Wednesday, August 31, 2011

மங்காத்தா

நெடு நாள் காத்திருப்பு, பலத்த எதிர்பாப்பு என பல அழுத்தங்களுக்குள் நேற்று தான் மங்காத்தா வெளிவந்தது. முதல் காட்சி சவோய் திரையரங்கில் நேற்று இரவு 10.30 க்கு டிக்கெட் எடுத்தாச்சு.ரூமில் இருந்து வெளிக்கிட்டால் ஒரே மழை.(நல்லது நடக்கும்போது மழை பெய்யுமாம்). ஒரு மாதிரி திரையரங்க்குக்கு சென்றால் உள்ளே போவதுக்கு பெரும்பாடுபட்டு உள்ளே சென்றாகிவிட்டது.தலயின் 50வது படம் பெரும் எதிர்பார்ப்போடு  போய் அமர்ந்தோம். வழமை போல் விளம்பரங்களை போட்டு கடுப்பேத்தாமல் உடனேயே படத்தை போட்டார்கள்.


                                                                       ஆரம்பமே அதிரடியாக அறிமுகம் ஆனார் அஜீத் கம்பீரமான,மிடுக்கான நடை, சிறு தொப்பை விநாயக்காக கலக்கல் அறிமுகம்.அடுத்து ஆரம்ப எழுத்து காட்சிகளில் சிறப்பாக கிராபிக்ஸ்சை கையாண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாட்டு நாணயதாள்களிலும்.வழமையான வெங்கட்பிரபு டீம் பிரேம்ஜி,வைபவ்,மகத் மேலும் அர்ஜூன்,த்ரிஷா,அஞ்சலி,ஆன்ட்ரியா,லக்ஷ்மிராய் என நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியிருந்தது.ஆட்டம் தொடக்கத்தில் மெதுவாகவே ஆரம்பித்தது போக போகத்தான் சூடு பிடித்தது.ஆரம்பத்தில் ஒரு காட்சி ஒரு செய்தியை சொல்லி சென்றது கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக ஒரு போலீஸ் அதிகாரி தற்கொலை செய்ததால்தான் அது பற்றி காவல்துறையோ,அரசாங்கமோ உடனே செயற்பட்டது. அது ஒரு Xஓ,Yஓ ஆக இருந்தால் அப்பிடியே கிடப்பில் போடப்பட்டிருக்கும். இது நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருக்கும் காரணமான ஒன்றை எனக்கு ஞாபகபடுத்திருக்கிறது. அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டத்தை முறியடிக்க வருகிறார். அஜித்,த்ரிஷா காதல் அடுத்த பக்கத்தில் போகின்றது அதிலும் வாடாபின்லாடா பாடல் கிராபிக்ஸ் கலக்கல். மேலும் முதல் பாதியில் அஜித் பேசும் லைட்டை போட்டுட்டு வண்டி ஓடினா தப்பில்லை ஆனா லைட்டா போட்டுட்டு வண்டி ஒட்டவே கூடாது மேலும் த்ரிஷா சொன்னா பையன்கள் சும்மா இருந்தாலும் பொன்னுக விடமாடாங்களே போன்ற வசனங்கள் கலக்கல் மேலும் அஜித் தண்ணி அடித்து விட்டு கதைப்பது கலக்கல். மேலும் அஜித் சில இடங்களில்தான் ஆடினாலும் நடன அசைவுகள் ரசிக்க வைக்கிறார்.




Add caption




                                       இனித்தான் கதை கருவை நோக்கி நகருகிறது.பேட்டிங் பணமான 500 கோடியை அஜித்,பிரேம்ஜி,மகத்,வைபவ்,கணேஷ் சேர்ந்து கொள்ளையடிக்க போடும் அதிரடி திட்டம் கலக்கல். ஆனால் இந்த இடத்திலேயே Ocean 11 சில இடங்களில் நினைவு வருகிறது. இதில் வரும் பைக் ரேஸ் ரசிக்க வைக்கிறது.பிறகு பேட்டிங் பணம் 500 கோடியை கொள்ளையடித்து விடுகிறார்கள். பின் பங்கு பிரிக்கும் சண்டையில் நண்பர்களிடையே மோதல் இதிலேயே அஜித் நிஜமான வில்லனாக தெரிகிறார்.நடிப்பில் கலக்கிருக்கிறார். மீதி என்ன நடந்தது என்பதை திரையில் கண்டு கொள்ளுங்கள். இறுதி டிவிஸ்ட் எதிர்பார்க்காது.

                                                                                                                       
                                                                                                                   வெங்கட்பிரபுவின் திரைக்கதை,காட்சிகளை நகர்த்தி சென்ற விதம் கலக்கல் முன்னைய மூன்று பாடங்களையும் விட பின்னியிருக்கிறார்.பிரேம்ஜியும் கலக்கி இருக்கிறார். மேலும் பின்னணி இசைதான் படத்தின் பெரிய பலமே யுவன் வழமை போலவே கலக்கி இருக்கிருக்கிறார்.மேலும் ஒளிப்பதிவாழர் அனைவரையும் ஸ்டைலிஷாக காட்டி உள்ளார்.மேலும் உடை வடிவமைப்பாளர் வெங்கட்பிரபுவின் சகோதரி மேலும் அழாக காட்டியுள்ளார் அனைவரையும்.மொத்தத்தில் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு மங்காத்தா கூறி செல்வது கையாள வேண்டிய விதத்தில் ஒவ்வொரு நடிகரையும் கையாண்டால் வெற்றிதான். மேலும் தமிழ் சினிமாவிலேயே ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்துக்கு இணையாக நடிக்கக்கூடியவர் அஜீத் ஒருவரே.

7 comments:

ஷஹன்ஷா said...

ஃஃஃஃதமிழ் சினிமாவிலேயே ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்துக்கு இணையாக நடிக்கக்கூடியவர் அஜீத் ஒருவரே.ஃஃஃ

சும்மா போங்க..படத்தில காமடியன் பங்கு சரியா இல்லை என்றதுக்காக நீங்க காமடி பண்ணாதீங்க...

Mayooran said...
This comment has been removed by the author.
வந்தியத்தேவன் said...

நல்லா இருக்கு விமர்சனம்
ஜனகனை வழிமொழிகின்றேன் ஹிஹிஹி

Unknown said...

@ “நிலவின்” ஜனகன்,@வந்தியத்தேவன்
அப்பிடின்னா படம் மூளுதும் கொமெடியான இருக்கிறவங்களை என்ன செய்றது?

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
சுடச் சுட விமர்சனம் சூப்பரா இருக்கு,
படத்தின் பின்னணி இசை,
பாடல் காட்சிகள், பாடல் பற்றிக் கொஞ்சம் அலசியிருந்தா இன்னும் பிரமாதமா இருக்கும் பாஸ்.

K.s.s.Rajh said...

வணக்கம் நண்பரே இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் இனிதொடர்ந்து வருவேன்.நன்றி

அப்பறம் என் கடைப்பக்கமும் நேரம் இருந்தால் வந்து போங்க.

அஜித் ரசிகர்களுக்கு விருந்து மங்காத்தா

எஸ் சக்திவேல் said...

முழுப் பதிவும் முரண்நகைப் பதிவா?