Sunday, May 8, 2011

எங்கேயும் காதல்

போக்கிரி,வில்லு ஆகிய படங்களுக்கு பிறகு பிரபுதேவாவின் மூன்றாவது தமிழ்படம்.இந்தியாவில் 11 மாதம் Sincere ஆக வர்த்தகம் செய்து 1 மாதம் பாரிசில் விடுமுறையைக் களிக்கும் உல்லாச பேர்வழி ஜெயம் ரவி(கமல்) பிரான்சில் வாழும் இந்திய கலாசார பொண்ணு(?) என அறிமுகப்படுத்தப்படும் ஹன்ஸிகா(கயல்விழி/லொலிட்டா) இருவருக்கும் இடையேயான காதல்தான் திரைக்கதை இருவரையும் சுத்தியே திரைக்கதை பின்னப்பட்டுளது.


அறிமுக காட்சியில் பிரபுதேவா அசத்தலாக எங்கேயும் காதல் பாட்டுக்கு ஆட்டம்போடுகிறார். பின்பு பிரகாஷ்ராஜ் வரும்போது நீங்க இந்த படத்தில இல்லைனு சொல்லும்போது தியேட்டரில் கைதட்டல் பறக்கின்றது.மேலும் படத்தில் நகைச்சுவைக்காக வரும் ராஜூசுந்தரம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். அதிலும் உடற்பயிற்சி கூடத்தில் வரும் நகைச்சுவை கைதட்டல் வாங்குகிறது.





நாயகன் ஜெயம் ரவி நடன அசைவுகள் சிறப்பாக உள்ளன நடிகர் நடிக்க வேண்டிய இடங்களில் நடித்துள்ளார் சரியான தேர்வு. நாயகி நான் இணையத்தளத்தில் வாசித்தது போன்று மந்த்ரா பேடி போன்று ஹோர்மோன் ஊசி போட்டுதான் வளந்திற்பாரோ ?நங்கை பாட்டில் சேலையில் அழகாக இருக்கிறார். மற்ற இடங்களில் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை உண்மையிலேயே 16 வயது குழந்தையோ? கவர்ச்சியில் மட்டும் தாராளம் காட்டுகிறார். போகிற போக்கை பார்த்தால் நமீதாவை தூக்கி விளுங்கி விடுவார் போல.



படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்றாலும் ஆரம்ப பாடலான எங்கேயும் காதல் மற்றும் நங்கை பாடல் மட்டுமே படமாக்கப்பட்ட விதம் கவர்கிறது. அதிலும் நங்கை பாடலின் நடன ஆசைவுகள் கண் கவர்கிறது. மேலும் பாடல் தொகுப்பில் இடம்பெறாமல் surprice ஆக வைக்கப்பட்டிருந்த குளு குளு வெண்பனி போல பாடல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அந்த பாடலை எழுதியது ஹரிஸாம் இனி மற்ற கவிஞர்களிற்கு போட்டியாக வருவார் போல பாடலின் வரிகளும் என்னை கவர்ந்துள்ளது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவுதான் படத்துக்கு பெரிய பலம் மனிதர் காதல் தலைநகரத்தை இன்னும் அழகாக காட்டியுள்ளார்.





முதல் பகுதியில் திரைக்கதையில் உள்ள தொய்வு இரண்டாம் பகுதி சிறப்பாக இருந்தாலும் மொத்ததில் படம் சரசரியாகவே உள்ளது முதல் நாள் முதற் காட்சி வெற்றியின் அனுசரணயில் இலவசமாக பார்த்தோம்.

No comments: