இந்த பருவ காலத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக இளம் வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். முக்கியமாக டெஸ்ட் போட்டிகளில் எனவேதான் இப்போதும் டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கின்றன. எந்த இளம் வீரர்கள் சாதித்ருக்கிறார்கள் என்று இங்கு பார்ப்போம்.
1.பற் கம்மின்ஸ்
18 வயதேயான கட்டிளம் காளையான இவர் இந்த தென்னாபிரிக்காவுக்கான தொடரிலேயே T20,ஒருநாள்,டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார். முதலிரண்டு T20 போட்டிகளிலேயே தனது அதிவேகத்தால் தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்து 5 விக்கெட் கைப்பற்றியிருந்தார். தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளிலும் அறிமுகத்தை மேற்கொண்டு 5 விக்கெட் கைப்பற்றியிருந்தார். எனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் அணியை தேர்வு செய்வதில் தேர்வாளர்களுக்கு மிக நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தார். இறுதி நேரத்தில் அணியில் இடம் பெறாமல் போனார் இவர் உடல்நிலை டெஸ்ட் போட்டிகளுக்கு ஒத்துளைக்குமா என்றும் கேள்வி எழுப்பட்டது.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஹாரிஸுக்கு பதிலாக இடம் பெற்றார். முதல் இன்னிங்சிலேயே சிறப்பாக பந்து வீசினார் இவரது லைன்&லெந்த் சிறப்பாக இருந்தது ஆனாலும் ஒரு விக்கெட்டே கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்சில் மிகச்சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்களை சாய்த்த்தது மட்டுமில்லாமல் இறுதி நேரத்தில் துடுப்பாட்டத்திலும் கை கொடுத்து ஆஸி அணியின் வெற்றிக்கு துணை புரிந்து ஆட்டநாயகன் விருது பெற்றார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் உயரமாக இருப்பதால் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பெறுவதும் இலகு, தொடர்ச்சியா140Km/h என்றவேகத்தில் பந்து வீசுவது கூடுதல் பலம். மிக இளம் வயதை கொண்டிருப்பதால் நிறைய சாதிப்பதுக்கு வாய்ப்பு உண்டு எதிர்கால ஆஸி அணியின் பந்துவீச்சு தலமைஆயுதமாக வர்ணிக்க படுகிறார்.
2.வெரோன் பிளண்டர்
இவர் 2007 கால பகுதியில் தென்னாபிரிக்க அணிக்காக T20,ஒருநாள் போட்டிகளில் சகலதுறை ஆட்டக்காரராக அறிமுகத்தை மேற்கொண்டு இருந்தாலும் அந்நேரம் அவ்வளவாக சாதிக்கவில்லை.இருந்தும் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சாதித்து வந்ததால் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்தார். ஆஸிக்கு எதிரான முதல் போட்டியில் டொஸ்டோபேயை பின்னுக்கு தள்ளி விட்டு அணியில் வாய்ப்பு பெற்றார். ஆரம்பத்தில் இவரது உள்ளடக்கம் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.ஆனாலும் இவரது சொந்த மைதானம் என்பதால் இவருக்கு சாதகமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் கைப்பற்றிய இவர் இரண்டாவது இன்னிங்சில் ஆஸி அணியை உருட்டி எடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டேய்ன் போன்று வேகமாக இல்லாவிட்டாலும் நேர்த்தியாக பந்து வீசியதால் விக்கெட் வேட்டை நடாத்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரண்டாவது போட்டியிலும்முறையே 1,5 விக்கெட் கைப்பற்றினார். இப்போது தென்னாபிரிக்காவுக்கு மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரும் கிடைத்து விட்டார் இப்போது அச்சுறுத்தும் வேகப்பந்து கூட்டணியை கொண்டு உள்ளது.
3.ஜூனைட் கான்
21 வயதேயான இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர் தனது டெஸ்ட் அறிமுகத்தை ஜிம்பாப்வே அணிக்கெதிராக மேற்கொண்டிருந்தார் . ஆனால் அந்த போட்டியில் சாதிப்பதுக்கு போதியளவு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அடுத்து நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மத்திய கிழக்கு தட்டை ஆடுகளங்கிலேயே 12 விக்கெட்களை கைப்பற்றினார். இவரது லைன்& லெந்த் சிறப்பாக உள்ளது மேலும் இவரும் தொடர்ச்சியாக வேகமாக பந்து வீசுகிறார். பாகிஸ்தான் மட்டும் எப்படியோ வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் அக்ரம்,ஆமிர்,தன்வீர் வரிசையில் இப்போ இவர். இவரும் மிக இளம் வயதேயே கொண்டிருப்பதால் சாதிக்க நிறைய உண்டு.
