Thursday, October 27, 2011

ரா-ஒன்

வேலாயுதம்,ஏழாம்அறிவு இரண்டு படமும் பார்தாச்சு இன்று ரா-ஒன் பார்ப்பம் என்று மஜெஸ்டிக் சிட்டி திரையரங்குக்கு சென்று இருந்தேன் இதுதான் நான் முதன் முதலாக திரையரங்கில் பார்க்கும் ஹிந்தி படம்.என்றாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே சென்று இருந்தேன். ஏனெனில் கிட்டடியில் கிடைத்த அனுபவம்.
  
                        படத்தின் கதை இதுதான் ஷாருக்கான் ஒரு கணனிவிளையாட்டுக்கள் உருவாக்கும் நிறுவனத்தில் லண்டனில் வேலை செய்கிறார்.ஷாருக்கான்,கரீனா கபூர் திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறான்.அவன் பாடசாலையில் கல்வி கற்கிறான்.இந்த நேரத்தில் ஷாருக்கான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு புதிய கணனி விளையாட்டை உருவாக்கும் செயற்றிட்டம் வருகின்றது ஷாருக்கான் தலைமையில் கணனி விளையாட்டு உருவாக்கிறார்கள்.அதில் உருவாகும் வில்லன் நிஜத்திலேயே உலகத்துக்கு வந்து விளையாட்டை உருவாக்கிய ஷாருக்கானை கொன்று விடுகிறான்.அந்த வில்லன்தான் ரா-ஒன் இதை தடுக்க ஜி‌-ஒன் வந்து எப்புடி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி உள்ளார்கள்.எப்படி ரா-ஒன்னை அழித்து யாரை காப்பாற்றுகிறார் என்பதை திரையில் கண்டு கொள்ளுங்கள்.



                                                                        ஷாருக்கான் கொடுத்த விளம்பரங்கள் வீண் போகவில்லை நிச்சயமாக படம் வசூலில் முன்னுக்கு வரும்.ஷாருக்கான் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்.அவரின் மகனான நடிக்கும் சுட்டி பையனும் நன்றாக நடித்து உள்ளான். ஆனால் இந்த சுட்டி பையனுக்கு இவ்வளவு திறமை இருக்குமா என்றது லாஜிக் மீறல். கரீனா கபூருக்கு இப்போ ஒரே ஏறுமுகமாக இருக்கிறது அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். பாடல்கள் ஏலவே வந்து ஹிட் ஆகினாலும் திரைஅமைப்போடு சேர்ந்து மேலும் ஹிட் ஆகும். ஏகோன் பாடிய இரண்டு பாடலிலும் கரீனா,ஷாருக்கின் நடனஅசைவுகள் சூப்பர்.சண்டைக்காட்சிகள்
அட்டாகாசமாக படமாக்கியுள்ளார்கள். ரயில் காட்சி,லண்டன் வீதியில் படமாக்கிய காட்சி என்னை மிகவும் கவர்ந்து உள்ளது.அட மறந்திட்டன் ரஜினியும் ஒரு காட்சியில் வந்து போகிறார ஆனால் ஊடகங்கள் எழுதியது போன்று ஷாருக்கை காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக இல்ல. சில ரஜினி அடிபொடிகள் சொல்லுவது போல ரஜினிக்காண்டிதான் படம் ஓடும் என்பது வீண் பேச்சு.ஆனால் ரஜினிக்கு உரிய மரியாதை கொடுத்திருக்கிற்றார் ஷாருக்.

                     இந்த பதிவு யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் இருந்து எழுதிகொண்டு இருக்கிறேன் படம் இன்று பின்னேரம் பார்த்த்வுடன் விம்ர்சனம் எழுத  வேண்டும் என்ற அவாதான் உடனே பதிவு இட தூண்டியது. இப்ப பஸ்ஸில் ஏழாம் அறிவு போடுகிறார்கள். மொத்தத்தில் தீபாவளிக்கு வந்த ஏழாம் அறிவு திரைக்கதையின் வேகமின்மையாலும்,வேலாயுதம் இரண்டாம் பகுதி மறுபடியும் வழமையான விஜய் படத்தை நினைவு படுத்தியதாலும் ரா-ஒன் இரண்டையும் முற்றுமுழுதாக விழுங்கி விட்டது நான் ஹிந்தியில் ஆங்கில உபதலைப்புகளுடன் பார்த்தேன்.


Tuesday, October 25, 2011

ஏழாம் அறிவு

இன்று முதல் நாள் முதல் ஷோ பார்க்க பாமங்கடை ஈரோசில் பின்னேரம் சென்று இருந்தேன். சூரியா,முருகதாஸ் படம் ஸ்ருதி தமிழில் அறிமுகம் பிரமாண்ட விளம்பரம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நேரத்துக்கே சென்றிருந்தோம். ஆனால் எதிரிபார்த்த ரசிகர்கள் வரவில்லை. படம் 3.10 மணிக்குத்தான் போட்டார்கள். 



                                                               ஆரம்பத்தில் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பல்லவ மன்னனின் 3வது மகனான போதிதர்மா அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்குகிறார் மருத்துவம்,தற்காப்பு கலைகளிலும் கலக்குகிறார். பின் தனது குருமாதா அறிவுரை கேட்டு சீனாவுக்கு பயணமாகிறார் அங்கு ஒரு கிராமத்தில் வைரஸ் நோய் பரவுகிறது போதிதர்மா தான் கற்ற மருத்துவ கலையின் மூலம் குணப்படுத்த முடியாத நோயை குணப்படுத்துகிறார். பின் அக்கிராமத்துக்கு வரும் தீயவர்களை தான் கற்ற கலைகள் மூலம் பந்தாடுகிறார். உடனே அக்கிராமத்து மக்கள் கேட்டு கொண்டதுக்கு இணங்க கலைகளை போதிக்கிறார். அவர் போதித்த கலையான ஷாலோய்ன் இன்றும் சீனாவின் முக்கிய ஒரு தற்பாதுகாப்பு கலையாகும் இன்றும் சீனாவில் கோவில் கட்டி வழிபடுகிறார்களாம் இத்தனைக்கும் போதிதர்மா ஒரு தமிழர். பின் போதிதர்மா சொந்த நாட்டுக்கு பயணிக்கும்போது சீனாவில் போதிதர்மா புதைக்கபட்டால் ஒரு நோயும் வராது என்பதற்காக போதிதர்மா நஞ்சுணவு உட்கொண்டு இறந்து போகின்றார். இந்த வரலாறு போதிதர்மா பற்றி சீன,தாய்லாந்து மக்களுக்கு தெரிந்திருக்கிறது தமிழர்களுக்கு தெரியவில்லை இந்த விடயத்தை வெளிக்கொணர்ந்ததுக்கு முருகதாசை பாராட்டியே ஆக வேண்டும்.



                                                                                                                                                 இனி கதை நிகழ் காலத்துக்கு வருகிறது. ஸ்ருதி ஒரு விஞ்ஞானி நரம்பியல் அணுக்கள் பற்றி ஆராய்கிறார் மூன்று வருடங்களாக அவர் ஆராய்ந்து முடிவில் ஒரு மனிதனுடைய நரம்பியல் அணுவில் அதன் பரம்பரை எச்சங்களை தூண்டிவிடுவதன் மூலம் அதே திறமைகளை கொண்டுவரமுடியும் என்று கண்டுபிடிக்கிறார்.போதிதர்மாவின் பரம்பையினரை கண்டு பிடித்து அவர்களின் பரம்பரை அலகுகளை தூண்டி விடுவதன் மூலம் போதிதர்மாவின் திறமைகளை கண்டுபிடித்து அதன் மூலம் மருத்துவ துறையில் முன்னேற்றம் கொண்டு வரலாம் என்று புறப்படுகிறார். இது பற்றி போதிதர்மா முன்பு எழுதிய நூலிருந்தே தெரிந்து கொள்கிறார்.அந்த போதிதர்மாவின் வாரிசு வேறுயாருமல்ல சர்கஸ் கலைஞர் சூரியாதான் அவரை பின்தொடர்ந்து அவரை உறுதிபடுத்தி கொள்கிறார். இதற்கிடையில் சூரியா ஸ்ருதி மீது காதல் கொள்கிறார் ஒருகட்டத்தில் ஸ்ருதி பற்றி உண்மை தெரியவர சூரியா மனமுடைந்து போகின்றார்.


