Thursday, May 26, 2011

கண்டேன்-திரைவிமர்சனம்




தமிழ் சினிமா என்றால் 6சண்டை 5 பாட்டு என்ற டிரெண்டில் இருந்து மாறிவருகிறது. நல்ல அறிகுறி கடைசியாக பார்த்த இரண்டு படங்களும் காதல் படங்கள். முதலாவது செமி முடிந்து விடுமுறையில் இருப்பதால் வார நாளிலேயே படம் பார்க்க சென்று இருந்தோம்.





அறிமுக இயக்குனர் A.C முகில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக தொடங்கிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் உள்ள சில தொய்வாலும் லாஜிக் மீறல்களாலும் சராசரியாகவே படம் இருக்கிறது . நாயகன் சாந்தனு அழகான பெண்களை மட்டுமே சிந்திப்பார் என்றவாறு அறிமுகம் ஆகி இருக்கிறார் . நாயகி ரேஷ்மி கௌதம் ஓரளவு அழகாக இருக்கிறார். ஆனால் எனக்கு சாந்தனுவின் கண் வைத்தியராக வரும் அந்த பெண்ணும் மேலும் இறுதியில் சந்தானம் கரம் பிடிக்கும் அந்த விமானப்பணிப்பெண்ணும் நிறையவே அழகாக இருக்கிறார்கள். முக்கியமான இன்னொரு நடிகரை சொல்ல மறந்து விட்டேன். வேறு யாரும் இல்ல சந்தானம் தான் இவர்தான் படாதுக்கு பெரிய பலம் இனி வரும் படங்கள் சந்தானதுகாவே ஓடும் என்ற நிலைதான் எதிர்காலத்தில்.





ஆரம்பத்தில் சாந்தனுவுக்கு அவருடய தாத்தா விஜயகுமார் ஊரில் பொண்ணு பார்த்து கல்யாண ஏற்பாடு நடக்கிறது. இறுதியில் சாந்தனு தான் சென்னயில் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூற 30 நாளுக்குள் காதலியை கூட்டி வருமாறும் இல்லையெனில் தான் பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணுமாறு கூறுகிறார் விஜயகுமார். சாந்தனு சென்னை வந்து வழமையாக நடக்கும் பார்த்த உடனேயே நாயகி மீது காதல் வயப்படுகிறார் காதலியை கவருவதற்காக குருடன் என்று பொய் சொல்லி காதலிக்கிறார். பதிவு திருமணம் வரை போகும்போது உண்மை தெரிந்து விடுகிறது. பின் நாயகியின் காலில் விழுந்து மீண்டும் ஒற்றுமை ஆகிவிடுகின்றனர்(ஒரு சந்தேகம் பொன்னுகங்க கால்ல விழுந்தா எல்லாம் சரி ஆயிடுமா) பின் நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த பிறகு நடந்த ஒரு விபத்தில் நிஜமாகவே கண் தெரியாமல் போய் விடுகிறது. இறுதியி
ல் என்ன நடந்தது என்று வெண் திரையில் பார்த்து தெரிந்த்து கொள்ளுங்கள்.





இசை விஜய் எபநேசர் நல்ல எதிர்காலம் உண்டு. ஆரம்பத்திலேயே கலக்கியிருக்கிறார். அடுத்த தலை முறையில் ஜி.வி.பிரகாஷ்,தமன்.s போன்றோருக்கு போட்டி உண்டு. பாடல்கள் சிறப்பாக உள்ளன. (அதிலும் அந்த நர்மதா பாடல் என் நண்பன் ஒருவருக்கு நல்ல உதவி செய்கிறது) மேலும் சாந்தனு நல்லா ஆடுகிறார் என்றாலும் சக்கரக்கட்டி டாக்ஸி டாக்ஸி தான் கலக்கல். ஒளிப்பதிவு பாடல்கள் படமாக்கி இருக்கும் விதம் நன்றாக இருக்கிறது மொத்த்த்தில் படம் பார்க்கலாம்

2 comments:

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

Unknown said...

உலக சினிமா ரசிகன்
வந்தேன் சகோதரா