஒரு விளக்கமும் வழங்கவில்லை? குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க கூட்டமைப்பு முயல்கிறதா? இப்பிடி ஒரு குழப்பமான நிலையிலே வைத்திருப்பதன்மூலம் இப்பிரதேசத்தில் இருந்து உறுதியான அரசியல் பேரம் பேசும் சக்தி வருவதை தடுக்க முனைகிறதா? தங்களின் இடங்களுக்கு போட்டியாக வரும் என்று அஞ்சுகிறார்களா? எவ்வளவு நாளைக்குத்தான் தேசியத்தின் மூலம் முன்னொருகாலத்தில் கிடைத்த ஆணையை வைத்து அரசியல் நடத்தபோகிறீர்கள்? மாற்றுதெரிவு இல்லை என்பது விரைவில் பொய்யாக்கபோகிறீர்களா?

Monday, January 30, 2012

தைத்திருநாளில் வல்வையில் நடக்கும் மார்கழி பிள்ளையார் எடுத்தலும்,பட்ட போட்டியும்

 தைத்திருநாள் அன்று வல்வையில் மாலைநேரம் பட்டபோட்டியும், பின் இரவு நெடியகாடு இளைஞர்களால் மார்கழி பிள்ளையார் சேகரிக்கும் நிகழ்வும் வருடாவருடம் நடைபெறும். இடையில் நாட்டில் நிலவிய போர்க்கால நிலமைகளால் தடைப்பட்டிருந்தது. போன வருடம் முதல் பட்டபோட்டியும்,அதுக்கு சில வருடங்கள் முன்பிருந்து மார்கழி பிள்ளையார் எடுக்கும் நிகழ்வும் நாட்டு நிலமைகள் ஓரளவு சீரானதால் தற்போது நடைபெற்று வருகின்றன.
















1.மார்கழி பிள்ளையார் எடுத்தல்
தைத்திருநாள் அன்று இரவு வேளையில் நெடியகாடு இளைஞர்களால் இந்த மார்கழி பிள்ளையார் எடுக்கும் நிகழ்வு நடாத்தபடுகிறது.இது இற்றைக்கு ஏறத்தாள 70 வருடங்களாக நடைபெற்று வருகிறது.இது நெடியகாடு பிள்ளையார் கோவிலில் ஆரம்பித்து வல்வெட்டித்துறை சந்தி வழியாக நேரே ஆதிவைரவர் கோவில் வரை சென்று பின் அங்கிருந்து வல்வெட்டித்துறை சந்தி வந்து திரும்பி தெணியம்பை வழியாக மருதடி வரை சென்று பின் அங்கிருந்து மீண்டும் சந்தி வந்து நெடியகாடு வழியாக ஊறணி வரை ஊர்வலமாக சென்று ஊறணி தீர்த்தகடலில் பிள்ளையார் கரைத்தலுடன் நிறைவு பெறும்.
                               




































                            ஆரம்ப காலங்களில் சிறிய தேர் ஒன்றை இழுத்து சென்றே பிள்ளையார் சேர்த்து கடலில் சேர்ப்பது வழக்கமாக இருந்துள்ளது. அதன் நினைவாக இப்போதும் இரண்டாவது படத்தில் மேலே உள்ளது போன்று லைட் என்ஜின் சகடையின் முன்புறம் தேர் போன்று அலங்கரிக்கபட்டு இருக்கும்.நடக்கும் இந்த ஊர்வலத்தில் ஒவ்வொரு வருடமும் நெடியகாடு இளைஞர்கள் வித்தியாசம் வித்தியாசமான பிரமாண்ட டிராகன்கள் மாதக்கணக்காக மினக்கெட்டு செய்வார்கள். அத்துடன் மாறுவேடமணிந்த இளைஞர்களும் பறை வாத்தியம் முழங்க ஊர்வலத்தில் செல்வார்கள்.அண்மைய காலங்களில் செய்யபட்ட உருவங்கள் எனது கமேராவில் சிக்கியதை நீங்கள் காணலாம்.



