Friday, September 27, 2013

ராஜாராணி - திரைவிமர்சனம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் பெர்ஸ்ட் டே பெர்ஸ்ட் ஷோ இண்டைக்கு காலையில ஈரோஸ் பாமன்கடை தியேட்டர்ல, இயக்குனர்  அட்லீ வேற ப்ரொஃபஷனல் எதிக்ஸ் அதானுங்க தொழில்தந்திரமுன்னு சொல்லி ஆர்யா-நயந்தாரா கலியாணம் எண்டு வேற போஸ்டர் அடிச்சு ஒட்டியிருந்தார் எல்லோ இண்டைக்கு கிளாஸ் இல்லாததால என்னதான்னு பார்ப்பம் எண்டு போயிருந்தன்.
                                     இண்டைக்கு வெள்ளிக்கிழமை வேலை நாள் எண்டாலும் மோர்னிங் ஷோ 10.30க்கு தியேட்டர் கிட்ட முட்ட நிரம்பிதான் இருந்துச்சு. இந்த தியேட்டர் காரனுங்க டிக்கெட்ல 230 ரூபான்னுதான் அடிச்சிருக்கிறாங்க அப்புறம் ஏன் 300 ரூபா வாங்கிறாங்க? சரி அதை விடுவம்.வழமையா முதல் நாள் முதல் காட்சிக்கு பசங்க கூட்டமாதான் இருக்கும் பொன்னுகளை காண்பது அரிது, ஆனா ஜெயம் ரவிக்கு அப்புறம் ஆர்யாக்குதான் நிறைய பெண் ரசிகைகள் போல அவங்களும் வந்திருந்தாங்க. அப்புறம் பசங்களை பற்றி சொல்லவும்வேணுமா இந்த நேர கனவுக்கன்னி நஸ்ரியா நஸீம் இருக்கானுக,அப்புறம் என்னதான் சிம்பு,பிரபுதேவா எண்டு அடி வாங்கியிருந்தாலும்  அடுத்த ரௌண்டுக்கு தயாராகி கட்டுகுலையாமல் இருக்கிற கட்டழகி 9தாரா மற்றும் இன்னொரு மீள்வருகை ஜெய் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது ஏர் முருகதாஸ் இணைத்தயாரிப்பில் அட்லீ எழுதி இயக்கியிருந்தார்.
                                                                 படம் ரீல்ஸ் ஓட தொடங்கியது நட்சத்திர நாயகனுக்கோ,கனவுக்கன்னிக்கோ கிடைக்காத கைதட்டலும் ஆரவாரமும் இப்போ எல்லா படத்தில் ஆரம்பத்தில் வரும் டாக்டர் பிரசாத்துக்கும்,குர்கா முகேஷுக்கும் கிடைக்கிறது, இந்த காட்சிப்படுத்தல்களால ஏதாவது பிரயோசனம் இருக்கா? வெறும் கேலி கூத்தாக பார்க்கபடுகிற இதையெல்லாம் ஏன் இன்னமும் ஒவ்வொரு படத்தின் ஆரம்பத்திலும் சேர்க்கிறார்கள். நிஜ படம் சேர்ச்இல் ஜான்(ஆர்யா),ரெஜினா(நயன்தாரா) திருமண காட்சியுடன் ஆரம்பமாகிறது, ஃபாதர் ஜானை பார்த்து ரெஜினாவை திருமணம் செய்ய சம்மதமா எண்டு கேட்பார் ஆர்யாவும் வேண்டாவெறுப்பாக சொல்லுவார் ஆம் எண்டு இதையே நயந்தாரவையும் கேட்குபோது அவர் தடுமாற்றமாக சூரியா என்று சொல்லவும் உடனே அவர் அப்பா சத்தியராஜுக்கு நெஞ்சு வலி இப்பிடி தடங்கல்களுடன் ஒரு மாதிரி சமூகத்துக்கு கலியாணம் என்ற காட்சி முடிகிறது.
                       ஆர்யாவும்,நயந்தாராவும் ஒரே வீட்டில் ஒரே கட்டிலில் படுக்கிறார்கள் கணவன்,மனைவி என்ற பெயருக்கு மட்டும், இருவருக்கும் சுத்தமாகவே ஒருவரையொருவர் பிடிக்காது. இதில் ஆர்யா தினம் தினம் தண்ணி அடித்து விட்டு இரவு லேட்டா வந்து நயன்தாரா அருகிலேயே படுக்கிறார், இடையில டாஸ்மாக்குல ஆர்யாவும், நண்பர் சந்தானமும் இருக்கும் போது ஒரு பாட்டு, அதென்ன இப்போ வரும் படங்களில எல்லாம் டாஸ்மாக்குல ஒரு பாட்டு வைக்கோணும் எண்டது எழுதப்படாத விதியோ? ஒருநாள் டி‌வி சத்தம் அதிகமாக போட்டு எரிச்சலூடுகிறார் ஆர்யா, நயந்தாராவுக்கு மன அழுத்தம் அதிகமாகி  வலிப்பு போன்று ஆஸ்பத்திரியில்  மோசமான நிலையில் அனுமதிக்கபடுகிறார்.அங்கே டாக்டர் கேட்கும்போது நயன்தாராவின் பெயர்,வயது கூட தெரியாத கணவனாம், இதில் பரிதாபப்பட்டு ஆர்யா நயந்தாராவுடன் ஆறுதலாக கதைக்கும்போதுதான் நயனுக்கு முதலும் இப்பிடி நடந்ததா எனும்போதுதான்  ரெஜினாவின் முன்னைய வாழ்க்கை விரிகிறது அது என்ன பிறகு ஏன் திருமணம் முடித்தார் என்பதை திரையில் கண்டுகொள்ளுங்கள்.
                                            பிறகு கதை இன்னைய நிலைக்கு வந்து நயன்தாரா குணமடைந்து வர நெருக்கமாக நினைக்கும் ஆர்யாவை எல்லோர் முன்னிலையிலும் அவமானபடுத்துகிறார், இதனால் கலங்கி போகின்றார் ஆர்யா இந்நிலையில்இதனை பார்த்து சந்தானம் நயன்தாராவிடம் ஆர்யாவின் முன்னைய வாழ்கையை பற்றி கூறுகிறார் அதையும் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், இதை கேட்டு நயன்தாரா மனம் மாறி வரும்போது ஆர்யா பொரிந்து தள்ளுகிறார். இப்படியே மாறி மாறி போய்க்கொண்டிருக்கிறது இறுதியில் என்ன நடந்தது டிவிஸ்ட் என்பதையும் திரையிலையே கண்டுகொள்ளுங்கள். படத்தில் சத்யன்,நான் கடவுள் ராஜேந்திரன் என்று நிறையபட்டாளமே நடித்திருந்தது ஒவ்வொருதரும் கதையின் அவ்அப் பகுதிகளில் கச்சிதமாக பொருந்தி போனார்கள்.


