நான் சைக்கிள் ஓடத்தொடங்கியது மூன்றாம் ஆண்டில்தான். அப்போதுதான் திருமலையில் இருந்து ஊருக்கு மீண்டும் திரும்பியிருந்தேன்.நான் எனது அப்பாவுடன் சென்று தீருவில் விளையாட்டு மைதானத்திலும் அங்கு உதைபந்தாட்ட போட்டி நடக்கும்போது அருகிலிருந்த தூபியிலும் மைதானதுக்கு முன்பு இருந்த உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்த சைக்கிள் எடுத்து அப்பா முன்னுக்கு ஹாண்டிலில் பிடித்து பின்னாலும் பிடிக்க நான் உளக்கினேன். ஆரம்பத்தில் அடிக்கடி விழுந்து எழும்பினேன். சில தடவை முழங்காலில் காயம் ஏற்பட்டதும் உண்டு. ஒரு வார முடிவிக்கிடையில் அந்த சைக்கிள் ஓட பழகி விட்டேன்.
ஆனால் உடனே வீதியில் ஓட அனுமதி கிடைக்கவில்லா ஏனெனில் அந்த நேரத்தில் இராணுவ வாகானங்கள் ஓடும் மோட்டு ஓட்டம்தான். நேரிடையாகவே பார்த்த அனுபவங்கள் உண்டு.இரண்டு தடவை அந்த இடங்களிலேயே உயிரிளந்தார்கள். நேரடியா கண்டேன். மேலும் எனது மாமா என் வயதொத்த மச்சானை ஐஸ்கிரீம் வேணும்எண்டு கேட்டதால் பருதித்துறைக்கு ஏற்றிக்கொண்டு செல்லும்போது இராணுவ ட்ரக் பருதித்துறையில் மோதி உயிரிழந்தார். மேலும் நேரடி அனுபவம் நான் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் படித்ததால் பாடாசாலை முடிந்ததும் எமது ஊர்,கம்பர்மலை,வல்வெட்டி பொடியல் எல்லோரும் சேர்ந்தே வருவோம் அப்பிடி ஒருமுறை வரும்போது வல்வெட்டியில் நாங்க தண்ணீர்தாங்கியில் தண்ணீர் குடித்து விட்டு வெளியேறும்போது. வேகமா வந்த ஆமியின் பீல் பைக் வந்து அடித்தது எம்மோடு வந்த கரீஸ் அண்ணாவின் சைக்கிள்ளில் நல்ல காலம் மெதுவாக அப்பவே உழக்க தொடங்கியதால் அவருக்கு சிறு காயம்தான். சைக்கிள்தான் பாவம் பின் பக்க சில்லு வேறு எங்கேயோ கிடந்தது. இப்பிடி உடனே வீதியில் ஓட மறுத்ததும் சரியாகதான் பட்டது.
பின் கொஞ்ச காலம் பிறகு எதேச்சையாக ஒரு நாள் அம்மாவின் ஏசியா லேடீஸ் சைக்கிள் எடுத்து ஓடிப்பார்த்தேன் எந்த வித சிரமும் இருக்கவில்லை. அப்பிடியே கணபதி படிப்பகத்ததுக்கும்,பிள்ளையார் கோவிலுக்கும் சென்று விட்டேன்.இப்பிடி சில நாட்கள் போனதுண்டு. வீட்டில தெரியாது. ஒரு நாள் சந்தியில் உள்ள வாசிகசாலைக்கு செல்லுபோது வீட்டில் மாட்டிகொண்டேன் அதுவும் ஆர்மி ட்ரக் போகும்போது அதிகமானவர்கள் இறங்கியே நிற்பார்கள். ஆனால் எனக்கு எப்போதுமே நிற்க வேண்டும் என்று எண்ணம் மனதில் தோன்றியதில்லை. நாங்கள் கொன்வே(இராணுவ வாகன தொடரணி) செல்லும் போதே வீதியில் ஆமி அடுத்த பக்கம் மிலாந்தும் போது ரோட்டைக் கடந்து ஓடியவர்களாச்சே. அன்று வீட்டில் சாம்பார்தான். ஆனாலும் பொடியன் வடிவா சைக்கிள் ஒடுறான் எண்டு நம்பிக்கை ஏற்பட்டதால் பாடசாலைக்கு அம்மாவின் லேடீஸ் சைக்கிளில் செல்லும் வாய்ப்பு கிட்டியது.வேணுமென்றே பஸ்சை தவறவிட்டு சைக்கிள்ளில் செல்வது வீட்டில் புரிந்து விட்டது. அன்றிலிருந்து எனது கால்களுக்கு ஓய்வில்லை. பின் ஒரு நாள் அப்பாவின் ரலி சைக்கிள் எடுத்து ஓடினேன் ஒரு சிரமும் இருக்கவில்லை. இதை பார்த்த அப்பப்பா 5ஆம் ஆண்டு ஸ்காலர்ஷிப் பரீட்சையில் சித்தியடைந்தால் பெரிய சைக்கிள் வாங்கி தருவதாக சொன்னார். இதுதான் பெரும்பாலும் பொடியளை படிக்க வைக்க மருந்து. நானும் பரீட்சையில் சித்தியடைந்தேன். அடுத்த கிழமையே புத்தம் புதிய ஹீரோ சைக்கிள் அப்பப்பா வாங்கி தந்தார்.அன்று முதல் இன்று வரை பயணிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம்.இடைஇடையே எனது சாகசத்தினால் சைக்கிள் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தது. ஆனால் ஒரு நாளும் என்னை அனுப்பியதில்லை. அப்பிடி ஏதும் காயம் வந்தாலும் அப்பப்பாவின் வெட்டோட்டி,குப்பைமேனியுடன் சரியாகி விடும்.
4ஆம்.5ஆம் ஆண்டுகளில் போட்டிகளுக்கு கோட்டம்,வலயம் என்று நெல்லியடி,பருத்தித்துறை செல்லும் போது அப்பாவுடனேயே செல்ல வேண்டும் இல்லாவிடில் அண்ணாமாருடன் செல்ல வேண்டும். 6ஆம் வகுப்புக்கு வந்தவுடன் போட்டிகளுக்கு போகும்போது எல்லா மானவர்களும் சேர்ந்துதான் போவம் முன்னால் இரண்டு அண்ணாமார் செல்லுவினம் பின்னால் நாங்கள் எங்களுக்கு பின்னால் மற்ற அண்ணாமார்,இறுதியில் ஆசிரியர்கள் வருவினம்.அதெல்லாம் சொல்ல முடியாது சந்தோஷங்கள். வழமையாகவே நான் வேகமாகவே சைக்கிள் ஓடுவேன். என்னோடு சேர்ந்து எல்லா நண்பர்களும் அப்பிடித்தான். போட்டியென்றால் எல்லா பாடசாலைக்கும்தானே நாங்கள் பொடியள். சகோதர பாடசாலை பெட்டையள். அப்ப கொஞ்சம் எங்கள விட வெள்ளனை வெளுக்கிடுவீனம். ஆனாலும் இறுதியில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முதல் போவது நாங்கள்தான் இடையில் நாங்க ரேஸில் போய் முந்தி விடுவோம். ஆனாலும் எங்கட வகுப்பு பெட்டையளில் சில பேர் நிஜத்திலேயே ஓடுற பெட்டையள் இஞ்சையும் எங்களுக்கு ஓட்டம் காட்ட வெளிக்கிவிடுவீனம். ஆனால் நாங்கள்தானே சைக்கிள் ரேஸில புலி ஆச்சே எங்கள்ட ஒண்டும் செய்யலாது. அப்பிடி வந்தாலும் எங்கட சைக்கிள்கள் ரோட் முளுவதும் கவர் பண்ணி அங்கும் இங்கும் ஓடும் முந்த வெள்ளிக்கிட்டால் அப்பிடியே வயலுக்குள் போக வேண்டியதுதான். நாங்கள் சைக்கிள் ஒடுறதில PHD முடிச்சவங்கள் ஆச்சே.பிறகு போட்டி முடிஞ்சு பிறகு அப்பிடியே நெல்லியடிக்கு சென்று ஐஸ் கிரீம் குடுச்சுட்டுதானே வருவம்.ஒரு முறை சோகக்கதை நாங்க எல்லாம் ஐஸ் கிரீம் குடிக்க சைக்கிள் வாசலில் விட்டுட்டு போக திரும்பி வர வகுப்பு நண்பன் சர்மிலனின் சைக்கிள்ளை யாரோ ஆட்டயை போட்டுடானுகள் பாவிகள். அன்றிலிருந்து அனைவரும் சைக்கிள்ளை பார்த்து பார்த்துதான் ஐஸ் கிரீம் குடிப்பம். இப்பிடி நாங்கள் ஐஸ் கிரீம் குடிச்சுட்டு அங்க இங்க சுத்தக்கிடயில சகோதர பாடசாலை வெளிக்கிட்டு ஆனால் நாங்கள்தான் யார் குறுக்கு பாதையால் விட்டு மோட்டு ஓட்டம் ஓடி முன்னுக்கு வந்திருவம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தால் வந்து மெயின் ரோட்டில ஏறுவோம்.அந்த புது புது பாதை கண்டுபிடிப்பதுக்கு பெயர் போனது நான்,சஜீவன்,கஜன் போற போக்கில் சைக்கிள்ளை விடுவோம் சில நேரம் அது குறுக்கு பாதையாக இருக்கும் சில நேரம் சுத்து சுத்து எண்டு சுற்றுவோம். ஒரு நாள் நான் எனக்கு தெரியும் எண்டு ஒரு பாதையால் விட்டு பிறகு வயல்,பனங்காணி எல்லாம் போய்தான் மெயின் ரோடுக்கு வந்து ஏறினோம். ஆனால் ஒவ்வொன்றும் அனுபவம்தானே நாங்கள் மூவரும் கண்டு பிடித்த பாதைகள் எமக்கு பிற்காலங்களில் நிறைய உதவின. கொன்வே நேரத்தில் செல்வதுக்கும் மேலும் அந்த காலங்களில் அங்கு அங்கு கிரனேட் எறியப்படும்,கிளைமோர் வைக்கப்படும் அப்போதெல்லாம் இந்த பாதைகள்தான் பெரிதும் உதவின. நாங்கள் மூவரும்தான் பெரிய தலைகள் போல அனைவரையும் அழைத்து செல்வோம் பெண் அணியினரையும் சேர்த்துதான் மனிதாபின எண்ணம்தான் சகோதரங்கள் ரவுண்டஅப்பில மாட்டு படக்கூடாது எண்ட நல்ல எண்ணம்தான் ஆரம்பத்தில் சில வீர பெண்மணிகள் முன்னுக்கு சென்று அனுபவபட்டு பிறகு எங்களுடனே வந்தார்கள்.போட்டிக்கு போகும்போது சகோதரப்பாடசாலயை முந்தி செல்லும்போது சேக்கஸ் காட்டி விழுந்த வரலாறுகள் உண்டு (நான் இல்லைப்பா)
இப்பிடியே காலங்கள் உருண்டோடின. உயர்தரம் வந்தது உயர்தரத்தில் எங்கள் பாடசாலையில் பெட்டையலும் உண்டு. ஏன் வாறாலுகளோ தெரியல? பக்கத்தில சகோர பாடசாலை இருந்தும் இங்கதான் அள்ளு கொள்ளையா வந்து சேருவினம் அதுவும் வட இந்து மத்திய மகளிர் கல்லூரி,மெதடிஸ் என்றெல்லாம் வந்து சேர்ந்தவையுண்டா பாருங்கோவன்(நான் நினைக்கிறேன் எங்களை ஒவ்வொரு நாளும் பார்க்க போல). இப்பவும் சைக்கிள் மேலதிக சேவை உயர்தர கணித வகுப்புக்கள் நெல்லியடியிலேயே அமைந்திருந்தன. பிறகென்ன ஒவ்வொரு நாளும் பயணம்தான். ஆரம்பத்தில் நிறைய பொடியள்,பெட்டையள் 22 பேர் என நினைக்கிறேன். எங்கட ஊரில் இருந்து மட்டும் அப்ப எனது வீட்டுக்கு முன்னால் உள்ள வேம்பின் கீழ் கூடி எல்லோரும் சேர்ந்தே செல்வோம். கல்லு ரோட்டாலேயே செல்வோம் இங்கும் பெண் அணி படிப்பு ஆர்வத்தில முன்னுக்கு போகிறதேண்டா நீங்க நினைக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. எங்க தம்புராஜா சேர்ட்ட வகுப்பில போய் இருந்தா கொம்பாஸ் எறியில இருந்து தப்பலாம் எண்டுதான். இதில் எண்ட உயிர் தோழிக்கு தெரியும் எங்க இருந்தால் எறி விழாது எண்டு.ஆளோ என் நெஞ்சளவு கூட வராது ஆதலால் சைக்கிள் சீட் எட்டாதுதானே எனவே பாய்ஞ்சு பாய்ஞ்சு ஓடி வந்து பாதுகாப்பான இடம் பிடிக்க பிந்தி விடுவும் பாவம் அடிக்கடி மாட்டுபவர்களிலில் ஒராள். மேலும் மற்ற வகுப்பிலையும் கடைசி வாங்கில இடம்பிடிக்கதான்.பின் வகுப்பு முடிந்து வீட்டை வரும்போது ரோட்டை வாடகைக்கு எடுத்து விடுவோம் தேமா மரத்தின் கீழ் ஆரம்பிக்குக் கதை வீட்டு வாசல் வரை தொடரும். இங்கும் பெட்டயல் முன்னால போவீனம் ஆனால் முதல்ல ஊர் போய் சேருவது நாங்கள்தான் எங்களுக்கு முன்னால்தான் சென்று கொண்டிருப்பார்கள் பாதுகாப்பு நாங்கள்தானே. ஆனால் திடீர் என்று காணாமல் போய் குறிப்பிட்ட நேரத்தின் பின் அவர்களுக்கு முன் வருவோம் அதுவும் அவர்களுக்கு பின்னால் வந்திட்டு வேறு பாதைக்கு போய் அவர்கள் எங்களுக்கு முன்னுக்கு வந்துவிடக்கூடாது என்பதட்க்காக குறுக்கு பாதையால் நாங்கள் என்ன வேகத்தில் ஓடுவோம் என்று கணிக்க முடியாது.
இப்பிடி மகிழ்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை ஏனெனில் பாடசாலை தொடங்க அதிகமானோர் வர்த்தகதுக்கு மாறிவிட்டனர். பின் மூன்று பொடியள்,மூன்று பெட்டையல் தான் கல்ரோட் பாதையால் போய் வந்தோம். அதுவும் பாடசாலயில் மாணவர் தலைவர்கள் ஆனதால் பிந்தியே வருவோம் எனவே சேர்ந்து போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.பிறகு நான் போகும்போது கல்ரோட் பாதையால் போவேன். வரும்போது உடுப்பிட்டி பாதை அது நிறைய பொடியள்,பெட்டையல் போறது எல்லாம் என்னுடைய நண்பர்கள் அந்த பாதையில் நாங்கள் செய்த குறும்புகள் மறக்க முடியாதது. அதுவும் எங்களுக்கு குத்தகைக்கு எடுத்தாச்சு இங்க பெட்டையல் முன்னால் போவீனம் நாங்கள் பின்னுக்கு சில வேளை முன்னுக்கு போவோம்.குறைந்தது இரண்டு பேராவது சமாந்தரமாகவே செல்வோம் தனியா சென்றதாக வரலாறே இல்லை.பெட்டையல் ஒண்டும் லேசு பட்டவை இல்ல அவையலும் ரெண்டு மூன்றாதான் போவீனம். அடிக்கடி நாங்கள் எங்களுக்குள் கதைப்பது போல அவர்களை கலாய்ப்பது உண்டு. சில தேவை இல்லாத சில பேர் மரத்துக்கு எல்லாம் ஏதோ சொல்லுவினம். நாங்கள் கணக்கெடுப்பது இல்லை. இந்த பாதையில் சில காதல்களும் பயணிப்பது உண்டு. எனவே நாங்கள் வீடு போய் சேர வரைக்கும் அறுப்பதுக்கு ஏதோ கிடைத்து விடும். ஆனாலும் சொல்லி வேலை இல்லை உயிர் தோழியின் திறமை ஒரு நாள் நானும் எனது நண்பனும் வந்துகொண்டு இருந்தோம். வகுப்பு தோழி ஒருவரின் செயின் கழன்று விட்டது. உடனே எங்கள் பட்டாளம் பெரிய பிளான் போட்டது அந்த செயின்னை பூட்டி கொடுக்க சில பேர் சைக்கிளை தந்து விட்டு போனார்கள். அதுக்குள் தோழி உடனே களத்தில் இறங்கி அனைத்து விடயத்தையும் முடித்து விட்டாள். அன்று உதவி செய்ய போய் மூக்குடை பட்டு போனார்கள்.