Thursday, May 26, 2011
கண்டேன்-திரைவிமர்சனம்
Wednesday, May 25, 2011
கல்லூரிக் காலங்கள்-2
கல்லூரிக் காலங்கள்-1
நான் மிகவும் விரும்பும் மீண்டும் வாழ ஆசைப்படும் பருவம் பள்ளிப்பருவம் ஆகும். அதிலும் எத்தனையோ வகையான அனுபவங்கள் சாகசங்கள் என பலதும் உண்டு. அனைத்தையும் பதிவில் இடலாமென்று நினைக்கின்றேன். இந்தப் பதிவில் கல்லூரி விளையாட்டுப்போட்டி பருவத்தில் நடத்தும் கலாட்டா பற்றி சொல்லுகிறேன்.
நான் ஆரம்பக்கல்வி கற்றது திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் தரம் 3 வரை மட்டும் பின் தரம் 3, 2nd termஇல் இருந்து உயர் தரம் வரை கல்வி கற்றது உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில்தான்.
எங்களது பாடசாலையில் அதிகமாக தை மாதம் கடைசி சனிக்கிழமை விளையாட்டுப்போட்டி நடைபெறும் எனவே பாடசாலை ஆரம்பித்து முதல் வாரமே எங்களுக்கு பயிற்சிகள் தொடங்கிவிடும். பிறகு என்ன எங்களுக்கு அந்த மாதம் முழுவதும் கொண்டாட்டம்தான். முதல் வாரம் முதல் இரு பாட வேளைகளிலும் பயிற்சி நடைபெறும் அடுத்த வாரம் நான்கு பாட வேளை அதற்கும் அடுத்த வாரம் முழு நேரமும் பயிற்சி நடைபெறும்.
பயிற்சி தொடங்கிவிட்டால் மற்ற வகுப்புக்கள் எல்லாம் வரவு குறைவாக இருக்கும். ஆனால் எங்கள் வகுப்பில் முழு வரவு (மற்ற நாட்களிலும் எங்கள் வகுப்பு நிறைந்தே இருக்கும் ஹர்த்தால் அடிக்கடி நடக்கும் பாடசாலயில் மற்ற வகுப்பு எல்லாம் வெற்றிடமாக இருக்கும் ஆனால் எங்கட வகுப்பு முற்று முழுதாகவே இருக்கும் ஏன் என்றால் மேசையை உடைத்து கிரிக்கெட் அடி) அதற்காக எல்லாரும் ஏதோ விளையாட்டில் பங்குபற்றுவது என
நினைக்க வேண்டாம் விளயாடில் பங்கு பற்றும்நண்பர்கள் கஜன்,திப்ஷன்னா,தலசஜீவன்,நிதர்ஷன்,சமராஜன்,குலராஜ்,ராஜசீலன் போன்றோர் எங்களது விளையாட்டு மைதானம் பள்ளியில் இருந்து சற்று தொலைவிலேயே அமைந்துள்ளது. இரண்டு மூன்று பாதையால் செல்லலாம் இப்ப ஒரு பாதை மட்டுமே ஏனெனில் நாங்க பாவித்த வழி எங்களுக்கு தெரியும்தானே நாங்கள் மாணவர் தலைவர்களாக வந்த பிறகு மற்ற பாதை எல்லாவற்றுக்கும் மூடு விழா. பயிற்சி தொடங்கி முதல் ஒன்று இரண்டு
நாள் அனைவரும் அவர் அவர் இல்லங்களில் பிக்னல்,நியூட்டன்,பிறவுண்,செல்லையாவில் இருப்போம்.
அதன் பிறகு எங்கள் வகுப்பு மாணவர்களை அடுத்த வாரம் முதல் இடை இடையே காணக்கிடைக்காது. திட்டம் தீட்டப்பட்டு எல்லாரும் எங்களின் பிக்னல் இல்லத்துக்கு அருக்காமையில் வந்து சேர்ந்து இருவர் மூவர் அணிகளாக பிரிந்து தண்ணீர் குடிக்க போவதகா சொல்லி விட்டு அனைவரும் துவாளி பிள்ளையார் கோவிலுக்கு சென்று சேர்ந்து விடுவோம் பின்னர் ஏற்கனவே திட்டமிட்டபடி பந்து,துடுப்பு மட்டை எல்லாம் அருகில் உள்ள வீட்டில் எடுத்து வந்து அந்த நாள் முழுவதும் கிரிக்கெட் தான் இன்றும் அது போன்ற நாட்கள் எப்போது வரும் என்று ஏங்குவது உண்டு.