                                                                                                                                       படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ் பாடல்கள் வந்த நாட்கள் முதலே கேட்ககூடியதாகவே இருந்தது, காட்சியமைப்புகளுடன் பொருந்தி போகின்றது. வசனம் அட்லீ ரசிக்க கூடியதாக அதேநேரம் அர்த்தம் உள்ளதாக இருக்கின்றது. படத்தின் டிரைலரே பிடித்திருந்தது அதில் பார்த்ததும் முதல் கலியாணம் பின் அதுக்கு பின்னரான காட்சிகள் போன்று இருந்தது ஆனால் படத்தில்திருமணத்துக்கு முன்னரான வாழ்க்கையை சிறப்பாகவே இணைத்திருந்தார். படத்தின் இறுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் என்று முடித்திருந்தார் அட்லீ, உண்மையும் பெரும்பாலும் அதாகவே உள்ளது சிறு சிறு சண்டைகள், புரிந்துணர்வு இல்லாமை உடனே தீர்வு டைவோஸ். இருந்தாலும் அட்லீ ஜெயின் பாத்திரமூடாக சொன்ன விடயத்துடன் நான் உடன்படவில்லை அப்பா ஒத்துக்க மாட்டார் என்றால் இது லவ் பண்ணும்போது எங்க போனது? எது கண்ணை மறைச்சது? பிரச்சினை என்று வந்தவுடன் அந்தரத்தில் விட்டுடு போறது இது பசங்களுக்கு மட்டுமல்ல முக்கியமாக பெரும்பாலான பொன்னுகளுக்கும்தான் ஆரம்பதில் காதல் அதை தவிர வேறொன்றுமில்லை அப்புறம் கொஞ்ச காலத்துக்கு பிறகு அறிவுக்கண் திறந்து அம்மா ஆட்டுக்குட்டி அண்ணா, இதெல்லாம் முதல் எங்க போனது? இதுக்கு அந்த பொடியன் நம்பி ஏமாந்து சிக்கி சீரழிஞ்சு நாசமாகி நடுரோட்டில அவண்ட வீட்டையும் இல்லாம நிப்பான்.
                  மொத்தத்தில்  வருத்தபடா வாலிபர் சங்கம் போல காமெடி எண்டு சொல்லி காட்டுற சூர மொக்கைகளுக்குள்ள நிறைய நாளைக்கு அப்புறம் ஒரு படம் பார்த்த திருப்தி.கீழ இருக்கிறமாதிரி காதல் தோல்விக்கு அப்புறம் இருக்கிற வாழ்கையையும்,காதலையும் நானும் விரைவில பார்ப்பனோ? :P

