இன்று ஆபிரிக்க கண்டத்தில் 54வது நாடாக உதயமாகிறது.இன்று தலைநகர் ஜீபாவில் நடக்கும் கொண்டாட்டங்களில் பான் கீ மூன், சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் மேலும் பல உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கின்றனர். எமது சார்பாகவும் கொண்டாட்டங்களில் பங்கு பற்ற அழைக்கபட்டதாக சில ஊடகங்கள் மூலம் அறிந்தேன். ஆனால் உறுதிப்படுத்தி கொள்ள முடியவில்லை.
ஆனால் இந்நாட்டு மக்கள் இலகுவாக சுதந்திரத்தை பெறவில்லை 22 வருடபோராட்டம், மேலும் 1.5 மில்லியன் உயிர்களை இதற்கு விலையாக செலுத்தி இருக்கின்றனர். 2005ம் ஆண்டில் புஷ் ஆட்சியில் அமெரிக்காவின் தலையீட்டின் கீழ் எட்டப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் தென் சூடான் இதுவரை தனியாக இயங்கி வந்தது.பின் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற தேர்தலில் 99 சதவீத மக்கள் பிரிந்து செல்ல வாக்களித்ததால் சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரும் சம்மதித்தார்/சம்மதிக்க வைக்கபட்டார்.என்னதான் சுதந்திரம் பெற்றாலும் அமெரிக்காவின் பொம்மையாகவே இருக்கும் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த கூடாது என அமெரிக்கா மூக்கை நுளைத்தாலும் அமெரிக்கா தூர நோக்கோடுதான் களம் இறங்கி இருக்கிறது. வேற என்ன எண்ணை வளம்தான். நாட்டின் தென் பகுதியில்தான் எண்ணை வளம் அதிகமாக இருக்கிறது.
ஆனாலும் ஏதோ நாடு கடந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வளங்குதோ என்னமோ இங்கதான் முதல் தூதரகம் எண்டு ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தேன். நாட்டின் மொத்த சனத்தொகை 7.5-9.7 மில்லியன். நாட்டின் ஏற்றுமதியாக எண்ணை வளம் உள்ளபோதும். உலகில் உள்ள அபிவிருத்தி அடையாத நாடுகளில் இதுவும் ஒன்றாகும். நாட்டில் உள்ள சிறுவர்களில் 7 பேருக்கு ஒருவர் 5 வயதுக்கு முன்னே இறக்கின்றனர். நாட்டின் பரப்பளவு 619,745 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். பேசப்படும் மொழிகள் ஆங்கிலம்,அரபிக்,ஜீபா அரபிக்,டின்கா.
முதலாவது ஜனதிபதியாக இருக்கும் Salva Kiir Mayardit பல சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறார். சூடானுடன் எல்லை பிரச்சினை, எண்ணை வளம் போன்றவற்றை பகிர்வதில் உள்ள சிக்கல்,நாட்டில் உள்ள 7 போராட்டக்குழுகள், மேலும் நாட்டின் வருமானம் சமமாக பகிரப்படவேண்டும்,கல்வியறிவு மிகவும் அடி மட்டத்தில் உள்ளது. மேலும் சுகாதார வசதிகள் பிற உட் கட்டமைப்பு வசதிகள் எல்லாம் அடி மட்டத்திலிலேயே உள்ளன. எனவே மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது. 193 நாடாக ஐநா சபையில் பதிவாகிறது. 194வது நாடு எப்ப வரும்?????????????
12 comments:
உலக அரங்கில் புதிதாக உருவாகும் தென் சூடான் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க. அருமையான விடயம், எங்கள் நாட்டில் 30 வருடப் போராட்டம் இடம் பெற்றாலும், எமக்குள் நாமே பல குழுக்களாகப் பிரிவினை கொண்ட செயற்பாடுகள் தான் எம் விடுதலையினை வேரறுத்தது என்று கூறலாம்.
தென் சூடான் 22 வருடம் போராடினாலும், அவர்களிடத்தே பல துணைக்குழுக்கள் இல்லை, உப குழுக்கள் இல்லை. ஒரே அணியில் போராடினார்கள். ஆனால் நாங்கள் தமிழர்கள்- ஒருவர் முன்னேறுவதை விரும்பாது அடுத்தடுத்து வேண்டத்தகாத செயல்களைச் செய்த காரணத்தால் தான்,
இன்று வரை எதிர்காலமேதுமற்று அடிமை எனும் உணர்வோடு இருக்கிறோம்.
@ நிரூபன்
இல்லை பாஸ் அவங்கிலடையும் 7 போராட்டக் குழுகள் உண்டு.
ஆனா இந்த விஷயம் இலங்கைக்கு நடக்கவே நடக்காது. தமிழ் ஈழம் தமிழர்களுக்கு தீர்வாகாது.
@ jagadeesh said..
தனி தமிழ்ஈழம் ஒன்றே தீர்வு. வேறு ஒன்றும் தீர்வாகாது
அப்படி நீங்க நினசீங்கனா,,, தீர்வே இல்லாம தா இருக்கும். அந்த சின்ன தீவ இன்னும் எத்தன கூறு போடணும்.
தனி நாடு கொடுத்த மட்டும் என்ன செஞ்சுடுவீங்க. யார்கிட்டயாது சண்டப் போட்டுட்டு தா இருப்பீங்க. உங்களால தா ஸ்ரீலங்கா முன்னேற தடையா இருக்கு. இந்த தீவிரவாத குணத்த விட்டாலே போதும், எங்கயோ போய்டலாம்.
எமது பரப்பளவை விட குறைந்த நாடுகள் உண்டு தெரியாவிடின் முதல் போய் புவியல் படிக்கவும்.
கடைசியில அஹிம்சை வழியில போராடாம, ஆயுதம் எந்துநீங்கள்ள, அப்புறம் எப்படி நல்ல முடிவு கிடைக்கும்.
ஒவ்வொரு மனிதனிடமும் எல்லா குணனங்கள் உண்டு. நாங்கள் அதை எடுத்து சொல்கிறோம். உங்களை போன்று அல்ல நாங்கள்? நிலமை புரியாமல் கதைக்க கூடாது? வலி அவவனுக்கு வந்தால்தான் புரியும்
நாங்கள் உங்கட நாடோடையும் அகிம்சை வழி போராடி என்ன முடிவு கிடைச்சது?
என்னமோ போங்க. சிங்களர்களோடு ஒற்றுமையா வாழுங்க.
அறிவுரை சொல்றது எவனும் சொல்லலாம்.
Post a Comment