Friday, December 12, 2014

லிங்கா

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் வயோதிபம் உண்டு. சம்பாதித்து வைத்துள்ள பெயரை காப்பாற்றிக்கொள்ள ஓய்வு பெறுவதே சிறந்தது என்பதை லிங்கா நிச்சயம் உணர்த்தியிருக்கும். வெறுமனவே ரஜினி என்ற திரையுலக வியாபாரநாமத்துக்காகவே தாம் இன்றும் நிலைத்திருக்கிறோம் என்றும் விளங்கியிருக்கும்.



ஓர் ஊர் அணையின் மதிப்பீடு மக்கள் சூழ நடைபெறுகிறது. அன்றைய இரவில் மதிப்பீட்டாளர் கொல்லப்படும்போது ஊர்த்தலைவரிடம் அணையின் அருகிலுள்ள மூடியுள்ள கோயிலை திறந்தாலே அந்த மக்களுக்கு விடிவு என கூற அக்கோயிலை கட்டியவர்களின் பரம்பரையினரே திறக்க வேண்டும் என கூறி தேடி திருடன் ரஜனியான பேரனை கூட்டி கொண்டுவருகிறார்கள். அதன் பின் வந்த ரஜினி என்ன செய்தார், நீண்டு கொண்டு போகும் அணை முன்கதையில் ரஜினியின் தாத்தா என்ன செய்தார் என்று திரையில் அபார அந்த இறுதி கிளைமாக்சுடன் தெரிந்து கொள்ளுங்கள்.


ரஜினிக்குதான் வயது போய்விட்டது என்றால் கோச்சடையானில் அடித்தாடவேண்டிய கதையை அனிமேஷன் என்று சொதப்பிய கே எஸ் ரவிக்குமார் லிங்காவில் எடுத்துக்கொண்ட கதை  மோசம் என்றால் திரைக்கதை அதைவிட மோசம் 3 மணித்தியாலத்துக்கு ஜவ்வென்று இழுத்து கொண்டே போகின்றார்கள். இவருக்கும் சரக்கு முடிந்து விட்டது என்று எண்ணத்தோன்றுகிறது.


படத்தின் பாடல்களும் ஏன் இந்த இடத்தில் என்று இல்லாமல் வந்து போகின்றது. படத்தில் சொல்லக்கூடிய ஒரு விடயம் என்றால் கலை இயக்குனரின் பங்களிப்பு மட்டுமே. இதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு வயதுக்கேற்ப கதைகளை கேட்டு நடித்தால் நிலைக்கலாம்.

படம் இலங்கை கொழும்பு வெள்ளவத்தை சவோய் திரையரங்கில் விசேட காட்சியில் பார்க்க முடிந்தது. அரங்கு கிட்டமுட்ட நிரம்பியே இருந்தது. ஏலவே தமிழ் படங்கள் போடாத திரையரங்கில் இனியும் தமிழ் படம் போடுவீர்களா என்ற நிலையில் ரசிகர்களின் நடவடிக்கை அமைந்திருந்தது. நாளை முதல் கொழும்பில் ஈரோஸ்,சினிவோர்ல்ட் திரையரங்குகளில் வெளியாகின்றது.

No comments: