Thursday, October 27, 2011

ரா-ஒன்

வேலாயுதம்,ஏழாம்அறிவு இரண்டு படமும் பார்தாச்சு இன்று ரா-ஒன் பார்ப்பம் என்று மஜெஸ்டிக் சிட்டி திரையரங்குக்கு சென்று இருந்தேன் இதுதான் நான் முதன் முதலாக திரையரங்கில் பார்க்கும் ஹிந்தி படம்.என்றாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே சென்று இருந்தேன். ஏனெனில் கிட்டடியில் கிடைத்த அனுபவம்.
  
                        படத்தின் கதை இதுதான் ஷாருக்கான் ஒரு கணனிவிளையாட்டுக்கள் உருவாக்கும் நிறுவனத்தில் லண்டனில் வேலை செய்கிறார்.ஷாருக்கான்,கரீனா கபூர் திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறான்.அவன் பாடசாலையில் கல்வி கற்கிறான்.இந்த நேரத்தில் ஷாருக்கான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு புதிய கணனி விளையாட்டை உருவாக்கும் செயற்றிட்டம் வருகின்றது ஷாருக்கான் தலைமையில் கணனி விளையாட்டு உருவாக்கிறார்கள்.அதில் உருவாகும் வில்லன் நிஜத்திலேயே உலகத்துக்கு வந்து விளையாட்டை உருவாக்கிய ஷாருக்கானை கொன்று விடுகிறான்.அந்த வில்லன்தான் ரா-ஒன் இதை தடுக்க ஜி‌-ஒன் வந்து எப்புடி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி உள்ளார்கள்.எப்படி ரா-ஒன்னை அழித்து யாரை காப்பாற்றுகிறார் என்பதை திரையில் கண்டு கொள்ளுங்கள்.



                                                                        ஷாருக்கான் கொடுத்த விளம்பரங்கள் வீண் போகவில்லை நிச்சயமாக படம் வசூலில் முன்னுக்கு வரும்.ஷாருக்கான் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்.அவரின் மகனான நடிக்கும் சுட்டி பையனும் நன்றாக நடித்து உள்ளான். ஆனால் இந்த சுட்டி பையனுக்கு இவ்வளவு திறமை இருக்குமா என்றது லாஜிக் மீறல். கரீனா கபூருக்கு இப்போ ஒரே ஏறுமுகமாக இருக்கிறது அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். பாடல்கள் ஏலவே வந்து ஹிட் ஆகினாலும் திரைஅமைப்போடு சேர்ந்து மேலும் ஹிட் ஆகும். ஏகோன் பாடிய இரண்டு பாடலிலும் கரீனா,ஷாருக்கின் நடனஅசைவுகள் சூப்பர்.சண்டைக்காட்சிகள்
அட்டாகாசமாக படமாக்கியுள்ளார்கள். ரயில் காட்சி,லண்டன் வீதியில் படமாக்கிய காட்சி என்னை மிகவும் கவர்ந்து உள்ளது.அட மறந்திட்டன் ரஜினியும் ஒரு காட்சியில் வந்து போகிறார ஆனால் ஊடகங்கள் எழுதியது போன்று ஷாருக்கை காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக இல்ல. சில ரஜினி அடிபொடிகள் சொல்லுவது போல ரஜினிக்காண்டிதான் படம் ஓடும் என்பது வீண் பேச்சு.ஆனால் ரஜினிக்கு உரிய மரியாதை கொடுத்திருக்கிற்றார் ஷாருக்.

                     இந்த பதிவு யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் இருந்து எழுதிகொண்டு இருக்கிறேன் படம் இன்று பின்னேரம் பார்த்த்வுடன் விம்ர்சனம் எழுத  வேண்டும் என்ற அவாதான் உடனே பதிவு இட தூண்டியது. இப்ப பஸ்ஸில் ஏழாம் அறிவு போடுகிறார்கள். மொத்தத்தில் தீபாவளிக்கு வந்த ஏழாம் அறிவு திரைக்கதையின் வேகமின்மையாலும்,வேலாயுதம் இரண்டாம் பகுதி மறுபடியும் வழமையான விஜய் படத்தை நினைவு படுத்தியதாலும் ரா-ஒன் இரண்டையும் முற்றுமுழுதாக விழுங்கி விட்டது நான் ஹிந்தியில் ஆங்கில உபதலைப்புகளுடன் பார்த்தேன்.


