அவுஸ்திரேலியா அணி இலங்கை வரும்போது ஏராளமான சவால்களை எதிர்கொண்டிருந்தது. அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்களுக்கு இதுதான் முதல் தொடர்,கிளார்க்கின் முதலாவது முழு நேர தலைவராக செயற்படும் தொடர்,டெஸ்ட் அணியில் அறிமுக இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் இப்படி பல நெருக்கடிகளுடனேயே இலங்கை வந்திறங்கியது.
முதல் ஆரம்பமானது T20 தொடர் அவுஸ்திரேலிய அணியில் ஒயிட்,வார்னர்,ஓ கெவி. போன்றோர் T20 அணிக்கு மட்டும் தேர்வு செய்யபட்டிருந்தனர். எனவே அவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அதிலும் தொடர்ந்து மோசமான போர்மில் இருக்கும் ஒயிட்க்கு கிட்ட தட்ட வாழ்வா.சாவா தொடர் போன்றது. இரண்டு போட்டிகளும் பள்ளேகல மைதானத்தில் நடைபெற்றது.முதல் போட்டியில் டில்ஷானின் அதிரடி சதத்தின் மூலம் சுழற்பந்து வீச்சாளர்கள் மூலமும் 35 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றது.இதில் ஆஸி அணியின் கப்டன் எடுத்த சில முடிவுகள் மிக மோசமாக இருந்தன. இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் சிக்கனமாக பந்து வீசிக்கொண்டு இருந்தார்கள்.ஆனால் அவர்களின் கோட்டாவை பூர்த்தி செய்யாமல் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தார்.வார்னர் மட்டுமே 51 ஓட்டங்கள் எடுத்தார், மீதி அணியே சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறிஇருந்தது.இரண்டாவது போட்டியில் மஹேலவின் 84 ஓட்டங்களும் மாய சுழற்பந்து வீச்சாளர் மெண்டிசின் 6 விக்கெட் சேர்த்து 8 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றது.இறுதியில் ஒயிட் தனித்து நின்று போராடியும்(அணையிற விளக்கு இறுதி தருணத்தில் பிரகாசமாக எரியுமாம்) ஏலாமல் போய் விட்டது.அடுத்த உலகக்கிண்ணT20 கோப்பை இலங்கையில் நடைபெற இருப்பதால் ஆஸி சுழற்பந்து வீச்சுக்கு கட்டாயம் தயார்படுத்தியே ஆகவேண்டும்.
அடுத்து ஒருநாள் தொடர் ஆரம்பித்தது, ஊக்கமருந்து சோதனையில் சிக்கி தடைக்கு பிறகு தரங்க களம் கண்டிருந்தார்.முதலாவது போட்டியில் ஜோன்சனின் அபார பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 191 ஓட்டங்களுக்குள் சுருண்டது.ஜோன்சன் 6 விக்கெட்டுகளை கைபற்றினார்.பின்பு துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி வாட்சன்,பொன்டிங்,கிளார்க் ஆகியோரின் அரைச்சதங்களின் துணையுடன் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டியும் முதலாவதை ரிப்ளை செய்தது போன்று இருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 208 ஓட்டங்கள் எடுத்தது. சங்கக்கார மட்டும் அரைச்சதம் பெற்றார். பின்பு வழமை போல வாட்சன்,பொன்டிங்,கிளார்க் பிரகாசிக்க 8 விக்கெட்களால் ஆஸி வெற்றி பெற்றது. பொன்டிங் 90 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் பெற்றார்.மூன்றாவது போட்டியில் இலங்கைக்கு முக்கியமான தொடரை நிர்ணயம் செய்யும் போட்டியில் இலங்கை அணி தரங்காவின் சதத்தின் உதவியுடன் 286 என்ற ஓட்டத்தை பெற்றது.பின் மலிங்காவின் 5 விக்கெட் பெறுதியுடன் ஆஸியை 208 ஓட்டங்களுக்குள் சுருட்டியது.
நான்காவது போட்டியில் மறுபடியும் லீ,டோர்ட்டி தலா நான்கு விக்கெட்களை கைப்பற்ற இலங்கை 132 ஓட்டங்களுக்கு சுருண்டது.ஆஸி மார்ஷின் 70 ஓட்டங்களின் உதவியுடன் 4 விக்கட்களால் வெற்றி பெற்று தொடரை வென்றது. அறிமுக சுழற்பந்து வீச்சாளர் பிரசன்னா ஒரு ஓவரில் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.ஐய்ந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 211 ஓட்டங்களே பெற்றது. இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சாமர சில்வா நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அரைச்சதத்தை பெற்று வெற்றியை உறுதி செய்திருந்தார். ஆஸியில் அறிமுகமான இளம் வேகப்பந்துவீச்சாளர் பட்டின்சன் 2 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.தொடர் நாயகனாக கிளார்க் தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து டெஸ்ட் தொடர் காலியில் ஆரம்பித்தது. ஆஸி அணியில் இரு அறிமுகங்கள் லயோன்,கோப்லண்ட் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி மிஸ்டர் கிரிக்கெட்இன் 95 ஓட்டங்களின் உதவியுடன் 273 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்த இலங்கை 105 ஓட்டங்களுக்குள் சுருண்டது.அறிமுக வீரர் லயோன் 5 விக்கெட் கைப்பற்றினார்.இரண்டாவது இன்னிங்க்காக துடுபெடுத்தாடிய ஆஸி 210 ஓட்டங்களை பெற்றது. ஹேரத் 5 விக்கெட் கைப்பற்றினார்.வெற்றி இலக்காக 379 ஓட்டங்களை கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை மஹேலவின் சதமும்,மத்தியுசின் 95 ஓட்டங்கள் பெற்றும் மற்றவர்கள் சோபிக்காததால் 125 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.ஹாரிஸ் 5 விக்கெட்களை கைபற்றினார்.ஆட்டநாயகனாக ஹசே தெரிவுசெய்யபட்டார்.
