இன்று முதல் நாள் முதல் ஷோ முதல்முதலாக விஜய் படம் பார்க்க சென்று இருந்தேன், மேலும் 3 இடியட்ஸ் ஹிந்தியில் கைப்பற்றிய மாபெரும் வெற்றி மேலும் ஷங்கர் படம்,ஏலவே வெளிவந்து ஹிட் ஆன பாடல்கள் என்று மாபெரும் எதிர்பார்ப்புகளுடன்தான் சென்று இருந்தேன். ஆனால் எந்தவித ஏமாற்றத்தையும் அளிக்காது முற்று முழுதாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தது.
உங்களுக்கு கதை சொல்லவேண்டிய அவசியம் இல்லை 3 இடியட்ஸ் ரீமேக்தான்.தமிழ் பதிப்பில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, அனுயா, சத்யன் , சத்தியராஜ்,எஸ்ஜெசூரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இயக்கம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தெய்வதிருமகள் விஜய் போல கதை, தான் என்று போடாமல் தனது இயக்கத்தின் மூலமாகவே எல்லோரையும் கட்டி போட்டுஇருக்கிறார். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா அபாரமாக செய்திருக்கிறார் பாடல் காட்சிகள் ரசிக்க வைத்தன.
மேலும் முதலே கவர்ந்த பாடல்களான அஸ்கு லஸ்கா,ஜெல்லி பெல்லி பாடல்கள் காட்சி அமைப்பின் பின் மேலும் பிடித்து தொலைக்கின்றன. அதிலும் அஸ்கு லஸ்காவில் வரும் மாடர்ன் சாங்க்,ரோயல் சாங்க்,குத்து பாடல் என்று காண்பிப்பதன் மூலம் ஷங்கர் தனது பிம்பத்தை உடைத்துள்ளார்.அடுத்து ஜெல்லி பெல்லி இலியானாவின் இடுப்பாட்டம் ரொம்பவே கலக்கலாக உள்ளது. விஜய் பற்றி பாடல் காட்சிகளில் சொல்லவே தேவையில்லை அந்த மாதிரி கலக்கி உள்ளார். மேலும் சத்யன் நிகழ்த்தும் அந்த வரவேற்புரை சிரித்து சிரித்து முடியவில்லை.கலவி-கல்வி,கற்ப்பித்தல்-கற்பழித்தல் சரியாக பொருந்தி போகிறது. மேலும் காதல் வந்தால் எப்பிடி இருக்கும் என்று விஜய் இலியானாவிடம் சொல்லும்போது அதுக்கு இலியானா இதெல்லாம் ஷங்கர் படங்களில் மட்டும்தான் என்று கூறும்போது திரையரங்கில் என்ன வரவேற்பு.
உங்களுக்கு கதை சொல்லவேண்டிய அவசியம் இல்லை 3 இடியட்ஸ் ரீமேக்தான்.தமிழ் பதிப்பில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, அனுயா, சத்யன் , சத்தியராஜ்,எஸ்ஜெசூரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இயக்கம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தெய்வதிருமகள் விஜய் போல கதை, தான் என்று போடாமல் தனது இயக்கத்தின் மூலமாகவே எல்லோரையும் கட்டி போட்டுஇருக்கிறார். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா அபாரமாக செய்திருக்கிறார் பாடல் காட்சிகள் ரசிக்க வைத்தன.
விஜய் அபாரமாக நடித்துள்ளார் அதே போலவே ஸ்ரீகாந்த்,ஜீவா,அந்த மில்லிமீட்டர் பையன்,சத்தியராஜ்,இலியானா,அனுயா என அனைவரும் கலக்கியுள்ளனர். கேடி படத்தில் அறிமுகமாகிய இலியானாவுக்கும் இப்போதும் நிறைய வித்தியாசம், விஜய்க்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு இவ்வாண்டு கல்யாணகோலத்தில் வந்துபோவார். பெல்லி டான்ஸ் அருமையாக செய்துள்ளார். மொத்தத்தில் நண்பன் விஜய்,ஷங்கருக்கு மாபெரும் வெற்றி. ஷங்கரிடம் இருந்து எந்திரன் போன்ற படங்களை விட நண்பன் போன்ற படங்களையே எதிர்பாக்கிறேன்.இன்றுதான் தியேட்டரில் எனது வாழ்நாளில் முதல்முதலாக சிரிச்சு,ரசித்து ஆத்ம திருப்தியாக படம் பார்த்தேன்.
6 comments:
வாழ்த்துக்கள் தம்பி முதல் நண்பன் விமர்சனம் இதுதான்.
dei arivuketta moodhevi ethuku theva illama deivatirumagal padatha iluykura inga..........
//வந்தியத்தேவன் said...
வாழ்த்துக்கள் தம்பி முதல் நண்பன் விமர்சனம் இதுதான்.//
நன்றி அண்ணா.
// Anonymous said...
dei arivuketta moodhevi ethuku theva illama deivatirumagal padatha iluykura inga..........//
மனச்சாட்சி இல்லாமல் கதை, விஜய் என்று போட்டாரே அதுதான்
///மனச்சாட்சி இல்லாமல் கதை, விஜய் என்று போட்டாரே அதுதான்///
Ne antha padam paathiya illaya athula avaru kadhai vijay nu podave illa ...written and directed by vijay nu than potaaru..athuvum "i am sam" onum blockbuster laam kedaityaathu it was a flop and athoda hindi remake "main aise he hoon" intha maadiri utter flop movie ah remake panradhukum un baashaila copy adikarthukum dhill venum
வாழ்த்துக்கள்
Post a Comment