2.பட்ட போட்டி
பட்ட போட்டியும் ஏறத்தாள 50 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலங்களில் வல்வை சனசமூக நிலையத்தால் ரேவடி கடற்கரையிலேயே நடைபெற்று வந்துள்ளது. பின் இப்போது விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்/உதயசூரியன் விளையாட்டு கழகத்தால் உதயசூரியன் உல்லாச(?) கடற்கரையில் நடைபெற்று வருகிறது. 94 பருவகால பகுதிக்கு பிறகுதான் இங்கு மாறியிருக்கவேண்டும் என நினைக்கிறேன் ஏன் எனில் 94இல் பருவகால பகுதியில் நடந்த பட்ட போட்டியின்போதே நான் பட்டம் பார்த்து கொண்டு அப்பிடியே போய் கடலில் விழுந்ததாக சொல்லுவார்கள். இங்கு பல இடங்களில் இருந்தும் வந்து பட்டபோட்டியில் கலந்து கொள்வார்கள், பட்டத்தின் அமைப்பு,நூலின் நீளம் என நடுவர்களால் தெரிவுசெய்யபட்டு பெறுமதிமிக்க பரிசில்கள் ஒவ்வொரு முறையும் வழங்கப்படும்.ஒவ்வொரு முறையும் வித்தியாசம் வித்தியாசமான பட்டங்கள் கலந்து கொள்ளும், என்ன இருந்தும் ஆரம்ப காலங்களில் இருப்பது போன்று இருப்பதில்லை, இம்முறை பொங்கல் பானை,பாறாத்தல்,கொக்கு,சுழலும் இரட்டை பெட்டி, 60 அடி(?) பாம்பு பட்டம்,கிபீர்,டிராகன் உள்ளிட்ட பட்டங்கள் கலந்து கொண்டிருந்த போதிலும் காலத்தின் கோலமோ என்னமோ தெரியவில்லை, சிறுவன் ஒருவனால் பியர் டின் பட்டமும் கொண்டுவரபட்டிருந்தது.



















Thursday, January 12, 2012

நண்பன்-ஆல் இஸ் வெல்

இன்று முதல் நாள் முதல் ஷோ முதல்முதலாக விஜய் படம் பார்க்க சென்று இருந்தேன், மேலும் 3 இடியட்ஸ் ஹிந்தியில் கைப்பற்றிய மாபெரும் வெற்றி மேலும் ஷங்கர் படம்,ஏலவே வெளிவந்து ஹிட் ஆன பாடல்கள் என்று மாபெரும் எதிர்பார்ப்புகளுடன்தான் சென்று இருந்தேன். ஆனால் எந்தவித ஏமாற்றத்தையும் அளிக்காது முற்று முழுதாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தது.
 
உங்களுக்கு கதை சொல்லவேண்டிய அவசியம் இல்லை 3 இடியட்ஸ் ரீமேக்தான்.தமிழ் பதிப்பில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, அனுயா, சத்யன் , சத்தியராஜ்,எஸ்‌ஜெசூரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இயக்கம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தெய்வதிருமகள் விஜய் போல கதை, தான் என்று போடாமல் தனது இயக்கத்தின் மூலமாகவே எல்லோரையும் கட்டி போட்டுஇருக்கிறார். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா அபாரமாக செய்திருக்கிறார் பாடல் காட்சிகள் ரசிக்க வைத்தன.

