A9 பாதையூடான இந்தபஸ் சேவை பற்றி சொல்ல வருவது 2009 இறுதி யுத்தம் முடிந்த பின்னர் பாதை திறந்தபின்தான், அதோடு இக்காலகட்டத்தில்தான் யாழ்-கொழும்பு பஸ்கள் ஆகா ஓகோ எண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. முன்பு சமாதான காலத்தில் பெரும்பாலும் வீட்டு வாசலில் ஏத்தி வீட்டு வாசலில் இறக்கி விடும் ஹையேஸ் வான்களையே மக்கள் பெரும்பாலும் விரும்பியிருந்தனர் அக்கால பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக அத்தோடு யாழில் இருந்து கொழும்பு செல்வோருக்கு கொழும்பு தெரிந்திருக்கவில்லை இன்று நிலமை வேறு.
சரி நான் விடயத்துக்கு நேரடியாக வருகின்றேன் கல்வி,வேலை நிமித்தமாக 2010களின் இறுதியில் இருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்து இருக்கிறேன் இருந்தும் குறைந்தது இருவாரத்துக்கு ஒரு முறை யாழ்ப்பாணம் சென்றே வருகின்றேன். ஆரம்பத்தில் ஒரு சில பஸ்களே சேவையில் ஈடுபட்டிருந்தன வடமராச்சிக்கு TIPTOP என்ற பஸ் மட்டுமே, நான் வல்வெட்டித்துறைக்கு வீட்டுக்கு போவதானால் ஒன்று நெல்லியடியில் இறங்கி யாரையும் ஃபோன் பண்ணி கூப்பிட்டு மோட்டார்சைக்கிளில் போகவேண்டும் இல்லை பருத்திதுறையில் இறங்கி 751 பஸ்ஸில் போகவேண்டும். பின் அங்க இருந்து வரும்போது வீட்டு வாசலில் ஏற்றுவார்கள் பருவாயில்லை.
அந்த நாட்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம், அடுத்து வெளிநாட்டுகாரன் எங்கட ரோட்டில சோறு போட்டு சாப்பிடலாம் எண்டு சொல்ல நம்மூர்காரர் எங்கட நாட்டு ரோட்டில சொதியும் ஊத்தி சாப்பிடலாம் எண்ட ரேஞ்சுக்குதான் ரோடு, ரோடு எண்டு ஒண்டு இருந்ததா எண்டு தெரியல? ஒவ்வொரு முறை போய் வரும்போதும் புழுதி புயல்ல அகப்பட்ட மாதிரிதான் இருக்கும். பஸ் அரைசொகுசு சாய்க்க கூடிய சீட்தான் இருந்தும் ஓரளவு முன்னுக்கு சீட் கிடைக்கலையோ உங்கள் கதை அதோ கதிதான் வந்து சேர முதல் நாரி பெண்ட் எடுத்திரும் அந்தரத்திலதான் பஸ்ல போய் வருவீங்க. அப்புறம் பஸ் சீட் புக் பண்ணினா அதில இன்னொருதனுக்கு புக் பண்ணுவானுக, இல்ல வேற சீட்ல புக் பண்ணுவானுக இருந்தும் நாங்களும் யாரும் வயசு போனவங்க இல்லாட்டி பிடிச்சபிடியா அந்த சீட்தான் எண்டு அதிலதான் இருந்து வாறது இப்பிடி பிரச்சினை ஆராம்பநாட்களில பயணம் செய்யும்போது இருந்தது.
மேலும் கொஞ்ச காலம் செல்ல என்சிஜி,நோர்த்வெஸ்ட்,அன்னைமுத்துமாரி,லக்ஷ்மி என்ற நிறைய பஸ்கள் வந்துவிட்டாலும் இவங்கட புக்கிங்க் குழறுபடிகள் நிண்டபாடில இப்பதான் ஓரளவு திருந்தியிருக்காங்க, பிற்பட்ட காலங்களில் இருந்து இன்று வரை வீட்டு வாசலிலையே இறங்கி,ஏறலாம் என்றதால நான் அன்னைமுத்துமாரில போய் வர தொடங்கினன், அதால இவனுக ஒன்றும் திறம் ஒண்டும் இல்ல இவங்களும் புக்கிங்ல தொடக்கத்தில குழறுபடிதான் ஒருக்கா பஸ் வெள்ளவத்தை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டுபோய் சீட் பிடிச்ச கதையும் உண்டு, இருந்தும் இப்ப திருந்திடானுக பயபுள்ளைக புக்கிங் விசயத்தில. வடமராச்சியில இருந்து ஒடுற ஒரே சொகுசு(?) பஸ் எண்டதால இவங்களுக்கு நிறை சனம்தான் எப்போதும், ஒரு பஸ்சில இருந்து 4-5 வாங்கிற வரைக்கும் வளர்ந்திருக்கானுக பயபுள்ளைக எண்டால் பாருங்களேன், இப்ப 2 பஸ் லீசிங்காரன் தூக்கி கொண்டு போனது வேற கதை. அடுத்து இந்த பஸ்காரனுக எல்லாம் ஓடி கல்லாபெட்டியை நிரப்பினதோட நிண்டு கொண்டாங்க பஸ் தட்டி வானை விட கேவலமான ரேஞ்சுக்கு இருக்கும். AC வேலை செய்யாது ஆனா பஸ் முழுசா அடைச்சிருக்கும் போறணைக்குள்ள இருக்கிற பாண் மாதிரிதான் பயணிகள். அப்புறம் ஏசி போட்டாங்கன்னா ஏதோ செத்த உடம்ப வச்சிருக்கிற கணக்குக்கு போடுவாங்க, அப்புறம் ஹெட் லைட் இல்லாம கொழும்பில இருந்து யாழ்ப்பாணம் வரை டார்ச் லைட் அடிச்சு வருவானுக. அப்புறம் இந்த TIPTOP பஸ்சில மூட்டை பூச்சி கடி, இப்பிடி நிறைய சிரமங்கள்.
அடுத்து நான் இந்த பதிவை எழுதுறதுக்கு காரணமானதை விட்டுடன் இப்போ மன்னர் போட்டு கொடுத்த கார்பெட் ரோட்டில மிதி மிதின்னு மிதிச்சு 100க்கு குறையாம ஒடுறது, பின்னேரம் அங்க வெளிக்கிடுறது இங்க விடி விடிய 3 மணிக்கு வாறது தனிக்கட்டையா இருக்கிற எங்களுக்கு, கொழும்பிலையே இருக்கிறவர்களுக்கு இது பருவாயில்லை ஆனால் அலுவல்களுக்கு வரும் ஆக்களுக்கு அந்த நேரம் எங்கே போய் தங்குவது? , தனிய வரும் இளம்பெண்கள் என்ன செய்வது? இவற்றை கருத்தில் கொண்டு கொஞ்சம் லேட்டா வெளிக்கிட்டு அளவான வேகத்தில் ஓடிவந்தால் என்ன? எத்தனை விபத்துகள் இதுவரை! அடுத்து இதில வேடிக்கை என்னவென்றால் எல்லா பஸ்களையும் விட அதிவேகமாக வாறது CTB. அடுத்து இவனுக படம் எண்டு போடுற மரண மொக்கைகளையும், பார்த்து சகிச்சிகிட்டு போகணும்.
என்னதான் சிரமங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து தீபாவளிக்கு போகும்போதும் இந்த பஸ்லதான் போக போறன்.

No comments:
Post a Comment