Saturday, October 1, 2011

இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய கிரிக்கெட் விதிகள்

இன்று அதாவது அக்டோபர் முதலாம் திகதி முதல் ஐ‌சி‌சியின் புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. இருந்தும் அக்டோபர் 11 வரை ஒரு சர்வேதச போட்டிகள் இல்லாமலிருப்பதால் அன்று நடக்கும் மேற்கிந்திய,பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான T20 போட்டிதான் இவ்விதிகளுக்கு அமைய நடக்கும் முதல் போட்டி. அது என்ன புது விதிகள் அதை நாங்களும் பார்ப்போமே.


இனி நீங்கள் மேலுள்ள காட்சிகளை காணமுடியாது. ஆம் இனி இருபது-இருபது,ஒரு நாள்,டெஸ்ட் என அனைத்து வகை போட்டிகளிலும் காயமடைந்த ஒரு ஆட்டக்காரருக்காக இன்னொரு மாற்று ஆட்டகாரர் களமிறங்கி ஓட முடியாது.அவ்வாறான சந்தர்ப்பங்களில் துடுப்பாட்டவீரர் பெவிலியன் சென்று மீண்டும் இன்னிங்சின் இறுதி தருணங்களில் ஆட முடியும்.என்னை பொறுத்தவரை இது முற்றிலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிரானது ஏனெனில் பந்து வீச்சாளர்கள் தசை பிடிப்பு இன்ன பல காரணம் சொல்லி பெவிலியன் சென்று மீண்டும் பந்து வீசுகிறார்கள்தானே அப்பிடி என்றால் இதையும் தடை செய்ய வேண்டும்.

                                                                                              அடுத்து இதுவும் அனைத்து வகையான போட்டிகளிலும் வருகிறது. துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டம் எடுக்கும் போது விக்கெட்டுகளுக்கிடையில் ஓடும்போது களத்தடுப்புக்கு இடையூறாக நடந்து அதை களத்தடுப்பில் ஈடுபடும் அணி நடுவரிடம் முறையிட்டால் நடுவர் துடுப்பாட்டவீரர் வேண்டுமென்றே செய்ததாக கருதினால் களதடுப்புக்கு இடையூறு செய்தார் என்ற வகையில் ஆட்டமிழப்பு வழங்கலாம்.இந்த விதி ஒரு ரன்-அவுட் துடுப்பாட்டவீரரால் இடையூறு செய்யபட்டதா /இல்லையா என்ற தருணங்களில் பொருந்தாது.இதத்தருணங்களில் மூன்றாவது நடுவருடன் கள நடுவர்கள் ஆலோசித்து முடிவு எடுப்பர்.

                                                               இவ்விதியும் அனைத்து போட்டிகளுக்கும் செல்லுபடி ஆகிறது. என்னவெனில் இதுவரை காலமும் பந்து வீச்சாளர் பந்து வீச ஓடி வரும்போது அந்த முனையில் உள்ள துடுப்பாட்ட வீரர், பந்து வீச்சாளர் தனது பின்னங்காலை கிரீஸில் பதிக்க முன் ஓட வெளிக்கிட்டால் பந்து வீச்சாளர் விக்கெட்டை தகர்த்தால் அந்த எதிர் முனையில் உள்ள துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்து விடுவார்.இப்போதைய திருத்தி அமைக்கபட்ட விதிகளின்படி பந்து வீச்சாளர் தனது பந்தை கையில் இருந்து செலுத்த முன் துடுப்பாட்டவீரர் ஓட முனைந்தால் அந்த பகுதியில் உள்ள விக்கெட்களை தகர்ப்பதன் மூலம் ஆட்டமிழக்க செய்யலாம்.ஆனால் இம்முறையிலான ஆட்டமிழப்பு வெற்றிகரமோ இல்லையோ அந்த பந்து செல்லுபடியற்றதாகவே அமையும்.