10 comments:

Vimalaharan said...

அடிசக்கை இப்ப ஹிந்தி படம் கூட பார்க்க ஆரம்பிச்சிடீங்களா! ஊருக்கு போக முதல், கிடைச்ச எல்லா படத்தையும் பார்த்திடீங்க போல.. தொடர்ந்து விமர்சனம் எழுதுங்க.. நல்லா இருக்கு :)

ரைட்டர் நட்சத்திரா said...

இதையும் பார்த்தீட்டிங்களா !

Unknown said...

@Vimalaharan said...
//அடிசக்கை இப்ப ஹிந்தி படம் கூட பார்க்க ஆரம்பிச்சிடீங்களா! ஊருக்கு போக முதல், கிடைச்ச எல்லா படத்தையும் பார்த்திடீங்க போல.. தொடர்ந்து விமர்சனம் எழுதுங்க.. நல்லா இருக்கு :)//

நன்றி வருகைக்கு.இனி விடுமுறை என்பதால் எழுதுவேன்.

Unknown said...

@கார்த்தி கேயனி said...
//இதையும் பார்த்தீட்டிங்களா !//

பின்ன விடுவமா? இதான் தீபாவளி விருந்து.

கார்த்தி said...

நான் முதலாவது தியட்டரில பாத்த ஹிந்திபடம் கஜினி! ராஒண்ணு நல்ல copy வாந்த வீட் பாக்கிற பிளான்!!!

சுதா SJ said...

வணக்கம் பாஸ்.. நம்ம காட்டான் மாமாவின் சுயம்வரத்தில் நீங்க போட்ட கமெண்ட்ஸ் பார்த்து இவருக்கு நமக்கு நிறைய அத்தை பொண்ணுங்க இருக்கிறது எப்படி தெரிந்தது என்று எண்ணியபடி வந்தேன்.. ஹீ ஹீ.....

விமர்சனம் நல்லா இருக்கு பாஸ்... நான் இன்னும் உந்த படத்தை பார்க்க வில்லை ஆகையால் கருத்து சொல்ல முடியவில்லை. பட் உங்க விமர்சனம் சூப்பெர்...

காட்டான் said...

அட இஞ்சேயும் துஷியா நானும் ஒரு புது விருந்தாளி வந்திருந்தாரே பாத்துட்டு வருவன்ன்னு வந்தேனுங்க.. அருமையான விமர்சனம்..

Unknown said...

//கார்த்தி said...
நான் முதலாவது தியட்டரில பாத்த ஹிந்திபடம் கஜினி! ராஒண்ணு நல்ல copy வாந்த வீட் பாக்கிற பிளான்!!!//

நன்றி வருகைக்கு பாத்திட்டு சொல்லுங்கோ

Unknown said...

//வணக்கம் பாஸ்.. நம்ம காட்டான் மாமாவின் சுயம்வரத்தில் நீங்க போட்ட கமெண்ட்ஸ் பார்த்து இவருக்கு நமக்கு நிறைய அத்தை பொண்ணுங்க இருக்கிறது எப்படி தெரிந்தது என்று எண்ணியபடி வந்தேன்.. ஹீ ஹீ.....

விமர்சனம் நல்லா இருக்கு பாஸ்... நான் இன்னும் உந்த படத்தை பார்க்க வில்லை ஆகையால் கருத்து சொல்ல முடியவில்லை. பட் உங்க விமர்சனம் சூப்பெர்... //

நன்றி வருகைக்கும்,கருத்துக்கும்

Unknown said...

//அட இஞ்சேயும் துஷியா நானும் ஒரு புது விருந்தாளி வந்திருந்தாரே பாத்துட்டு வருவன்ன்னு வந்தேனுங்க.. அருமையான விமர்சனம்..//

நன்றி வருகைக்கும்,கருத்துக்கும்