இரண்டாவது போட்டியில் முதல் துடுப்பெடுத்தாடிய இலங்கை 174 ஓட்டங்களுக்கு சுருண்டது.மத்தியுஸ் 58 ஓட்டங்களும் சங்கக்காகர 48 ஓட்டங்களும் பெற்றனர்.தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஆஸி 411 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என்றபோது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.அறிமுக வீரர் மார்ஷ்,ஹஸே சதம் பெற்றனர்.பிறகு துடுப்பெடுத்தாடிய இலங்கை 311 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என்றபோது ஆட்டம் டிரா ஆனது.இலங்கையின் முதல் நான்கு பேரும் அரைச்சதம் பெற்றிருந்தனர்.ஆட்டநாயகனாக மீண்டும் மிஸ்டர் கிரிக்கெட் தெரிவானார்.மூன்றாவது போட்டி எஸ்எஸ்சியில் செத்த ஆடுகளம் தெரிந்த முடிவுதான்.ஆனால் முதல் துடுப்பெடுத்தாடிய ஆஸி சில தவறான ஷாட் தெரிவால் விக்கெட்களை இழந்து 316 ஓட்டங்களை பெற்றது ஹசே சதம் பெற்றார்,மார்ஷ் 81 ஓட்டங்கள் பெற்றார்.அறிமுக பந்து வீச்சாளர் ஈரங்க 4 விக்கெட்கள் கைபற்றினார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 473 ஓட்டங்கள் குவித்தது. மத்தியுஸ் கன்னி சதம் பெற்றார்.சிடில் நான்கு விக்கட்களை கைபற்றினார்.மீண்டும் துடுபெடுத்தாடிய ஆஸி 488 ஓட்டங்கள் குவித்தது.ஹுஜஸ்,கிளார்க் சதம் பெற்றனர் ஹசே 93 ஓட்டங்கள் எடுத்தார். ஹேரத் 7 விக்கெட்கள் கைபற்றினார்.ஆட்டநாயகன்,தொடர்நாயகனாக மிஸ்டர் கிரிக்கெட் தெரிவு செய்யப்ட்டார்.
சறுக்கியவர்கள்
முக்கியமாக ஆஸி அணியின் ஜோன்சன் இடம் டெஸ்ட் அணியில் கேள்வி குறியாகியிருக்கிறது.இவர் தொடரின் எந்தவொரு போட்டியிலும் சாதிக்கவில்லை.அடுத்து முக்கியமானவர் ஹாடின் தொடர் முளுவதுமே சொதப்பி இருந்தார். பைன் உடற்றகுதி பெற்றால் இவரின் இடம் கேள்விக்குறியே? அடுத்து பொன்டிங் பெருதாக சாதிக்கவில்லை இவரின் இடத்துக்கு அணியில் பிரச்சினை இல்லாமல்விட்டாலும் இவரின் மூன்றாவது இடம் நிரந்தரமாகவே பறிபோகும் எனவே நினைக்கிறேன். மேலும் கொப்லண்ட் இவரின் இடமும் கேள்வி குறியே சிடில்,போல்லீங்கர்,ஹாரிஸ் மூவரும் உடற்றகுதி உடன் இருந்தால் மேலும் பட்டின்சனும் இருக்கிறார்.அடுத்து வாட்சன் சறுக்கி இருந்தார் இவர் துடுப்பாட்ட வரிசையில் கீழுறங்குவது நல்லது பந்துவீச்சு சுமை இருப்பதால்.மேலும் லயோன் முதல் போட்டியில் எடுத்த விக்கெட்களோடு சரி இவர் மேலும் தன்னை வழப்படுத்தி கொள்ளவேண்டும்.ஆஸி அணியின் ஒரு நாள் அணியில் டேவிட் ஹசே ஏன் இருக்கிறார் என்றும் புரியவில்லை. மேலும் இலங்கை அணியில் பிரசன்னா டெஸ்டில் சறுக்கியிருந்தார், அணிதலைவர் டில்ஷானும் இறுதி போட்டியிலேயே தனது பங்களிப்பை வழங்கிஇருந்தார்.மேலும் சமரவீர முதலிரண்டு போட்டிகளில் சறுக்கியமையால் மூன்றாவது போட்டியில் நீக்கபட்டு இருந்தார்.மேலும் பாக்கிஸ்தான் தொடருக்கும் தெரிவு செய்யபடவில்லை. எனவே இவரின் எதிர்காலம் கேள்விகுறியே.
சாதித்தவர்கள்
மிஸ்டர் கிரிக்கெட் என அழைக்கபடும் ஹசே தொடர் முளுதும் வெளுத்து வாங்கி இருந்தார். மேலும் அறிமுகத்தை மேற்கொண்ட மார்ஷ் சாதித்திருந்தார்.கிளார்க்கும் சராசரியாக ஓட்டங்களை பெற்றார் இறுதி போட்டியில் இவர் ஹசேஉடன் புரிந்த இணைபாட்டமே ஆஸியை காப்பாற்றியது.மேலும் இறுதி போட்டியில் சதமடித்ததன் மூலம் ஹூஜஸ் ஒரு மாதிரி தப்பி பிழைத்திருக்கிறார்.ஹேரத் தற்போதைய இலங்கை அணியின் முதல் தெரிவு சுழற்பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்திருக்கிறார்.