                                                                           அடுத்து ஒரு நாள் போட்டிகளில் உள்ள பவர்பிளே 20 பந்து பரிமாற்றங்களில முதல் பத்து பரிமாற்றங்களும் கட்டாயம் பவர்பிளேதான் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அடுத்த துடுப்பெடுத்தாடும் அணிக்கான 5 பந்து பரிமாற்றங்களும்,களத்தடுப்பில் ஈடுபடும் அணி தெரிவு செய்யும் 5 பந்து பரிமாற்றங்களும் இனி இன்னிங்சின் 15வது பந்து பரிமாற்றத்தில் இருந்து 40வது பந்து பரிமாற்றகளுக்குள்தான் தெரிவு செய்யபடவேணும்.இவ்விதி 40 பந்துபரிமாற்றங்களுக்கு விட மேலும் குறைக்காத ஆட்டங்களுக்கே செல்லுபடியாகும்.

                                                                                                      அடுத்த விதியும் ஒரு நாள் ஆட்டங்களுக்கு மட்டும்தான் அதாவது ஒவ்வொரு இன்னிங்சின் போதும் இரு முனைகளிலும் இருந்தும் ஒவ்வோர் புதிய பந்து பயன்படுத்தபடும். ஆட்டத்தின் 34 பந்து பரிமாற்றங்களுக்கு பிறகு இனி பந்து மாற்றபடமாட்டாது.

                                                                                                                        அடுத்த விதியும் ஒரு நாள் ஆட்டங்களுக்குதான் அதாவது ஒரு அணி துடுப்பெடுத்தாடி அடுத்த அணி துடுப்பெடுத்தாடுவதற்கான குறைந்த நேரம் 20இல் இருந்து 30தாக அதிகரிக்கபட்டுள்ளது. இவ்விதி தடைப்படாத ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

                                                           அடுத்த விதி டெஸ்ட் போட்டிகளுக்கானது அதாவது மதிய நேர இடைவேளையின் பொது துடுப்பெடுத்தாடும் அணி 9 விக்கெட்களை இழந்திருந்தால் மதிய நேர இடைவேளையை அதிகபட்சமாக 30 நிமிடங்கள் தாமதபடுத்தலாம். முன்னர் இவ்வாறு தேநீர் இடைவேளையின் போது மட்டுமே இருந்தது.

                                                        அடுத்த விதியும் டெஸ்ட் போட்டிகளுக்கானதுதான்  யாதெனில் டெஸ்ட் ஆட்டங்களில் இரண்டாவது,மூன்றாவது ஷெசன்களை விளையாடும் அணிகளின் கப்டன் நடுவர்களை கேட்டு கொண்டால் கள நடுவர் நிச்சயமாக ஒரு முடிவு பெறப்படும் என நினைத்தால் மட்டுமே 15 நிமிடங்கள்(அதிகபட்சம் 4 பந்து பரிமாற்றங்கள்) வழங்க முடியும்.இப்படியான சந்தர்ப்பம் வழங்கபட்டால் நிச்சயமாக அந்த ஷேசன் முற்றிலும் விளையாடி முடிக்க வேண்டும்.போட்டியை முடிக்கும் நிலை குறிப்பிட்ட ஷேசனுக்கு இறுதி நிலைக்கு முன்னதாக இருந்தால் கூட கட்டாயம் அந்த ஷேசன் நிறைவு செய்யபடவேணும்.மேற்படி வழங்கப்பட்ட  மேலதிக நேரம் அன்றைய நாளுக்குரிய நேரத்தில் இருந்து கழிக்கபடும்.

                                                                                               மேற்கூறிய விதிகளே இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.இந்த விதிமாற்றம் பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் நண்பர்களே.                               

2 comments:

ம.தி.சுதா said...

மிகவும் ஆழமான அலசல் சகோதரா..

வருகைக்குத் தான் மிகவும் பிந்தி விட்டது என நினைக்கிறேன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

Unknown said...

@ ♔ம.தி.சுதா♔ said...
//மிகவும் ஆழமான அலசல் சகோதரா..

வருகைக்குத் தான் மிகவும் பிந்தி விட்டது என நினைக்கிறேன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//
நன்றி அண்ணா.