                                                   There is life after love failure.
                                                   There is love after love failure.
     

Tuesday, September 24, 2013

எனது பார்வையில் வடக்கு மாகாணசபை தேர்தல்

இலங்கையின் தமிழர்கள் வாழும் வட மாகாணத்தில் 30 வருட ஆயுத போராட்டம் முடிவுற்று 4 வருடங்களின் பின் ஏகப்பட்ட சர்வதேச அழுத்தங்களால் வரலாற்றில் முதல் தடவையாக மாகாண சபை தேர்தல் அறிவிக்கபட்டு கடந்த செப்டெம்பர் மாதம் 21ம் திகதி தேர்தல் நடைபெற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறுதிப்பெரும்பான்மையுடன் மாகாணசபையை கைபற்றியிருக்கிறது.
                                             இம்முறை தேர்தல் அறிவிக்கபட்டதில் இருந்து கள நிலவரங்கள் உன்னிப்பாகவே அனைத்து தரப்புகளாலும் அவதானிக்கபட்டு கொண்டிருந்தது. விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் அனைத்து தமிழ் கட்சிகளையும் அழைத்து கூட்டமைப்பை உருவாக்கினர். எனவே வேறு தெரிவுகளற்ற ஒரே தெரிவாக அன்று தொடக்கம் இன்று வரை இருந்து வருகிறது. இம்முறை பெறப்பட்ட வெற்றிக்கும் அவர்களின் நிழல்தான் காரணம்.
                    ஆரம்ப காலம் தொட்டே இந்த கூட்டமைப்புக்குள் உட் கட்சி பூசல் நிறையவே இருந்தாலும் அவர்களின் காலத்தில் எல்லாரும் அடக்கியே வாசித்தனர். இப்போது எல்லாம் முடிந்து விட்ட நிலையில் வேட்பாளர் நியமனத்தில் கட்சி பிளவுபடும் நிலைக்கு கிட்ட சென்றது உட்கட்சி பூசல். பின் ஒருமாதிரியாக மாவை சேனாதிராஜா விட்டு கொடுத்து கட்சி நலனுக்காக செயற்றபட விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக வந்தார்.மேல் மட்டங்கள் இப்பிடியே புகைந்து கொண்டிருந்தாலும் கீழ் மட்டங்களில் இது இன்னும் மோசமாக இருந்தது. வல்வெட்டித்துறையில் பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது, கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவர் அங்கு இல்லை, இதுவென்றாலும் பரவாயில்லை இன்னும் கீழ்த்தரமாக நள்ளிரவு வேளைகளில் சுவரொட்டி ஒட்டி பொதுமக்களிடம் கையும் களவுமாக பிடிபட்ட நிலை. இம்முறை எல்லா பேதமைகளையும் மறந்து ஒன்று திரண்டு தமிழரின் ஒற்றுமையை காட்ட வேண்டும் என்ற மக்களை பார்த்து திருந்துங்கடா, அடுத்து கூட்டமைப்பின் உயர்பீடங்களும் கண்டும் காணாமல் இருக்காது கடுமையான ஒழுகாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இனி வரும் தேர்தல்களில் இந்த தனிநபர் விருப்பு வெறுப்புகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