சில நாட்கள் ஆசிரியர்களிடம் பிடிபட்ட அனுபவமும் உண்டு மைதானத்தில் பயிற்சி முடிந்ததும் மணி அடிக்கப்படும் ஆனால் நாங்க போடுற சத்ததுக்கு இதெல்லாம் எங்க கேட்கிறது கைக்கடிகாரம் கட்டுவதுக்கும் தடை மற்ற மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்கு போய்விடுவார்கள் எங்கள் வகுப்பு மட்டும் வெட்ட வெளியாக இருக்கும் பின் நாங்கள் விளையாடி முடிந்து வகுப்புக்கு போகும்போது பிரதி அதிபர்,வகுப்பாசிரியர், எங்களது தொகுதிக்கு பொறுப்பான ஆசிரியர் பார்துக்கொண்டிருப்பார்கள் ஆனால் எங்கட வகுப்புதான் ஒற்றுமை ஆச்சே எல்லாருக்கும் சேர்த்து தான் தண்டனை. வகுப்பாசிரியர் வழமை போல அறிவுரை வழங்குவார் அது அந்த மாதம் முடியும் மட்டும் எங்களுக்கு கேட்காது எங்களின் வகுப்பு ஒற்றுமை பற்றி பாடசாலை முடிந்த பின் ஒரு நாள் அதிபர் சொல்லி இருந்தார் கடைசி வரை நான் எவ்வளவோ கேட்டும் சொல்லவில்லை என்று ஆனால் எனக்கு உயர்தரத்தில் மாணவிகள் வந்த பிறகு வகுப்பு ஒற்றுமை முதல் இருந்தது போன்று இல்லை என்றே நினைக்க தோன்றுகிறது. இது பற்றி இன்னொரு பதிவில் கூறுகிறேன்.
சாதாரண தரம் , உயர்தரம் வந்த பிறகு எங்களுக்கு துவாளிப்பிள்ளையார் கோவிலுக்கு போவது இலக்குவாகியது ஆசிரியர்களிடம் இந்த பக்கம் சில மாணவர்கள் சென்றனர் கூட்டிக்கொண்டு வருகிறோம் என்று அங்கு சென்று விடுவோம் ஆனால் உயர்தரம் வந்த பிறகு நான் உட்பட எங்கள் வகுப்பில் பல பேர் இல்லத்தலைவர், விளையாட்டு தலைவர் செயலாளர்களாக இருந்தோம். அந்த நேரத்தில் எங்களது அந்த இடம் பெரிதும் உதவியது அங்குதான் கூட்டி வந்து ஈட்டி,தட்டு,குண்டு போன்ற விளையாட்டுகளுக்கு தெரிவு வைத்து எடுப்போம். பின் வேறு இல்லம் என்று பாராது அந்த போட்டிகளில் திறமையான எங்களது வகுப்பு மாணவர்களால் பயிற்சி வழங்குவர். பின் அணிநடை பயிற்சி அவர் அவர் இல்லங்களுக்கு வழங்குவோம்.
அப்படி இருந்தும் எங்களது சந்தோஷத்தை விட்டுக்கொடுக்க முடியாதுதானே ஒரு குறிப்பிட நேரத்துக்கு பிறகு பயிற்சி வந்தோரை அனுப்பிவிட்டு மீண்டும் எங்கள் கொண்டாடம் கிரிக்கெட்,அரட்டை உயர்தரத்தில் எங்கள் பயணம் நீண்டது துவாளி பிள்ளையாரில் இருந்து அம்மன் கோவில் வரை சில நேரம் வல்லை வரை அதிலும் உயர்தரம் வந்த பின்னும் கீஸ் கொடுத்து விளையாடினோம். பிள்ளையார் கோவில் தேர்முட்டியோ அம்மன் கோவில் தேர்முட்டியோ தான் கீஸ் பெட்டி 5 கிலோ மீட்டர் வரை ஓடுவோம். அந்த நேரம் நெல் வயல் வாய்க்கால் ஊடாகாதான் ஓட வேண்டும் வயலுக்குள் விளுந்தால் சரி சேட் முழுவதும் சேறு தான் பின் சேர்டை கழற்றி தோய்த்து போட்டு விட்டு பெனியனுடன் மீண்டும் விளையாட்டு அந்த காலங்கள் மீண்டும் எப்போது வரும் என்று ஏங்கி…..
அந்த நேரத்தில் எங்களிடம் செல்பேசியோ டிஜிட்டல் கமராவோ இல்லை. எங்களின் நண்பர் குழாமிடம் ஒரு MP4 ப்ளேயர் இருந்தது அதில் படங்கள் எடுத்திருந்தோம். நண்பர்களே உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
Sunday, May 8, 2011
எங்கேயும் காதல்
Saturday, May 7, 2011
இங்கிலாந்தும் கேப்டன்களும்
கடந்த வாரம் இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஒரு நாள் போட்டிகளுக்கு குக் கேப்டனாகவும் 20-20 போட்டிகளுக்கு பிராட் கேப்டனாகவும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஸ்ராஸ் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.