ஒரு மாதிரி இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கிடையிலான ரெஸ்ட் போட்டி தொடர் நேற்று நிறைவடைந்திருந்தது. இந்த தொடரில் இங்கிலாந்து,இலங்கை வீரர்கள் விளையாடினார்களோ இல்லையோ வருண பகவான் நன்றாகவே விளையாடிருக்கிறார்.தொடர் முழுவதும் மழை காரணமாக 369 பந்து பரிமாற்றங்கள் வீசப்படவில்லை.
முதலாவது ரெஸ்ட் காத்ரீப்பில் மே 26ம் தேதி ஆரம்பித்தது. புதிய கப்டன்,அனுபவமற்ற பந்து வீச்சு கூட்டணி,முரளி இல்லாமல் முதலாவது வெளிநாட்டு தொடர் என்று பல கேள்விகணைகளுக்கு தமது ஆட்டதின் மூலமாக பதிலுரைக்கும் முகமாக இலங்கை அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணி ரெஸ்ட் போட்டி தரவரிசை பட்டியலில் முன்னேறும் முகத்துக்கு அடித்தளமிட வேண்டியநிலையிலும் களமிறங்கியது. முதல் நாளே சகுனம் சரியில்லை மழை காரணமாக ஆட்டம் தாமத்திதேஆரம்பித்தது.தொடரில் ஓரிரு நாட்களே ஆட்டம் நேரத்துக்கு ஆரம்பித்தது. டில்ஷான் தனது முதல் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.இந்த தொடரில் இலங்கைக்கு + ஆக பார்த்த விடயங்களில் இலங்கையின் ஆரம்பஇணைபாட்டமும் ஒன்று அதில் டில்ஷான்,பரணவிதான,திரிமான நம்பிக்கை அளிக்க கூடிய விதத்திலேயே செயற்பட்டிருந்தனர். இலங்கை அபராமகவே துடுப்பெடுத்தாடி 400 ஓடங்களை பெற்றது. வழமை போல் சங்கா இங்கிலாந்து மண்ணில் சறுக்கிருந்தார். இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளயாடிய மஹேல கூட சறுக்கி இருந்தார். ஆனால் இத்தொடரில் இலங்கை பெருமைபட கூடிய விடயமாக பிரஸன்னா ஜயவார்டனே 6ம் இலக்க துடுபாட்ட வீரராக சிறப்பாகவே பிரகாசித்திருந்தார். சமரவீரவும் தன் பங்குக்கு ஓட்டங்களை குவித்தார்.பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பாக ஆண்டர்சன்,ஸ்வான் தலா 3 விக்கெட் கைபற்றினர். பின் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 496 ஓடங்களை குவித்தது. டிரோட் 203,குக் 133,பெல் 103 இலங்கை அணி தொடர் முழுவதும் பந்து வீச்சில் சொதப்பியது.
ஆனால்இலங்கை அணியின் பந்து வீச்சு உத்தி வியப்பழிப்பதாக இருந்தது லக்மால்,வெலகெடேற ஆகியோர் மிகச்சிறப்பாக பந்து வீசி விக்கெட் கைப்பற்றுவர் பிறகு அதே உத்வேகத்தில் பந்து வீசாமல் அடுத்து வரும் துடுப்பெடுதாட்ட வீரருக்கு அவுட்ஸைட் ஆஃப் ஸ்டூம்ப் வீசி இலகுவாக ரன் எடுக்க வாய்ப்பு வழங்குகிறார்கள். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய இலங்கை அண்ணி வெறும் 25 ஒவ்ர்களில் 82 ஓட்டங்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை தளுவியது. டிரெம்லெட்,ஸ்வான் அபாரமாக பந்து வீசி நான்கு இலக்குகளை தகர்த்தனர்.
அடுத்த ரெஸ்ட் லோர்ட்சில் மழை தன்பங்குக்கு விளையாட டில்ஷான் அபராமக துடுப்பெடுதாடி 193(அதிகூடிய தனி நபர் ஓட்டம் இலங்கை சார்பாக லோர்ட்சில்) ஓட்டங்களை குவிக்கவும். இக் காலகட்ட ரன் மெஷின் என சொல்லபடக் கூடியவருமான குக் ஓடங்களை குவிக்க சமநிலையில் முடிந்தது.
அடுத்த ரெஸ்ட் போட்டி சங்காவின் அருமையான துடுப்பாட்டம் மூலமா சமநிலை ஆகியது. அனுதினன் அண்ணா கூறியது போன்று தலமை பதவி வந்தா எல்லாரும் போர்முக்கு திரும்புவாங்கள் போல. அநேகமாக இதுதான் சங்காவின் கடைசி ரெஸ்ட் போட்டி என நினைக்கிறேன் இங்கிலாந்து மண்ணில் மனிதர் சாதித்து காட்டியுள்ளார். தொடர் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து சார்பில் திரேம்லேட்டும் இலங்கை சார்பில் பிரஸன்னா ஜயவார்டனேவும் தெரிவு செய்யப்பட்ட்னர்.தொடரில் அதி கூடிய ஓட்டங்களை குக்(390),பெல்(331),திரொட்(267),டில்ஷான்(253),பிரஸன்னா ஜயவார்டனேவும்(216) குவித்துளனர்.அதி கூடிய விக்கெட் திரேம்லேட்(15),ஸ்வான்(12),பிராட்(8),ஆண்டேர்சன்(7),வெலகெதர(7),லக்மல்(7)
இத் தொடரின் இறுதியில் இலங்கைக்கு சாதகமானது என நான் கருதிய விடயங்கள் மத்திய தரவரிசையில் 6ம்இடம்,5ம் இடம் எந்த மண்ணிலும் சாதிப்பார்கள் போலுள்ளது.மேலும் எதிர்காலத்துக்கு சிறந்த ஒரு தொடக்க வீரர் கிடைத்துள்ளார் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும்போது புரிந்தது. கவலைக்குரியது டில்கார இன்னும் அணியில் இருப்பது,மக்ரூப் ஏன் அணியில் உள்வாங்கப்பட்டார் என்பது.மேலும் சுழற் பந்தவீச்சாளர்களை பயன்படுத்திய விதம்.திசார பெரேராவும் அணியில் இருப்பது கேள்விக்குரிய விடயம் மத்யூஸ் வந்து சரியாக இடத்தை நிரப்புவார் என நினைக்கிறேன்.
அதே போன்று இங்கிலாந்து அணியிலுள்ள பலவீனம் இடது கை வேகப்பந்து வீசாளர்களை ஸ்டிராஸ் எப்படி சாமாளிக்க போகின்றார்? மேலும் பிராட்இன் இடம் ரெஸ்ட் போட்டியில் கேள்வி குறியாக இருக்கிறது ஃபின் தொடர்ச்சியாக சிறப்பாகவே செயட்படுகிறார். ஷஷாட் உள்ளூர் போட்டிகளில் சறுக்கி இருக்கிறாரார்.பிராட் இன் நேரடி போட்டியாளர் பிரெஸென் கதவுகளை தட்டி கொண்டு இருக்கிறார்.