                                                                                                       இதே நேரம் சீனாவில் இருந்து ஆபரேஷன் ரெட்டுக்கு இந்நாள் போதிதர்மா ஆச்சிரமத்தின் முதன்மை சீடன் தேர்ந்தெடுக்கபட்டு இந்தியா வருகிறான். அவன் இந்தியாவில் வந்து என்ன செய்தான்? சூரியா ஸ்ருதி இறுதியில் சேர்ந்தார்களா? சூரியா,ஸ்ருதி நாட்டுக்கு வந்த ஆபத்தை எப்படி காபாற்றினார்கள் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

                                                                     படத்தில் சூரியா,ஸ்ருதி அருமையாக நடிப்பை வெளிக்காட்டியிருந்தாகள் மேலும் டொன்லீயாக நடித்த நடிகர் பற்றி சொல்லவே நடை,பார்வை தொடக்கம் அனைத்திலும் கூர்மையாகவே இருந்தார். பாடல்கள் ஆரம்ப சீன மொழி பாடலின் பின்னணி இசை என்னை கவர்திருந்தது. அடுத்த பாடல் முன்னந்தி சாரல் நீ ஏலவே கேட்ட இசையாக இருந்தாலும் மனதுக்கினியதாக இருக்கிறது முத்துக்குமாரின் கவித்துவ வரிகளோடு சேர்ந்து மேலும் இப்பாடலில் ஸ்ருதி நீருக்கடியில் வரும் சிறு நடனஅசைவுகள் என்னை கவர்திருந்தது,யம்மா யம்மா பாடலில் இறுதியில் சூரியா செய்யும் நடன அசைவுகளும் ஆர்ப்பாடமில்லாமால் நன்றாக இருக்கிறது. இன்னும் என்ன தோழா ஓட்டவில்லை ஏலே ஏலமா எனக்கு பிடித்திருந்தது என்ன ஸ்ருதி இடையில் தமிழ் கொலை செய்கிறார். மொத்தத்தில் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை இதுக்கு முக்கிய காரணம் தல ஸ்டைலில் உதயநிதி ஸ்டாலினுக்கு சொன்னால் ஓவர் விளம்பரம் படத்துக்கு ஆகாது. சராசரி படம், பார்க்கலாம்.

Saturday, October 1, 2011

இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய கிரிக்கெட் விதிகள்

இன்று அதாவது அக்டோபர் முதலாம் திகதி முதல் ஐ‌சி‌சியின் புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. இருந்தும் அக்டோபர் 11 வரை ஒரு சர்வேதச போட்டிகள் இல்லாமலிருப்பதால் அன்று நடக்கும் மேற்கிந்திய,பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான T20 போட்டிதான் இவ்விதிகளுக்கு அமைய நடக்கும் முதல் போட்டி. அது என்ன புது விதிகள் அதை நாங்களும் பார்ப்போமே.


இனி நீங்கள் மேலுள்ள காட்சிகளை காணமுடியாது. ஆம் இனி இருபது-இருபது,ஒரு நாள்,டெஸ்ட் என அனைத்து வகை போட்டிகளிலும் காயமடைந்த ஒரு ஆட்டக்காரருக்காக இன்னொரு மாற்று ஆட்டகாரர் களமிறங்கி ஓட முடியாது.அவ்வாறான சந்தர்ப்பங்களில் துடுப்பாட்டவீரர் பெவிலியன் சென்று மீண்டும் இன்னிங்சின் இறுதி தருணங்களில் ஆட முடியும்.என்னை பொறுத்தவரை இது முற்றிலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிரானது ஏனெனில் பந்து வீச்சாளர்கள் தசை பிடிப்பு இன்ன பல காரணம் சொல்லி பெவிலியன் சென்று மீண்டும் பந்து வீசுகிறார்கள்தானே அப்பிடி என்றால் இதையும் தடை செய்ய வேண்டும்.

                                                                                              அடுத்து இதுவும் அனைத்து வகையான போட்டிகளிலும் வருகிறது. துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டம் எடுக்கும் போது விக்கெட்டுகளுக்கிடையில் ஓடும்போது களத்தடுப்புக்கு இடையூறாக நடந்து அதை களத்தடுப்பில் ஈடுபடும் அணி நடுவரிடம் முறையிட்டால் நடுவர் துடுப்பாட்டவீரர் வேண்டுமென்றே செய்ததாக கருதினால் களதடுப்புக்கு இடையூறு செய்தார் என்ற வகையில் ஆட்டமிழப்பு வழங்கலாம்.இந்த விதி ஒரு ரன்-அவுட் துடுப்பாட்டவீரரால் இடையூறு செய்யபட்டதா /இல்லையா என்ற தருணங்களில் பொருந்தாது.இதத்தருணங்களில் மூன்றாவது நடுவருடன் கள நடுவர்கள் ஆலோசித்து முடிவு எடுப்பர்.

                                                               இவ்விதியும் அனைத்து போட்டிகளுக்கும் செல்லுபடி ஆகிறது. என்னவெனில் இதுவரை காலமும் பந்து வீச்சாளர் பந்து வீச ஓடி வரும்போது அந்த முனையில் உள்ள துடுப்பாட்ட வீரர், பந்து வீச்சாளர் தனது பின்னங்காலை கிரீஸில் பதிக்க முன் ஓட வெளிக்கிட்டால் பந்து வீச்சாளர் விக்கெட்டை தகர்த்தால் அந்த எதிர் முனையில் உள்ள துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்து விடுவார்.இப்போதைய திருத்தி அமைக்கபட்ட விதிகளின்படி பந்து வீச்சாளர் தனது பந்தை கையில் இருந்து செலுத்த முன் துடுப்பாட்டவீரர் ஓட முனைந்தால் அந்த பகுதியில் உள்ள விக்கெட்களை தகர்ப்பதன் மூலம் ஆட்டமிழக்க செய்யலாம்.ஆனால் இம்முறையிலான ஆட்டமிழப்பு வெற்றிகரமோ இல்லையோ அந்த பந்து செல்லுபடியற்றதாகவே அமையும்.


                                                                           அடுத்து ஒரு நாள் போட்டிகளில் உள்ள பவர்பிளே 20 பந்து பரிமாற்றங்களில முதல் பத்து பரிமாற்றங்களும் கட்டாயம் பவர்பிளேதான் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அடுத்த துடுப்பெடுத்தாடும் அணிக்கான 5 பந்து பரிமாற்றங்களும்,களத்தடுப்பில் ஈடுபடும் அணி தெரிவு செய்யும் 5 பந்து பரிமாற்றங்களும் இனி இன்னிங்சின் 15வது பந்து பரிமாற்றத்தில் இருந்து 40வது பந்து பரிமாற்றகளுக்குள்தான் தெரிவு செய்யபடவேணும்.இவ்விதி 40 பந்துபரிமாற்றங்களுக்கு விட மேலும் குறைக்காத ஆட்டங்களுக்கே செல்லுபடியாகும்.

                                                                                                      அடுத்த விதியும் ஒரு நாள் ஆட்டங்களுக்கு மட்டும்தான் அதாவது ஒவ்வொரு இன்னிங்சின் போதும் இரு முனைகளிலும் இருந்தும் ஒவ்வோர் புதிய பந்து பயன்படுத்தபடும். ஆட்டத்தின் 34 பந்து பரிமாற்றங்களுக்கு பிறகு இனி பந்து மாற்றபடமாட்டாது.

                                                                                                                        அடுத்த விதியும் ஒரு நாள் ஆட்டங்களுக்குதான் அதாவது ஒரு அணி துடுப்பெடுத்தாடி அடுத்த அணி துடுப்பெடுத்தாடுவதற்கான குறைந்த நேரம் 20இல் இருந்து 30தாக அதிகரிக்கபட்டுள்ளது. இவ்விதி தடைப்படாத ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

                                                           அடுத்த விதி டெஸ்ட் போட்டிகளுக்கானது அதாவது மதிய நேர இடைவேளையின் பொது துடுப்பெடுத்தாடும் அணி 9 விக்கெட்களை இழந்திருந்தால் மதிய நேர இடைவேளையை அதிகபட்சமாக 30 நிமிடங்கள் தாமதபடுத்தலாம். முன்னர் இவ்வாறு தேநீர் இடைவேளையின் போது மட்டுமே இருந்தது.

                                                        அடுத்த விதியும் டெஸ்ட் போட்டிகளுக்கானதுதான்  யாதெனில் டெஸ்ட் ஆட்டங்களில் இரண்டாவது,மூன்றாவது ஷெசன்களை விளையாடும் அணிகளின் கப்டன் நடுவர்களை கேட்டு கொண்டால் கள நடுவர் நிச்சயமாக ஒரு முடிவு பெறப்படும் என நினைத்தால் மட்டுமே 15 நிமிடங்கள்(அதிகபட்சம் 4 பந்து பரிமாற்றங்கள்) வழங்க முடியும்.இப்படியான சந்தர்ப்பம் வழங்கபட்டால் நிச்சயமாக அந்த ஷேசன் முற்றிலும் விளையாடி முடிக்க வேண்டும்.போட்டியை முடிக்கும் நிலை குறிப்பிட்ட ஷேசனுக்கு இறுதி நிலைக்கு முன்னதாக இருந்தால் கூட கட்டாயம் அந்த ஷேசன் நிறைவு செய்யபடவேணும்.மேற்படி வழங்கப்பட்ட  மேலதிக நேரம் அன்றைய நாளுக்குரிய நேரத்தில் இருந்து கழிக்கபடும்.

                                                                                               மேற்கூறிய விதிகளே இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.இந்த விதிமாற்றம் பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் நண்பர்களே.