மேலும் முதலே கவர்ந்த பாடல்களான அஸ்கு லஸ்கா,ஜெல்லி பெல்லி பாடல்கள் காட்சி அமைப்பின் பின் மேலும் பிடித்து தொலைக்கின்றன. அதிலும் அஸ்கு லஸ்காவில் வரும் மாடர்ன் சாங்க்,ரோயல் சாங்க்,குத்து பாடல் என்று காண்பிப்பதன் மூலம் ஷங்கர் தனது பிம்பத்தை உடைத்துள்ளார்.அடுத்து ஜெல்லி பெல்லி இலியானாவின் இடுப்பாட்டம் ரொம்பவே கலக்கலாக உள்ளது. விஜய் பற்றி பாடல் காட்சிகளில் சொல்லவே தேவையில்லை அந்த மாதிரி கலக்கி உள்ளார். மேலும் சத்யன் நிகழ்த்தும் அந்த வரவேற்புரை சிரித்து சிரித்து முடியவில்லை.கலவி-கல்வி,கற்ப்பித்தல்-கற்பழித்தல் சரியாக பொருந்தி போகிறது. மேலும் காதல் வந்தால் எப்பிடி இருக்கும் என்று விஜய் இலியானாவிடம் சொல்லும்போது அதுக்கு இலியானா இதெல்லாம் ஷங்கர் படங்களில் மட்டும்தான் என்று கூறும்போது திரையரங்கில் என்ன வரவேற்பு.



விஜய் அபாரமாக நடித்துள்ளார் அதே போலவே ஸ்ரீகாந்த்,ஜீவா,அந்த மில்லிமீட்டர் பையன்,சத்தியராஜ்,இலியானா,அனுயா என அனைவரும் கலக்கியுள்ளனர். கேடி படத்தில் அறிமுகமாகிய இலியானாவுக்கும் இப்போதும் நிறைய வித்தியாசம், விஜய்க்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு இவ்வாண்டு கல்யாணகோலத்தில் வந்துபோவார். பெல்லி டான்ஸ் அருமையாக செய்துள்ளார். மொத்தத்தில் நண்பன் விஜய்,ஷங்கருக்கு மாபெரும் வெற்றி. ஷங்கரிடம் இருந்து எந்திரன் போன்ற படங்களை விட நண்பன் போன்ற படங்களையே எதிர்பாக்கிறேன்.இன்றுதான் தியேட்டரில் எனது வாழ்நாளில் முதல்முதலாக சிரிச்சு,ரசித்து ஆத்ம திருப்தியாக படம் பார்த்தேன்.


                                                                 



















                             


















                                                                                                                                                               

