ஐயாத்துரை படலையிலிருந்து ரொய்ட்டர்ஸ் வரை இப்போது பேசப்படும் விடயங்களில் ஒன்றாக இப்போது மாறிவிட்டது விஸ்வரூபம்.கமல் இப்படத்தை எடுக்கமுதல் என்ன நினைத்தாரோ அதிலும் மேலான ஆர்வத்தை படம் ஏற்படுத்தியுள்ளது தற்போது. இதுவே கமலுக்கு கிடைத்த பெருவெற்றியாகவிருக்கலாம்.இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் விஷ்வரூபத்துக்கு தடை என்று அதகளபட்டுகொண்டிருக்கும்போது மனுஷன் தனி விமானத்தில் சான்பிரான்ஸிஸ்கோ போய் சிறப்புகாட்சியில் கலந்துகொண்டிருப்பாரா? காலதாமதங்களால் வர்த்தகரீதியாக மட்டும் ஒன்றே பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டி வரும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்தியாவின் இரு மாநிலங்கள்,இலங்கை தவிர உலகின் மற்றைய பகுதிகளில் இருந்து வரும் வசூல் பற்றிய செய்திகள் நிச்சயம் கமலுக்கு நம்பிக்கையே அளிக்கும், இருந்தும் படம் வெளிவராமல் இருக்கும் இடங்கள் பெரும் வசூல்சந்தை என்பதில் மாற்றுகருத்தில்லை, மேலும் வரும் நாட்களில்தானே படம் ஹிந்தியில் வெளியாகிறது.
கமல் படங்கள் என்றால் சொல்லவேண்டுமா சும்மாவே படம் முடிய நிறைய நாட்கள் எடுக்கும் இதில தயாரிப்பாளர் பிரச்சினை,இயக்குனர் பிரச்சினை என்று கமலே எல்லாத்தையும் எடுத்து கொண்டதால் நாள் நீண்டுகொண்டேபோனது,பிறகு படம் ஒரு மாதிரியாக முடிந்தது என்றால் டிடிஎச் வெளியீட்டால் தியேட்டர் அதிபர்களுடன் முறுகல் என்று மேலும் தாமதமானது. இதனுடையே இப்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு தூபமிடப்பட்டு இருக்கிறது.
முதல் தமிழ்நாட்டில் ஏன் தடை என்றால் வேறொன்றுமில்லை, காரணம் இலகு திரைப்படதுறையினர் அந்நேரம் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு வால் பிடிக்க வேண்டும். கமல் அதை சரியாக செய்யவில்லை அதுதான் காரணம் விஷ்வரூபத்துக்கு எதிரான தமிழக அரசின் தடை, ஏன் இவ்ளோ ஆவேசம் கொள்ளும் முஸ்லீம்கள் எல்லாம் இறுதி வெளியீட்டுக்கு நாளுக்கு முதல்தானே எதிர்ப்பை வெளியிட்டார்கள் இப்பவே தெரியவில்லையா தூண்டப்பட்டு இருக்கிறார்கள் என்று? இல்லாவிட்டால் இந்த டிடிஎச் பிரச்சினைக்கு முதலே இவர்கள் முதலே பிரச்சினை எழுப்பியிருக்கலாமே? ஏன் எழுப்பவில்லை? மேலும் ஒரு படத்தை பார்க்காமலே எப்பிடி படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியும்? பிரச்சினை இதுதான் கமல் படத்துக்கான உரிமையை ஜெயா டிவிக்கு குடுக்காததும்,டிடிஎச் என்ற திட்டம் மூலம் சன் நிறுவனத்துக்கும் வருமானம் வருகிறது என்பதுதான் ஜெயலலிதா படத்தை முடக்குவதுக்கு காரணம், மேலும் இது ஒன்றும் புதிதல்ல வடிவேலு திரைத்துறையில் எப்பிடி ஒதுக்கபட்டார் என்றது யாவரும் அறிந்ததே மேலும் அவரது கட்சிக்கு வால்பிடிக்கும் நடிகர் என்றால் இத்தனையும் ஒன்றும் நடந்திருக்காது இதுவும் அண்மைய காலங்களில் நீங்கள் பார்த்த ஒன்றுதான், மேலும் இதில் முஸ்லீம்களை சம்பந்தபடுத்தியதன் மூலம் தனது வாக்குவாங்கியை அதிகரிக்கவும் செய்துள்ளார்.
அடுத்து ஏன் இலங்கையில் தடை என்றால் கமலுடன் இணைத்தபடி தலைவரின் சுவரொட்டிகள் தமிழகத்தில் ஒட்டபட்டிருந்ததாகவும் இதனால் இலங்கை அரசு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டதாகவும் ஊடகநண்பர் ஒருவரின் மேலும் அறிந்துகொண்டேன். மேலும் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் நிலைப்பாடு தொடர்பில் இன்னும் சில வாரங்களில் ஆராயப்பட இருக்கிறது. ஏலவே இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் இப்பிடி முஸ்லிம்களுக்கு ஆதரவு என்ற தோற்றபாட்டை காட்டுவதன் மூலமே அரபுலக நாடுகளின் ஆதரவை பெறவேண்டியிருந்தது. இதுக்காகவேதான் நேற்று இரவு முஸ்லிம் புத்திஜீவி(?)களுக்கு,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திரைப்படம் காண்பிக்கபட்டது, தமிழ்நாட்டில் திரைமறைவில் காரணங்கள் இருந்தாலும் சாட்டுக்காவது நீதிமன்றம் போய், நீதிபதிக்கே படம் திரையிடபட்டது, ஆனால் இங்கு எதிர்த்தவனுக்கு போட்டு காண்பித்ததன் மூலம் எவ்விதமான நலன்களை அரசு பெற விரும்புகிறது என்று புரியவில்லையா? இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்தானே.
அடுத்து இதில் முஸ்லிம்களின் வகிபாகம் என்னவென்று பார்த்தால் தூண்டலுக்கு ஏற்ப துலங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டில், ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் அதை புறக்கணிக்கலாம். தடை செய்ய வேண்டும் என்று இல்லை. நான் படம் பார்க்கவில்லை, இருந்தும் படம் வந்து என்ன தாக்கத்தை முஸ்லீம்கள் மீது ஏற்படுத்துவதை விட இவர்கள் இப்போது செய்யும் செயல்களால் தங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள், சாதாரண ஒரு நாத்திகனுக்கே முஸ்லிம் என்றால் வெறுப்பு ஏற்படும்படி செய்திருக்கிறார்கள், படம் கொண்டுவரும் அரசியல் இருக்க தங்கள் ரிஷானா கொடூரமாக கொல்லபடும்போது ஏன் மௌனியாக இருந்தார்கள்? மலாலாவுக்கு நடந்த கொடுமையின்போது ஒவ்வொரு பெயரோடு கிளம்பும் முஸ்லீம் அமைப்புகள் எங்கு இருந்தார்கள்.
No comments:
Post a Comment