கடந்த வாரம் இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஒரு நாள் போட்டிகளுக்கு குக் கேப்டனாகவும் 20-20 போட்டிகளுக்கு பிராட் கேப்டனாகவும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஸ்ராஸ் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் குக் பங்களாதேஷ் போட்டிகளில் கேப்டனாக செயற்பட்ட அனுபவம் உண்டு.பிராடுக்கு இதுதான் முதல் சர்வதேச கேப்டனாக அறிமுகம். இதற்கு விளையாட்டு விமர்சகர்களால் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அதிலும் பிராடுக்கும் நடுவர்களுக்குமான உறவு பற்றி கேள்வி எழுப்பபட்டுள்ளது? பிரோட்டின் நடவடிக்கைகள் மைதானத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. எனவே இவர் எப்படி அணியை கையாளப்போகிறார்? மேலும் பிராட் நெருக்கடியான நேரங்களில் துல்லியமாக பந்து வீசுபவர் அல்ல .
அடுத்து குக் இவர் இதுவரை 26 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 33 என்ற சராசரியில் 858 ஓட்டங்களை குவித்துளார். இவரின் Strike rate 71.38 ஒரே ஒரு சதம் இந்தியாவுக்கு எதிராக 2007இல் அடித்துள்ளார். எனவே ஆரம்ப துடுப்பாட்டவீரராக அதிரடியாக இவரால் விளையாடமுடியுமா என்ற கேள்வி முன்வைக்கபட்டுள்ளது. மேலும் இவரது ஆட்ட நுணுக்கங்கள் பற்றியும் கேள்வி முன்வைக்கபட்டுள்ளது. இவரது Strokes Playஇன் Power பற்றி கேள்வி முன்வைக்கபட்டுள்ளது.
மொத்தில் அடுத்து வரும் இலங்கைக்கு எதிரான தொடர்தான் இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். இலங்கை கிரிக்கெட் சபை போன்று விரைவில் வீட்டை போக வேண்டியவர்களுக்கெல்லாம்கேப்டன் பதவி கொடுக்காமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கொல்லிங்வூட்,பிட்டர்சன் போன்ற மூத்த வீரர்களுக்கு கேப்டன் பத்வி வழங்காமல் செய்ற்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.
3 comments:
வாழ்த்துகள் தம்பி..வருக வருக....இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள் எழுதவும்
நன்றி அண்ணாக்கள்.
Post a Comment