கோ ஏற்படுத்திய தாக்கம். ஜீவாவின் வந்தான் வென்றான் உடனேயே பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இன்று அந்தியில்தான் நேரம் அமைந்தது. பாமன்கடை ஈரோஸ் திரையரங்கில் சென்று பார்த்தேன். அவர்கள் படம் ஆரம்பிக்க முன்னும்,இடைவேளையிலும் ஒளிபரப்பிய புகைத்தலுக்கு எதிரான விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்தது அகோன் நா நா பாடாலோடு சேர்த்து.
படம் இரு சகோதரர்கள்(அப்பா வேறு) கீரியும்,பாம்புமாக இருப்பதாக காண்பித்து ஆரம்பிக்கிறது.இருவரும் வளர்ந்து இளையவன் ஜீவா பெரியவன் ரமணா(நந்தா) ஆகின்றனர்.ரமணா மும்பையில் பெரிய ரௌடி.ஜீவா குத்துசண்டை வீரர் தேசியமட்ட தெரிவுக்கு சென்று கொண்டிருக்கும்போதும் அஞ்சனா(டாப்சி) தனது கட்டிட கலை நேர்முகத் தேர்வுக்கு சென்று கொண்டிருக்கும்போது ஒரு சிறு மோதலில் சந்தித்து கொள்கின்றனர். எல்லா காதலும் மோதலில்தானே ஆரம்பிக்கும் இங்கும் காதல் தொற்றி கொள்கிறது ஜீவா மனதில்.ஆனால் டாப்சி அப்பா சொல்லும் பையனே கட்டிபேன். தனது அப்பா ஒத்துகொண்டால் கட்டிக்கொள்வாதாக சொல்லுகிறார். ஆனால் அவர் மறுக்கிறார். பின் எதிர்பாராதவிதமாக அவரது தந்தை இறந்து விடுகிறார்.பின் டாப்சி ஜீவாவுக்கு கட்டிகொள்வதாக ஒத்துக்கொள்கிறார். ஆனால் தந்தையின் இறப்புக்கு காரணமானவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்தால் மட்டுமே. அதட்கு காரணமானவன் வேறு யாருமல்ல ஜீவாவின் அண்ணனான ரமணாவே.இறுதியில் ஜீவா நடத்தும் போராட்டத்தில் ஜீவா வெற்றி பெற்றாரா? அண்ணனை காப்பாற்றினாரா? டாப்சியை கை பிடித்தாரா என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஜீவா நடித்திருக்கிறார், கோ நிறைய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. வெள்ளாவி பொண்ணு டாப்சி வெள்ளையாதான் இருக்கிறார். என்றாலும் நடிக்கிறேன் என்று சொல்லி ஏதோ செய்கிறார். சுத்தமாக நடிப்பே வரவில்லை.டாப்சிக்கு தமிழ் சொல்லி கொடுக்கும் மங்காத்தா ம நடிகர் நடிப்பும் சொல்லி கொடுக்கலாமே பாடல் காட்சிகளில் ஓரளவு ஆட செய்கிறார்.என்னதான் இருந்தாலும் டாப்சியின் புன்னகை என் மனதை கொள்ளையடித்தது. வகுப்பு தோழி ஒருவரின் புன்னகயை மீண்டும் கொண்டு வருகிறது. சந்தானம் வழமை போலவே செய்திருக்கிறார். அதிக இடங்களில் வருகிறார்.ஆனால் சிறுத்தை படம் அளவுக்கு கொமெடி இல்லை. வேறு ரஹ்மான் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். மேலும் மனோபாலா,நிழல்கள் ரவி வீணடிக்கபட்டிருக்கிறார்கள்.இயக்குனர் கண்ணன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.இசை தமன் சும்மா பின்னி எடுத்திருக்கிறார். இவரின் முதல் படமான ஈரத்தில் இருந்தே இவர் ரசிகன் நான். அஞ்சனா,காஞ்சனமாலா,அஞ்சோ,திறந்தேன் ஏற்கனவே அதிகம் கேட்கும் பாடல்களாக மாறிவிட்டது. அதிலும் காஞ்சனமாலா படமாக்கபட்ட விதம் நன்றாக உள்ளது. தமன் ஒரு பாடலின் இடையில் அசத்தலாக ட்ரம்ஸ் வாசித்து செல்கிறார்.மொத்தத்தில் படம் சுமார் ரகம்.இறுதியாக பார்த்த இரண்டு படமும்(மங்காத்தா,வந்தான் வென்றான்) மும்பை கதைக்களம்.தமிழ்நாட்டில் கதை பற்றாக்குறையோ?
4 comments:
நல்லதோர் விமர்சனப் பகிர்வு,
படம் இன்னும் பார்க்கவில்லை.
டைம் கிடைக்கும் போது பார்க்கிறேன்,
டாப்சியின் புன்னை என் மனதை கொள்ளையடித்தது.//
பாஸ்..இவ் இடத்தில் புன்னகை என்று வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா
நிரூபன் said...
//டாப்சியின் புன்னை என் மனதை கொள்ளையடித்தது.//
பாஸ்..இவ் இடத்தில் புன்னகை என்று வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா//
சுட்டி காட்டியமைக்கு நன்றி.நான் கவனிக்கவில்லை.திருத்திவிட்டேன்
மும்பை தாக்கம் தமிழ் சினிமாவில் பாட்ஷாவில இருந்து தொடர்ந்துகிட்டே இருக்கு :)
Post a Comment