இப்பிடியாக உயர்தரத்தில் ஒரு நாள் இரசாயான வகுப்பு நடக்கவில்லை பயங்கர மழை உடனே எங்கள் படையணி வெள்ள பகுதிகளில் செல்ல திட்டமிட்டு கல்லுவம் சென்று பின் அடுத்து வல்லை ரோட்டுக்கும் போனோம். அதில் அதே இரசாயன ஆசிரியர் வர மாட்டுபட்டது வேற கதை. ஆனால் அன்றைய நாள் போல ஒரு மழை நாளும் மகிழ்ச்சியாக அமையவில்லை. வாய்க்காலுக்குள் சைக்கிள் புதையுண்டு தூக்கி சென்று.மறக்க முடியாது அந்த நாள். அது தொடர்பான படங்களை இணைதிருக்கிறேன்.
இப்பிடி பல மகிழிச்சியான தருணங்களில் இணைந்திருதாலும். சில பல விபத்துக்களை சந்திதிருக்கிறது சைக்கிள். எனது சைக்கிள் பலம் பொருந்தியாதல் சிறு காயங்களையே சந்த்திதுளது ஆனால் ஒரு முறை நானும் எனது கஜனும் மிக விரைவாக சென்றபோது எனது பெடல் கட்டை அவன் முன் சில்லுக்குள் சிக்கி அவன் ஒரு சுவர் அளவு தூரதுக்கு தூக்கி எறியப்பட்டான். தெய்வாதீனமாக ஒரு காயமும் இல்லை. ஆனால் 22 கம்பிகள் மாற்ற வேண்டி இருந்தது. இப்பிடி இதே சம்பவம் மூன்று நான்கு தடவை எங்களுக்கு நடந்துள்ளது. வேறொரு முறை எனது நண்பன் சஜீவன்,திப்ஷன்னா கொளுவீ கொண்டபோது 48 கம்பிகள் இருவருக்கும் மாற்ற வேண்டி இருந்தது. மேலும் வாகனம் வரும் நேரங்களில் இறுதி கணத்தில்தான் வழி விடுவோம் நாங்கள் அனுபவம் சமாளித்து விடுவோம். சில நண்பர்கள் திணறுவார்கள் வகுப்பு விட்டு வரும்போது விலுந்த வரலாறுகள் உண்டு.
இறுதியாக நாங்கள் உயர்தரப்பரிட்சை முடிந்த அடுத்த நாள் காலை 6 மணிக்கே எல்லோரும் சைக்கிளிலில் வெளிக்கிட்டோம். அன்று முளுதும் உலாத்துவது என்று பிளான் கால் உழக்கிற போக்கில் போவதுதான் என்ற பிளான் படியே வெளிக்கிட்டு மண்டான் பிரதேசம் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடம் எல்லாம் சென்று மத்தியானம் பசிக்க வெளிக்கிட்டதால் புத்தூர் அருகே வல்லை வீதியில் வந்து எறினோம் அப்பிடியே வரும் வழியில் செல்வச்சன்னதி சென்று ஆத்தில் குளித்து விட்டு பிறகு அப்பிடியே மண்டபக்கிடங்கு சென்று விட்டு வீடு வந்து சென்றோம். அந்த நாள் இன்னும் மனத்திரைகளில் அதன் பிறகு நான் மேல்படிப்புக்காக கொழும்பு வந்து விட்டேன் எல்லாரும் ஒவ்வொரு திசையில் சென்று விட்டார்கள்.சைக்கிள் வீட்டே அமைதியாக நிட்கிறது. இந்த பயண படங்களையும் இணைதிருக்கிறேன். இந்த வருட இறுதியில் நெடுந்தூர பயணம் திட்டமிட்டிருக்கோம். அதனுடன் மீண்டும் சந்திக்கிறேன்.