1.மார்கழி பிள்ளையார் எடுத்தல்
தைத்திருநாள் அன்று இரவு வேளையில் நெடியகாடு இளைஞர்களால் இந்த மார்கழி பிள்ளையார் எடுக்கும் நிகழ்வு நடாத்தபடுகிறது.இது இற்றைக்கு ஏறத்தாள 70 வருடங்களாக நடைபெற்று வருகிறது.இது நெடியகாடு பிள்ளையார் கோவிலில் ஆரம்பித்து வல்வெட்டித்துறை சந்தி வழியாக நேரே ஆதிவைரவர் கோவில் வரை சென்று பின் அங்கிருந்து வல்வெட்டித்துறை சந்தி வந்து திரும்பி தெணியம்பை வழியாக மருதடி வரை சென்று பின் அங்கிருந்து மீண்டும் சந்தி வந்து நெடியகாடு வழியாக ஊறணி வரை ஊர்வலமாக சென்று ஊறணி தீர்த்தகடலில் பிள்ளையார் கரைத்தலுடன் நிறைவு பெறும்.
ஆரம்ப காலங்களில் சிறிய தேர் ஒன்றை இழுத்து சென்றே பிள்ளையார் சேர்த்து கடலில் சேர்ப்பது வழக்கமாக இருந்துள்ளது. அதன் நினைவாக இப்போதும் இரண்டாவது படத்தில் மேலே உள்ளது போன்று லைட் என்ஜின் சகடையின் முன்புறம் தேர் போன்று அலங்கரிக்கபட்டு இருக்கும்.நடக்கும் இந்த ஊர்வலத்தில் ஒவ்வொரு வருடமும் நெடியகாடு இளைஞர்கள் வித்தியாசம் வித்தியாசமான பிரமாண்ட டிராகன்கள் மாதக்கணக்காக மினக்கெட்டு செய்வார்கள். அத்துடன் மாறுவேடமணிந்த இளைஞர்களும் பறை வாத்தியம் முழங்க ஊர்வலத்தில் செல்வார்கள்.அண்மைய காலங்களில் செய்யபட்ட உருவங்கள் எனது கமேராவில் சிக்கியதை நீங்கள் காணலாம்.
2.பட்ட போட்டி
பட்ட போட்டியும் ஏறத்தாள 50 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலங்களில் வல்வை சனசமூக நிலையத்தால் ரேவடி கடற்கரையிலேயே நடைபெற்று வந்துள்ளது. பின் இப்போது விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்/உதயசூரியன் விளையாட்டு கழகத்தால் உதயசூரியன் உல்லாச(?) கடற்கரையில் நடைபெற்று வருகிறது. 94 பருவகால பகுதிக்கு பிறகுதான் இங்கு மாறியிருக்கவேண்டும் என நினைக்கிறேன் ஏன் எனில் 94இல் பருவகால பகுதியில் நடந்த பட்ட போட்டியின்போதே நான் பட்டம் பார்த்து கொண்டு அப்பிடியே போய் கடலில் விழுந்ததாக சொல்லுவார்கள். இங்கு பல இடங்களில் இருந்தும் வந்து பட்டபோட்டியில் கலந்து கொள்வார்கள், பட்டத்தின் அமைப்பு,நூலின் நீளம் என நடுவர்களால் தெரிவுசெய்யபட்டு பெறுமதிமிக்க பரிசில்கள் ஒவ்வொரு முறையும் வழங்கப்படும்.ஒவ்வொரு முறையும் வித்தியாசம் வித்தியாசமான பட்டங்கள் கலந்து கொள்ளும், என்ன இருந்தும் ஆரம்ப காலங்களில் இருப்பது போன்று இருப்பதில்லை, இம்முறை பொங்கல் பானை,பாறாத்தல்,கொக்கு,சுழலும் இரட்டை பெட்டி, 60 அடி(?) பாம்பு பட்டம்,கிபீர்,டிராகன் உள்ளிட்ட பட்டங்கள் கலந்து கொண்டிருந்த போதிலும் காலத்தின் கோலமோ என்னமோ தெரியவில்லை, சிறுவன் ஒருவனால் பியர் டின் பட்டமும் கொண்டுவரபட்டிருந்தது.