Monday, January 2, 2012

இலங்கை பாராளுமன்றில் பதிவர்கள்-2

 ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கபடவேணும் அனைத்து பெண்களும் முகம் தெரியுமாறு செல்லவேண்டும்,முக்காடு போடக்கூடாது என்று சீரியஸ் ஆக கதைத்து கொண்டிருக்க பின்வரிசையில் கும்மி அடித்து கொண்டிருந்த நான்,மைந்தன் சிவா,பொட்டலம் கார்த்தி ஆகியோர் ஆமாண்ட மச்சான் அப்பத்தானே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கலாம் என்று கைதட்டி ஆரவாரம் செய்தோம்.அப்போ சீரியசா உரை நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் ஆரவாரம் செய்ததால் எல்லோரும் ஒரு முறாய்ப்போடு எங்களை பார்த்தார்கள்.நாங்கள் கப்-சிப் என அமைதியானோம்.சபாநாயகர் ஜனா எங்களை எச்சரிக்கை செய்தார்.எங்களுக்கு வந்ததே ஒரு கோபம், எனினும் அடக்கிகொண்டு நானும் மைந்தன் சிவாவும் பிளான் போட்டோம் இங்க இருக்கிற செங்கோலை ஒரு நாள் சுட்டுட்டு போய் எமது திறமையை நிரூபிக்கோனும் என்று.
                                         அடுத்து சபாநாயகர் மூத்த பதிவர்,முதியோர் நலன்,சுற்றுலா அமைச்சர் கானபிரபாவை உரையாற்ற அழைத்தார்.கானபிரபா அண்ணனும் தான் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறோம் என்பதை மறந்து ட்விட்டரில் இருப்பதாய் எண்ணி காலை இனிதே விடிந்தது  என்று பேச்சை ஆரம்பித்தார் சபையினர் எல்லோரும் கல கலவென சிரித்தனர் அப்போ தொல்லியல்,கலாச்சார அமைச்சர் மெர்வின் போன்று சொசெசூ காரியங்களில் ஈடுபடும் இன்னோர் மூத்த பதவி பதிவர் வந்தியதேவனும் பாராளுமன்றத்தில் இருப்போம் என்பதை உணராது பெரியப்பூ இப்ப விடிஞ்சு நேரமாச்சு என்றார், ஏலவே பாராளுமன்றத்தில் மாறி பேசிவிட்டோம் என்று கடுப்பில் இருந்த கானபிரபா அண்ணனுக்கு வந்தியதேவன் பெரியப்பூ என்று கூறி தனது வயதை வெளிக்காட்டி விட்டார் என்று மேலும் கடுப்பில் இருந்தார்.இருந்தும் தன்னை சுதாகரித்து கொண்டு பேச்சை தொடர்ந்தார், நாட்டிலுள்ள முதியவர்கள் உடல்நலத்துடன்  வாழ நாடு முழுதும் ஜிம் பயிற்சி நிலையங்கள் அமைத்து காலையும் மாலையும் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தான் இவ்வாறு ஜிம் செய்வதால் இப்போதும் இளமையாக இருப்பதாக கூறி முதியவர் என சபைக்கு தெரியவந்தாலும் இள ரத்தமாக காட்ட இப்படி பீலா விட்டார். மேலும் சுற்றுலா அமைச்சும் தன்னுடையது என்பதால் அது தொடர்பாக தொடர்ந்து பேசினார் தான் இப்படி இளமை துள்ளலாக இருப்பதால்தான் பாங்கொங்க் அங்கு இங்கு என்று பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் தன்னை கேரள கன்னியர்கள் பார்ப்பதாக கூறினார்.
                                                                                                                                                            இப்படியாக கானபிரபா அண்ணே உரையாற்றி முடிந்ததும் அடுத்து சபாநாயகர் போக்குவரத்து, பல்கலைதுறை அமைச்சர் அனுதினன் அவர்களை உரையாற்ற அழைத்தார்.வணக்கம் நண்பர்ஸ் என அனுதினன் தான் ட்விட்டரில் வந்து போறமாதிரி பேச்சை ஆரம்பித்தார், அப்போ இடைமறித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் இம்முறை பல்கலைதெரிவில் அநீதி இழைக்கப்ப்ட்டுளது இதுக்கு நீங்க என்ன பதில் அளிக்க போகின்றீர்கள் என சீரியஸ் ஆக கேள்வி கேட்டார் ஆனால் அனுதினனோ யார் வந்தால் நமக்கென்ன வரும் பிகர்களை சைட் அடிக்கோனும் நமக்கென்ன முடியுமோ அதைதானே பண்ணனும் நான் இந்த வருசத்தையே வெடிக்கு பயந்து ஒதுங்கும் பெண்களை சைட் அடிச்சே ஆரம்பிச்சேன் அப்ப இந்த வருஷம் கொண்டாட்டம்தான் என்று கூறினார், இதை கேட்ட சபாநாயகர் ஜனா என்னது பல்கலை அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பேசுகிறீர் என்று கேட்டார் அதுக்கு அனுதினன் 
என் சில நண்பர்கள் அநியாயத்துக்கு நல்லவர்களாகஇருப்பதால், என்னையும் அப்படியே பாக்கிறார்கள். #நான்_பொறுப்பல்ல என்று தனது பாணியில் பதில் அளித்தார். சரி இதை விடும் உமது அடுத்த அமைச்சு போக்குவரத்து துறை பற்றி பேசுவோம் என்று கூறினார். தனதுரையை தொடர்ந்த அனுதினன் ஆமாம் நான் இந்த அமைச்சை மிகவும் கவனமாக கையாளுகிறேன் நான் பஸ்ஸில்  எல்லா இடமும் செல்லும்போதும் சந்திக்கு சந்தி அப்டேட் கொடுத்து கொண்டிருக்கிறேன் அப்ப பதிவர் வந்தியதேவன் அப்ப என்ன நீர் பஸ் மாமாவா என கேட்க சபையே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

தொடரும்.......