அடுத்து இம்முறை தேர்தலின் போது அவதானித்தது இணையத்தளங்கள், முக்கியமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தேர்தல் குறித்து ஆழமான கருத்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன மிகவும் வரவேற்கபட வேண்டிய விடயம், தாம் வாக்களிக்க போகின்ற அரசியல்வாதிகளை பற்றி விவாதிக்கதொடங்கிவிட்டார்கள், இது அரசியல்வாதிகளுக்கு ஒரு அலாரம்.இனியும் சும்மா போய் வாக்கு மட்டும் அளித்துவிட்டு வரமாட்டார்கள் மக்கள். என்ன செய்திருக்காய் என்று கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள்,  மேலும் இளைய தலைமுறை வேட்பாளர்கள் களத்தில் நின்றதும் மேலும் முன்னேற்றகரமான விடயம், எனது அவா என்னவென்றால் மக்கள் அரசியல்வாதிகள் பற்றி விவாதிப்பது எல்லாம் தொடர வேண்டும் தேர்தலோடு மட்டும் நின்று விடக்கூடாது, அப்போதுதான் உண்மையானவர்கள் இனங்காணப்படுவார்கள்.
                                       

                                                                                                     அடுத்து இம்முறை யாரும் எதிர்பாராத வகையில் 62 சதவிகித வாக்களிப்பு பதிவாகியிருந்தது இதுவே பாரிய வெற்றியாகும் ஏன் நான் சொல்லுகின்றேன் என்று முன்னைய தேர்தல்களில் தமிழர் பகுதிகளில் எவ்வளவு வாக்களிப்பு வீதம் பதிவாகியிருந்தது என்பதை பார்த்தால் புரியும். இது ஒரு வகையில் தேர்தலில் முறைகேடுகள்  செய்யாமல் வெற்றிகரமாக தமிழர் பிரதேசங்களில் தேர்தலை நடாத்தி காட்டியுள்ளோம் என்று அரசாங்கம் பரப்புரை செய்யலாம்.
                                                                                                                 
தமிழ் கூட்டமைப்புதான் வெற்றி பெறும் என்று ஏலவே தெரிந்திருந்தாலும் இந்த வெற்றி எதிர்பார்க்காத அதிரடி வெற்றி 36 ஆசனங்களில் 30 ஆசனங்களை பெறுவது சாதாரணமான ஒன்றல்ல, இந்த வெற்றி நிறைய விடயங்களை அரசாங்கத்துக்கு சொல்லி போயிருக்கின்றது வெறும் கார்ப்பெட் வீதிகளாலும்,புகையிரததாலும் மக்கள் மனதை வென்றுவிடமுடியாது, எதையும் மறக்கவில்லை அனைத்தையும் உள்ளேயே வைத்திருக்கின்றனர் சந்தர்ப்பம் வந்தபோது வாக்கு என்னும் சாட்டையால் ஓங்கி அடித்துள்ளனர். பார்ப்போம் இந்த தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் அணுகுமுறையில் மாற்றங்களை கொண்டுவருமா என்று?

                                                                                   அடுத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய ஆணை பெரியதொன்றாகும், முன்னரை போன்று சும்மா இருந்து கொண்டு காலத்தை கடத்த முடியாது, ஆக்கபூர்வமான முறையில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். முக்கியமாக காணி அதிகாரங்கள் பெற்றுகொள்ளபடவேண்டும் இல்லையெனில் அடுத்த தேர்தலின்போது குடியேற்ற என்ற பெயரில் வருகின்ற வாக்குகளால் ஆப்பு காத்திருக்கின்றது, மற்றது மக்கள் நடமாட்டமுள்ள இடங்களில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்ற படவேண்டும்.முதலைமச்சர் விக்கினேஸ்வரன் ஆரம்பமே அதிரடியாக புத்திசாலியாக அடித்து ஆடியிருக்கின்றார் பார்ப்போம் பொறுத்திருந்து பார்ப்போம் தனது தொடர்ந்து வரும் நடவடிக்கைகளால் இன்னும் தன்னை நிரூபிக்கின்றாரா என்று?