.
4.கேர்க் எட்வர்ட்ஸ்
27 வயதான இவர் மேற்கிந்திய அணிக்காக விளையாடுகிறார். அறிமுக போட்டியிலேயே இந்திய அணிக்கெதிராக சதமடித்தவர். இப்போது ஆறு போட்டிகளில் 2சதம் 3 அரைச்சதம் உட்பட 61.88 என்ற மிகச்சிறந்த சராசரியில் 557 ஓட்டங்களை குவித்துள்ளார். மீள கட்டி எழுப்பபட்டு கொண்டிருக்கும் மேற்கிந்திய அணிக்கு முட்டு கொடுக்கும் ஒரு தூணாக இருந்து வருகிறார்.
5.ரவிசந்திரன் அஷ்வின்
25 வயதான இவர் ஒருநாள்,T20 போட்டிகளில் போன வருடம் அறிமுகமாகி முறையே 35,4 விக்கெட்களை வீழ்த்தி தொடர்ச்சியாக சிறப்பான பெறுபேறுகளை வழங்கி டெஸ்ட் அணியின் கதவுகளை தட்டிய வண்ணமே இருந்தார். இப்போதுதான் ஹர்பஜனின் மோசமான போர்ம் காரணமாக அணியில் இடம் கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட அஷ்வின் முதல் போட்டியிலேயே 3,6 விக்கெட்களை முறையே ஒவ்வொரு இன்னிங்சில் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இப்போது நடந்து கொண்டிருக்கும் தொடரில் 15 விக்கெட்களை இதுவரை கைப்பற்றி ஆஸி தொடருக்கு செல்லும் அணியில் தனது இடத்தை உறுதிபடுத்தி இருக்கிறார். ஆனால் இவருக்கு அங்குதான் சவால் காத்திருக்கிறது, இந்திய ஆடுகளங்கள் வழமையாகவே சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பவை ஆஸியில்தான் இவரின் மீதி திறமைகள் தெரியும்.

மேலே குறிப்பிட்டவர்களை தவிர இந்த பருவ காலத்தில் ஆஸி அணிக்காக மிட்செல் மார்ஷ்,இந்திய அணிக்காக வருண் ஆரோன் ஆகியோர் அறிமுகம் புரிந்துள்ளனர். மிட்சல் மார்ஷ் ஆஸி அணியில் எதிர்காலத்தில் சைமோண்ட்ஸ் இடத்தை நிரப்புவார் என எதிர்பாக்கிறேன். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த வாரம் கூட உள்ளூர் போட்டியொன்றில் மிகச்சிறப்பாக பந்து வீசியிருந்தார்.மேலும் இறுதி நேரங்களில் அடித்தாடக்கூடிய துடுப்பாட்ட வீரரும் கூட. அடுத்தவர் ஆரோன் இந்தியாவிலேயே மிக வேகமாக பந்து வீசுபவர் என்ற ரீதிலேயே வந்துள்ளார் அணிக்குள், இவரது உள்ளூர் போட்டிகளின் பெறுபேறுகள் கூறிக்கொள்ளும்படியாக இல்லை. இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அறிமுமாகி இன்று நடைபெறும் மேற்க்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாகி இருக்கிறார். இன்றைய போட்டியில் இவர் அதிகளவான ஷாட் பிட்ச் பந்துகளையே வீசுகிறார், அருமையாகவே நேர்த்தியான பந்துகளை வீசுகிறார் கவாஸ்கார் கூறியது போன்று முதல் நாள் பதட்டமாக இருக்கலாம், மும்பை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இல்லை. இவரையும் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
2 comments:
இடுகைக்கு பாராட்டுகள் தொடர்க ....
//மாலதி said...
இடுகைக்கு பாராட்டுகள் தொடர்க ....//
நன்றி.தொடர்கிறேன்
Post a Comment